பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, July 24, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 14



தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருந்த புக்கனர் குழு, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கன் நேஷனல் ஃபுட்பால் ஃபெடரேஷனில், தொடர் வெற்றிகளை சந்திக்கும் குழுவாக மாறத்தொடங்கியது. டங்கியின் பழக்க விதிகளைப் பின்பற்றியது அதற்கு முக்கிய காரணமாக விளங்கியது. நேஷனல் ஃபுட்பால் ஃபெடரேஷன் வரலாற்றில் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு வெற்றியளித்த பயிற்றுவிப்பாளராக டங்கி இன்றும் அறியப்படுகிறார். மேலும் சூப்பர் பவுல் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கராகவும் அவர் விளங்குகிறார். அவருடைய பயிற்றுவிக்கும் விதிகள் இன்றும் பல விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அவருடைய வழிமுறைகள், எப்படி பழக்கங்கள் ஒருவரை மாற்றியமைக்கமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.


மேற்கூறியவைகள் பின்னாளில் நிகழ்ந்தன. இன்று, இப்பொழுது  நவம்பர் 17, 1996-ல், சான்டியாகோவில் வெற்றிபெறுவது மட்டுமே டங்கியின் விருப்பமாக இருக்கிறது. விளையாட்டுத்திடலுக்கு வெளியே இருந்த டங்கி, இன்னும் எவ்வளவு நேரத்துக்கு விளையாட்டு நீடிக்கும் என்று தெரிவிப்பதற்காக அரங்கிலிருந்த, கடிகாரத்தை நோக்கினார். 8 நிமிடம், 16 வினாடிகள் மீதமிருப்பதாக கடிகாரம் காட்டியது. எப்பொழுதும்போல பக்கனர் குழு கிடைத்த அனைத்து சாதகமான நிலைகளையும் தொடர்ந்து இழந்துகொண்டே இருந்தனர். எதிரணியைச் சேர்ந்த ஸ்டேன் ஹம்பயர், பந்தைக் கையில் எடுத்தபடி வெற்றியை நோக்கி ஓடினார்.

டங்கி எதிரணியான ஹம்பயரை நோக்கவில்லை. தனது குழுவினரை நோக்கினார். பல மாதங்களாக பயிற்சியினை அவர்கள் எப்படி செயலாக்குகின்றனர் என்று கவனித்தார். அமெரிக்க ஃபுட்பால் விளையாட்டின்பொழுது, எதிரணியிரடமிருந்து பந்தைக் கைப்பற்றி, அவர்களின் கையில் சிக்காமல் ஏமாற்றி பந்தை எடுத்துச் செல்லவேண்டும். ஒரே திசையில் செல்வதுபோல் போக்குகாட்டி, வேறுதிசையில் பந்தை திறமையுடன் ஏமாற்றி எடுத்துச்சென்றுவிடவேண்டும். காலம் காலமாக இப்படித்தான் விளையாடுவது வழக்கம்.


ஆனால், டங்கி இப்படி அவர்களுக்கு பயிற்றுவிக்கவில்லை. கொஞ்சம் வழக்கத்தை மாற்றியமைத்தார். டங்கியின் அணியில், ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் விளையாடவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தார்கள். அதாவது, இந்த இடத்திலிருந்து பந்து வந்தால் என்னசெய்வது, இன்னொரு இடத்திலிருந்து பந்து வந்தால் என்ன செய்வது என்று கச்சிதமாக கற்பிக்கப்படிருந்தது.  அவர்கள் அணியினர் அனைவருக்கும், முறைகளும் வழிகளும் பரிச்சயமானவைகளாக இருந்தது. இந்த நேரத்தில், இந்த மாதிரியான கட்டத்தில் தம் அணியில், மற்றவர் என்ன செய்வார் என்று அவர்களுக்கு பிழையில்லாமல் கணிக்கும் அளவுக்குத் தெரியும்.


