“நான் மதத்தைப்
பற்றிக்கொண்டேன்.” நண்பர் பதிலளித்தார்.
“நரகம், சாத்தான், பாவங்கள், சபலங்கள்” என்று ஏதேதோ
பேசினார். “உண்மையை ஒத்துக்கொள். இறைவனிடம் சரணடைந்துவிடு. உனது வாழ்வு
திரும்பவும் கிடைக்கும்.” நண்பர் நம்பிக்கையூட்டினார்.
போனவருடம் மதுவுக்கு அடிமை. இப்பொழுது ஆண்டவனுக்கு அடிமை.
கிறுக்கன் உளறுகிறான் என்று வில்சன் நினைத்துக்கொண்டார். நண்பர் சென்றதும்
குடித்து முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றார் வில்சன்.
ஒரு மாதத்துக்குப்பிறகு 1934-டிசம்பரில், மதுப்புழங்கிகளின்
மறுவாழ்வுக்கான மருத்துவரை வில்சன் சந்தித்தார். அவர் கொடுத்த மருந்துகள்
வில்சனுக்கு மாய உலகத்தைக் காட்டியது. உணர்வு வருவதும் இழப்பதுமான நிலையில்
இருந்தார்.மருத்துவரின் மருந்துகளால் மதுவை நிறுத்த முயன்ற வில்சன் பயங்கரமான பிரமை பிடித்தவராக மருண்டு
கிடந்தார்.
அன்றிலிருந்து 36 வருடங்கள் கழித்து 1971-ல் இறக்கும்வரை
வில்சன் மதுவை நாடியதே இல்லை. தன் வாழ்நாள் முழுவதையும் “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்”
நிறுவனத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். அதனைத் தோற்றுவித்து மதுப்பழக்கத்துக்கு
அடிமையானவர்களைக் காப்பாற்ற தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டிருக்கிறார்.
வருடத்துக்கு 20 லட்சம் மக்கள் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸை
நாடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களை ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்
மதுவிலிருந்து காத்திருக்கிறது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்- ஆல் அனைவரையும்
குணப்படுத்தமுடியவில்லை. மேலும் பங்கேற்பவர்களின் விபரங்கள் ரகசியமாக
வைக்கப்பட்டுள்ளதால், அதன் வெற்றியை சரியாக தீர்மானம் செய்து கூறுவதும் கடினமாக
உள்ளது. மதுப்பழக்கத்தைத் தவிர போதை, கடன், உடல்பருமன், புகைப்பிடித்தல்,
வீடியோகேம் அடிக்ஷன், என்று பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்
தோள் கொடுக்கிறது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-யின் வழிமுறைகள், பலவகைகளில் மாற்றங்களுக்கு வெற்றிகரமான வழியைக்
காட்டுகிறது. அறிவியலின் அடிப்படையில் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ன் வழிமுறைகள்
அமைக்கப்படவில்லை. அதனால் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ன் வெற்றிகள்
எதிர்பாராததொன்றாகும்.
மதுவுக்கு அடிமையாவது என்பது வெறும் பழக்கத்தினால் மட்டுமே
வருவதில்லை. பழக்கத்தின் ஊடே மரபணுக்கூறு, உடலின் தன்மை போன்றவைகளும் மதுவுக்கு
அடிமையாவதைத் தீர்மானிக்கிறது. மனோவியல் அடிப்படையிலோ உடல்நிலை அடிப்படையிலோ
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்- மதுப்புழங்கிகளை அணுகுவதில்லை. மனோநிலை, உடல்நிலை
அடிப்படையில் அணுகுவதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் மதுப்புழங்கிகளின் பழக்கத்தை
மாற்றி மதுவிலிருந்து அவர்களை மீட்க முனைகிறது. இப்படி மாற்றுவதன் மூலம் எத்தகைய
பழக்கத்தையும் மாற்றிவிட முடியும் என்று ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்
நிரூபித்திருக்கிறது.