டங்கி இந்த முறையைத் தேர்ந்தெடுத்ததால், அணியில் தப்பாக இன்னொருவர் புரிந்து கொள்வது இல்லாமல் இருந்தது. டங்கியின் அணியினர் செய்யவேண்டியது, அடுத்த அணியினரைவிட வேகமாக விளையாடவேண்டியதுதான். அமெரிக்கன் ஃபுட்பாலில் ஒவ்வொரு வினாடிகளும் முக்கியமானவைகள். நூற்றுக்கணக்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்காமல், குறிப்பிட்ட சில வழிமுறைகளை மட்டுமே டங்கி தன் விளையாட்டுக் குழுவுக்கு பயிற்சியளித்திருந்தார். ஆனால் அந்தப் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து, கிட்டத்தட்ட, கண்களை மூடிக்கொண்டே அதனை செய்யுமளவுக்கு அவர்களுக்குத் திறமை வந்துவிட்டது. அணியின் திட்டம், சரியானபடி செயலாக்கப்படும்பொழுது, அவர்களால் அடுத்த அணியினரை மிஞ்சுமளவுக்கு வேகமாக ஓடமுடியும்.


இதுவரை டங்கியின் அணியினர், திட்டங்களை சரிவர செயல்படுத்தியதில்லை. ஆனால் இப்பொழுது முதல்முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரீகன் அப்ஷா என்ற டங்கி அணியின் ஆட்டக்காரர் மூன்று புள்ளிகள் எடுத்தபிறகு டங்கியின் பயிற்சியின்படி விளையாட ஆரம்பித்தார். நேரத்தை வீணடிக்காமல் பயிற்சியில் பயின்றதை விரைவாக செயல்படுத்தினார். அதனை உணர்ந்த மற்ற ஆட்டக்காரர்களும் திட்டப்படியே செயலாற்றினர்.


என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்காமல், பழக்கத்தின் காரணமாக டங்கி அணியினர் விரைவாக செயல்பட்டு ஆட்டத்தில் வெற்றியை நோக்கி முன்னேறினர். டங்கி அணியினரது ஆட்டம் பார்வையாளர்களுக்கு பிடிபடவில்லை. என்ன செய்யவேண்டும் என்று எதிரணியினர் சிந்தனை செய்யும் நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி, தொடர்ந்த பயிற்சியினால், இந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று சரியாக நிர்ணயித்தபடி, டங்கி குழுவினரின் ஆட்டம் தொடர்ந்தது. பந்து இங்கு செல்லும் என்று எதிராட்டக்காரர்கள் முடிவெடுத்தபொழுது அதற்கு மாறாக எதிர்திசையில் பந்தைக்கொண்டுசென்று, பழக்கத்தின் காரணமாக பக்கனர் குழுவினர் ஒவ்வொருவரும் தனது பங்கை கச்சிதமாக சரியாக செய்தனர். நிலை தடுமாறாமல் அவர்கள் பந்தை எடுத்துச்சென்றவிதம், ஒரு தானியங்கி இயந்திரம் தடையின்றி இயங்குவதுபோல இருந்தது.


பத்து நிமிடங்களில், டங்கியின் பயிற்சியில் இருந்த பக்கனர் குழுவினர், பல ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்டத்தில் முதல் நிலை வகித்தனர். ஐந்து நிமிடங்களில் இன்னொரு புள்ளி எடுத்து முன்னேற்றத்தைத் தொடர்ந்தனர். இறுதியில் 25-க்கு 17-புள்ளிகள் என்ற விகிதத்தில் ஆட்டத்தில் பக்கனர் குழுவினர் வெற்றியடைந்தனர்.


ஆட்டம் முடிந்ததும் பக்கனர் குழுவின் தலைவர் லிஞ்ச்-ம் பயிற்றுவிப்பாளர் டிங்கியும் பேசிக்கொண்டே திடலைவிட்டு வெளியில் வந்தனர்.
“இன்று ஆட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.” லிஞ்ச் கூறினார்.
“ஆமாம். நாம் நம்மை நம்ப ஆரம்பித்திருக்கிறோம்.” டிங்கி பதிலளித்தார்.



பயிற்றுவிப்பாளர் பழக்கங்களை ஒருமைப்படுத்தி அணியினரை வெற்றிபெறச் செய்தது எப்படி என்று அறிய நாம் விளையாட்டு உலகத்தைவிட்டு சற்று வெளியேவரவேண்டும். 1934-ல் நியூயார்க்கின் கிழக்குப்பகுதியில் உலகிலேயே முதல்முறையாக பழக்கமாற்றங்களின் வெற்றி என்னும் முனைப்புடன் பழக்கங்களைத் துவக்கிய இடத்துக்கு செல்லவேண்டும்.


அங்கு பல வருடங்களுக்கு முன்பு, கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பில் வில்சன் என்பவர் அமர்ந்திருந்தார். அவர் மதுவுக்கு அடிமையானவர். முதல் உலகப்போரில் அமெரிக்காவைப் பிரதிநிதித்து போரிட்டவர். நியூபெட்ஃபோர்ட், மாசாசூசெட்ஸ் என்ற படைவீரர்கள் பயிற்சி இடத்தில் முதல்முறையாக அவர் மதுவைத் தொட்டவர். அங்கு இயந்திரத்துப்பாக்கியை எப்படி உபயோகிப்பது என்று பயிற்சி பெற்றவர். அப்பொழுது அவருக்கு வயது 22. அதற்கு முன் அவர் மதுவைத் தொட்டதில்லை. கடுமையான பயிற்சிகள் பிறகு விருந்துகள் என்று இருந்தபொழுது அவருக்கு மது எப்பொழுதும் தாராளமாகக் கிடைத்தது. மதுவே வாழ்க்கையை முழுமையாக்குகிறது என்று எண்ணுமளவுக்கு அவர் மதுவுக்கு அடிமையானார்.


1930-ல் ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பியபொழுது, அவரது மதுப்பழக்கத்தினால், அவருடைய திருமணவாழ்வில் முறிவு ஏற்பட்ட்து. தொடர்ந்து ஏகப்பட்ட பண இழப்புகள் வேறு. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு 3 பாட்டில்கள் மது அருந்தும் அளவுக்கு அவர் மோசமாக இருந்தார்.


ஒருமுறை வில்சன் அவரது நண்பரை வீட்டுக்கு அழைத்தபொழுது, நண்பருக்கும் மதுவினை ஊற்றிக்கொடுத்தார். நண்பரோ, தான் மது அருந்துவதை நிறுத்தி இரண்டு மாதங்களாகிறது என்று மறுத்துவிட்டார். வில்சனுக்கு நண்பரின் கூற்று வியப்பையளித்தது. மதுவினால் தனது வாழ்வு முற்றிலும் அலைக்கழிக்கப்படுவதை அப்போது வில்சன் உணர்ந்திருந்தார். மதுப்பழக்கத்தை விட்டொழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுவிட்டதை அவருடைய நண்பரிடம் கூறினார். மருந்து மாத்திரைகள், குழுக்களின் உதவி என்று அனைத்திலும் முயற்சி செய்து வில்சன் எதிலும் வெற்றிபெறமுடியவில்லை. நண்பரிடம், உன்னால் மட்டும் எப்படி இதை சாதிக்கமுடிந்தது என்று வில்சன் வினவினார். 

                         
“நான் மதத்தைப் பற்றிக்கொண்டேன்.” நண்பர் பதிலளித்தார்.



-தொடரும்




சிந்திக்க சில கேள்விகள் :


இந்தக் கேள்விகளுக்கு நேரம் அதிகம் எடுக்காமல் பதிலளிக்க வேண்டும். மிகவும் சுலபமான கேள்விகள்தான். அனேகருக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.


1. நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். மொத்தம் எட்டு பேர் பங்கேற்கின்றனர். பந்தயத்தில் இரண்டாவதாக ஓடுபவரை தற்போது முந்திவிட்டீர்கள். தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள்?


2. இப்பொழுது அந்தப் பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தியிருக்கிறீர்கள். தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள்?


3. இப்பொழுது ஒரு மனக்கணக்கு.

முதலில் 1000- எடுத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் 40 -ஐக் கூட்டுங்கள்.
விடையில் 1000 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 30 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 1000 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 20 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 1000 –ஐக் கூட்டுங்கள்
விடையில் 10 –ஐக் கூட்டுங்கள்.
விடை என்ன?