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ஐ தோற்றுவிப்பதற்காக எந்த
ஆய்வுக்கட்டுரையையும் படிக்கவில்லை, அல்லது எந்த அறிவியல் அறிஞர்களையோ வில்சன்
கலந்தாலோசிக்கவில்லை. மதுப்பழக்கத்திலிருந்து மீண்ட சில வருடங்களுக்குப்பிறகு, ஒரு
நாள் இரவு திடீரென்று ஏதோ ஒரு வேகத்தில் 12 விதிகளைக்கொண்ட ஒரு கொள்கையினை அவர்
வகுத்தார்.12 என்பதும் பைபிளில் இருக்கும் 12 நம்பிக்கையாளர்களைக் குறிப்பதற்காகவே
அவர் எடுத்துக்கொண்டார். அந்த விதிகளும் அறிவியல் முறைப்படி சரியானவைகள் அல்ல.
மேலும், அவை சில சமயங்களில் பார்த்தால் விசித்திரமாகவும் தோன்றும் விதிகள்.
உதாரணமாக, மதுப்புழங்கிகள் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ல் 90
நாட்களில் 90 ஆலோசனையில் பங்கேற்கவேண்டும் என்பது ஒரு விதி. இன்னொரு விதி
ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். தன்னைக் கடவுளிடத்தில் ஒப்படைக்கவேண்டும். 12
விதிகளில் 7 விதிகள் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவைகள். ஒரு சமயத்தில் தீவிர
நாத்திகவாதியாக இருந்து ஆத்திகத்தில் சேர்ந்த ஒருவர் எழுதியவைகள் இவை.
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்-ன் ஆலோசனைக் கூட்டத்தில் இப்படித்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்
என்று கட்டாயமான வழிமுறைகள் என்றும் கிடையாது.
பொதுவாக அதில் சேர்பவர்கள் தங்களுடைய கதையைக் கூறவேண்டும்.
அதில் மற்றவர்களும் சேர்ந்துகொள்வார்கள். தொழில்முறை ஆலோசகர்கள் மூலம் அது
வழிநடத்தப்படுவதும் கிடையாது. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் பழைய காலத்தில் உறைந்ததுபோல்
இருந்தது.
A.A (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்) – எந்த அறிவியல் வழிமுறைகளையும் பயன்படுத்தாததால்,
அறிவியலாளர்கள் அதன் வெற்றியை ஒத்துக்கொள்ளவில்லை. அதிகம் ஆன்மீகத்தையும் கலந்ததால்
அது ஒரு வகையான திரிந்த மதம் என்ற அளவிலேயே ஒப்பு நோக்கப்பட்டது. ஆனால் பதினைந்து
வருடங்களில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அது ஆராய்ச்சியாளர்களின்
பார்வையை A.A- ன் திசையில்
திருப்பியது. ஹாவர்ட், ஏல், சிக்காகோ பல்கலைக்கழகங்கள் என்று பல பல்கலைக்கழகங்கள் A.A- ன் வழிமுறைகளும்
அறிவியல் சார்ந்து இருப்பதைக் கண்டுகொண்டுள்ளனர். டோனி டங்கி, உபயோகப்படுத்திய
வழிமுறைகளை ஒத்த முறைகளை A.A- யினுடைய விதிகளிலும் இருப்பதை உணர்ந்தனர். பழக்க மாற்றங்களின் பொன்விதிகள்
இங்கேயும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அவர்கள் வழிமொழிந்துள்ளனர். மதுப்பழக்கம்
உள்ளவர்களை அதிலிருந்து மீட்பதில் A.A- வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் இங்கேயும் துப்புகளும் வெகுமதிகளும்
மதுப்புழங்கிகளுக்குக் கிடைக்கிறது. செயல்முறைகள் மட்டுமே மாறுபடுகிறது.
A.A- துப்புகளையும்
வெகுமதிகளையும் கண்டுபிடிப்பதற்கு பங்கேற்பாளர்களை கட்டாயப்படுத்துகிறது. புதிய
பழக்கங்களை உண்டுபண்ணுவதற்கும் அது உதவுகிறது. ஹாப்கின்ஸ் பெப்ஸோடன்சை
சந்தைப்படுத்தியபொழுது மக்களிடம் ஏக்கத்தை உண்டுபண்ணினார். பழைய பழக்கத்தை
மாற்றுவதற்கு புதிதான ஏக்கத்தை உருவாக்கவேண்டும். துப்புகளையும் வெகுமதிகளையும்
மாற்றாமல், ஏக்கத்துக்கு புதிய வழிமுறைகளை உண்டுபண்ணினால் இது சாத்தியமாகும்.
A.A- ன் நான்காவது ஐந்தாவது
விதிகள் “உங்களிடம் புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகளைத் தேடுங்கள்.” உங்களிடமும்,
இறைவனிடமும், அடுத்தவர்களிடமும் தவறுகளுக்காக மன்னிப்புக் கோருங்கள்.” என்பதாக
உள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக A.A- யினைக் குறித்து ஆராய்ச்சி செய்த ஸ்காட் என்ற நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர் இப்படிக் கூறுகிறார். “பார்வைக்கு ஒன்று போல தோன்றும் இந்த
விதிகளை முழுமையாகத் தொடர ஏகப்பட்ட தூண்டுகோல்களை மதுப்புழங்கிகள், மதுப்பழக்கத்திலிருந்து
மீள ஆரம்பிக்கவேண்டும். உங்களைப்பற்றிய உண்மைகளை ஆராயத்தொடங்கினால், நீங்கள்
மதுவுக்கு அடிமையாவதற்கான காரணத்தை உணர்வீர்கள். அடுத்தவர்களிடம் மன்னிப்பு
கேட்பதன்மூலம், உங்களிடம் புதைந்துள்ள தீய பழக்கங்களும் விலக ஆரம்பிக்கும்.”
அப்படியென்றால் வெகுமதி? மதுவினை
பருகுவதற்கான காரணங்கள் பிரச்சனையிலிருந்து விலகுவது, ஓய்வு, மன உளைச்சல், நண்பர்களுடன்
பழகுவது, மனதிலிருப்பதை வெளியே சொல்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்வது என்று எண்ணற்ற
காரணங்கள் இருக்கக்கூடும். இவையனைத்துக்கும் மதுதான் துணை என்ற அவசியமில்லை.
மேலும் மதுவினால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள் மது என்ற வெகுமதிக்குள் இருக்கும்
ஒரு பாதகம் ஆகும்.
“மது அருந்துவதில் இன்பத்தைத்
தேடுவது என்ற ஒரு அம்சமும் உள்ளது.” என்கிறார் உல்ஃப் மில்லர் என்ற ஜெர்மனியைச்
சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர். “ஆனால் மக்கள் மதுவினை நாடுவதற்கு கவலைகளை மறக்க
நினைப்பதும் ஒரு காரணமாக உள்ளது. அல்லது ஏதோ ஒரு ஏக்கத்தைத் தணிப்பதும் ஒரு
காரணமாக உள்ளது. மதுவினை உட்கொள்ளும்பொழுது இன்பத்தினைத் தூண்டும் பகுதிகள்
மூளையில் செயல்படுவதில்லை. வேறு பகுதிகளே செயல்படுகின்றன.” என்றும் அவர்
கூறுகிறார்.
குடிப்பழக்கத்திற்கு
அடிமையானவர்களுக்கு, மதுவினால் கிடைக்கக்கூடிய அதே வெகுமதியைத் தருவதற்காக A.A- ஒரு தோழமையுடனான உறவினை
ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு மது அடிமைக்கும் தோழர் ஒருவர் இருப்பார்.
வெள்ளிக்கிழமை இரவுகளில் மதுவினைப்பற்றிய சிந்தனையை திசை மாற்றுவதற்கு அவர் உதவுவார்.
அந்த்த் தோழரிடம் அளவுளாவதன் மூலம் மதுவினை நாடும் மனதி திசை திருப்பவும்
முடியும்.
மது அருந்துவதற்குப் பதிலாக அந்த
நேரங்களில் வேறோரு செயல் முறையை A.A- வெற்றிஏற்படுத்தியது என்று டோனிகன் கூறுகிறார். தோழமைக் கூட்டங்களில், மனதை
அமைதிப்படுத்தி, தனது பிரச்சனைகளின் சுமையைப் பேசுவதன் மூலம் அதனைக் குறைக்கவும்
முடிகிறது.
கீழ்க்கண்ட படங்களில் இந்தப்
பழக்கங்களின் வேறுபாட்டினை இங்கு காணலாம்.
தூண்டுதலையும் வெகுமதியையும்
மாற்றாமல் செயல்முறைகளில் இங்கே மாற்றம் ஏற்படுகிறது.
///மதுவுக்கு அடிமையாவது என்பது வெறும் பழக்கத்தினால் மட்டுமே வருவதில்லை. பழக்கத்தின் ஊடே மரபணுக்கூறு, உடலின் தன்மை போன்றவைகளும் மதுவுக்கு அடிமையாவதைத் தீர்மானிக்கிறது///
ReplyDeleteஅறியாத செய்தி நண்பரே
பழக்கத்தினால் மட்டுமே என இதுவரை நினைத்திருந்தேன்
இப்பொழுதுதான் உண்மை புரிகிறது
நன்றி நண்பரே
தம1
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
Deleteஆமாம். சில பழக்கங்கள் நமது மரபணுக்களையே மாற்றக்கூடியவைகள் என்பது ஆச்சர்யம்தான்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
‘ஹலூசினேசன்’ என்பதை பிரமை அல்லது மருட்சி என சொல்லலாம். மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரை குணப்படுத்துதல் என்பது சவாலான செயலே. அவர்களின் கவனத்தை மதுவிலிருந்து திசை திருப்ப வில்ஸன் அவர்கள் AA நிறுவனம் மூலம் செய்திருக்கும் தொண்டு பாராட்டக்கூடியதே. . தூண்டுதலையும் வெகுமதியையும் மாற்றாமல் செயல்முறைகளில் மாற்றம் செய்து பழக்கத்தை மாற்றமுடியும் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த தொடர்பல புதிய தகவல்களை தெரிவிக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteகாணொளியை கண்டேன். குழந்தைகள் எங்கும் ஒரே மாதிரிதான் என்பது சரியே. காணொளியை இரசித்தேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteஹலூசினேசனுக்கு தமிழில் மறந்துவிட்டது. நன்றி. திருத்திவிட்டேன்.
நூலில் சொல்வதுபோல நல்ல பழக்கங்களை உருவாக்குவது, மாற்றுவது முடியும் என்றாலும் அது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் தீய பழக்கங்களை உருவாக்குவது மட்டும் எப்படி சுலபமாக முடிகிறது என்பதுதான் புரியாத புதிர்.
குழந்தைகள் குழந்தைகள்தான்!
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டங்கள் பலரையும் மதுப் பழக்கத்திலிருந்து விடுவித்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த அமைப்பு கிறிஸ்த்தவ தேவாலய வளாகங்களில் செயல்படுவதால்தானே என்னவோ அது இன்னும் பிற மதத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானோர் பலரும் ஏதாவது ஒரு கவலையை - அது ஒருவேளை பிரமையாக கூட இருக்கலாம் - மறப்பதற்காகவே அதில் இறங்குகின்றன என்பதும் உண்மை. வெகு சிலரே அதை கட்டுக்குள் வைத்துக்கொள்கின்றனர் குறிப்பாக இந்தியாவில் பலரும் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிப் போவதுதான் உண்மை. ஏஏவில் கூறுவதுபோன்று நமக்கு நெருங்கிய நண்பர் ஒருவருடன் - அதாவது ஏற்கனவே அந்த பழக்கத்திற்கு அடிமையாக இருந்து அதிலிருந்து விடுபட்ட நண்பர் ஒருவருடன் உரையாடுவதன் மூலம் அதை தவிர்ப்பதற்கு பழகுவது சாத்தியம் என்பதையும் எனக்கு நெருங்கிய ஒரு சில நண்பர்கள் வழியாக அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். தொடரை மிக அருமையாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteஆல்கஹாலிக் அனானிமஸ் பலரை நல்ல வழியில் திருத்தியிருக்கிறது என்று படித்திருக்கிறேன். தாங்களும் ஆல்கஹாலிக் அனானிமஸ் செயல்பாடுகளைக் குறித்தும், தங்களுடைய ஆலோசனையின் பேரில், ஒருவர் அதனால் பயனடைந்ததையும் எழுதியிருந்த பதிவுகளை சமீபத்தில்தான் படித்தேன். தாங்கள் தங்களுடைய பதிவுகளை மீள்பதிவு செய்தால், முன்பு படித்திராதவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த அவசர காலத்தில் பழைய பதிவுகளை படிப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
புதிதாக பதிவுகளை எழுதுவது சிரமமாக இருப்பதால் நீங்கள் கூறியபடி பழைய பதிவுகளைத்தான் மீள்பதிவு செய்ய வேண்டும் போலுள்ளது :)
Delete