4. பொன்னனின் பெற்றோருக்கு ஐந்து புத்திரர்கள்.

முதல் மகனின் பெயர் தருமன்.
இரண்டாவது மகனின் பெயர் பீமன்
மூன்றாவது மகனின் பெயர் அர்ச்சுனன்
ஐந்தாவது மகனின் பெயர் சகாதேவன்
நான்காவது மகனின் பெயர் என்ன?


5. ஊமை ஒருவன் டூத்பிரஷ் வாங்க கடைக்கு சென்றான். கையை ஆட்டி சைகை செய்து, கடைசியில் எப்படியோ பிரஷ் வாங்கிவிட்டான். அடுத்த்து குருடன் ஒருவன் சன் கிளாஸ் வாங்க கடைக்கு சென்றான். அவன் எப்படி வெளிப்படுத்தி சன் கிளாஸ் வாங்குவான்?


பதில்கள் வெளிவராமல் இருக்க பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது




9 comments:

  1. பழக்கங்களை மாற்றி வெற்றிபெறமுடியும் என்பதை டோனி டங்கி புக்கனர் குழுவை வெற்றி பெறச் செய்தது போல் வில்சனுடைய நண்பரும் அவரை மதுப் பழக்கத்தை கைவிட எப்படி உதவினார் என்பதை அறிய காத்திருக்கிறேன்.


    தங்களின் கேள்விக்கான பதில்கள்

    1. இரண்டாவதாக இருக்கிறேன்.
    2. அதே இடத்தில் தான்
    3. 4100
    4. நகுலன்
    5. அவன் ஊமை அல்லவே . எனவே வழக்கம்போல் பேசியே வாங்குவான்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
    மதுப்பழக்கத்திலிருந்து வில்சன் எப்படி மீண்டார் என்பது வரும் பதிவுகளில் தெரிந்துவிடும்.

    இரண்டாவது கேள்வியே தவறு. ஆனாலும் ஒரு வகையில் தங்களுடைய பதிலும் சரி என்று கூறமுடியும்.

    நான்காவது பதில் தவறு. இன்னொருமுறை கேள்வியைப் பார்த்தால் பதில் தெரிந்துவிடும்.

    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete
    Replies
    1. வழக்கம்போல் விடையை உடனே தரும் அவசரத்தில் தவறு செய்துவிட்டேன். நாலாவது விடை பொன்னன் என்றிருக்கவேண்டும்

      Delete
  3. மதுப்பழக்கத்திலிருந்து வில்சன் எப்படி மீண்டார் என்பதே அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
    எனக்குத் தெரிந்து மதுவினைத் தவிர்ப்பதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொண்டவர்கள் எல்லாம், சில காலத்திற்குப் பிறகு மதுவை நாடியேச் சென்றுள்ளனர்.
    அருமையான பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே! ஒரு பழக்கத்தை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லைதான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. மது பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இறைவனை/பிரார்த்தனையை நாடுங்கள் என்றுதான் இன்றும் அநானிமஸ் ஆல்கஹாலிக்கில் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட சிலருக்கு பலனளிப்பதில்லை. பழக்கங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட மன உறுதி மிகவும் அவசியம். அது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      ஆமாம். ஆல்கஹால் அநானிமஸ் உதவியுடன் தான் வில்சனின் நண்பர் குணமடைந்தார். விரைவில் அதுகுறித்து வரும் பதிவுகளில் காணலாம்.
      தாங்கள் கூறுவதுபோல மன உறுதி இல்லாமல் எதுவும் சாத்தியமாவது இயலாது என்றுதான் நானும் கருதுகிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. 1. 2
    2. 8
    3. 5000
    4. Nakulan
    5. He can speak know...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிகளுக்கும் நன்றி திரு.ஜீவன் சிவம் அவர்களே!
      தங்களுடைய பதில்களில் மூன்றும், நான்கும் தவறு.
      மூன்றின் பதில் 4100. நான்காவதின் பதில் பொன்னன். பதில்களை சரிபாருங்கள்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete