பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, October 3, 2013

கதம்பம்-8


அல்வா(?) கொடுத்தவர் (The pudding man) :

1999-ல் அமெரிக்காவில் டேவிட் ஃபிலிப்ஸ் என்ற பொறியியலாளர் பொருட்கள் வாங்கும் பொழுது ஒரு விளம்பரத்தைக் கண்டார். ஹெல்த்தி சாய்ஸ் ஃபுட்ஸ் (Healthy Choice Foods) என்ற நிறுவனம், அவர்களுடைய பொருட்களை வாங்குபவர்களுக்கு, விமானத்தில் பயணம் செய்ய புள்ளிகளை அளித்தனர். அதாவ்து ஒரு புட்டிங்க் 25 அமெரிக்க காசுக்கு வாங்கினால் 100 மைல் இலவசமாக விமானத்தில் பிரயாணம் செய்ய புள்ளிகளை அளித்தனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அந்த 100 மைல் பிரயாணத்துக்கான கட்டணம் 25 காசுகளைவிட அதிகம். அதாவது ஒருவர் 25 காசுக்கு பொருளை வாங்கினால் 50 காசுக்கு பணஓலை அந்த நிறுவனம் கொடுத்ததுபோல இருந்தது.

நிலைமையை உணர்ந்துகொண்ட டேவிட் 12,150 புட்டிங்க்-களை வாங்கினார். நிறுவனத்தின் வேண்டுகோளின்படி அவர் அந்த புட்டிங்க்-களைப் பிரித்து அதிலுள்ள உறைகளை நிறுவனத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். டேவிட் புட்டிங்க் அனைத்தையும், ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடையாக அளித்துவிட்டார். தொண்டு நிறுவனத்திடம், அந்த உறைகளை மட்டும் தருமாறு வேண்டிக்கொண்டார்.

ஹெல்த்தி சாய்ஸ் ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு, அவர்கள் கேட்டபடி உறைகளை அனுப்பி வைத்தார். அந்த நிறுவனமும், வாக்கு கொடுத்தபடி அவருக்கு விமானத்தில் இலவசமாக பயணம் செய்யும் புள்ளிகளை அளித்தது. அதன்படி, டேவிட் 31 முறை ஐரோப்பாவை சுற்றிவர முடியும். அல்லது 21 முறை அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுவர முடியும். அல்லது 50 முறை அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் சென்றுவர முடியும்.

அதுமட்டுமல்லாமல், அவருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸில் கோல்ட் ஸ்டேட்டஸ் கிடைத்தது. அந்த தகுதியின்படி அவருக்கு சிறப்பு முன்பதிவு, ஸீட் அப்க்ரேட் மற்றும் போனஸ் புள்ளிகளும் கிடைத்தன.

இன்னும் முடியவில்லை. தொண்டு நிறுவனத்துக்கு கொடையளித்ததால், வருமானவரி விலக்கு பெற்று அதிலிருந்து 815$ தொகையும் கிடைத்தது.
 

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. எப்பொழுதும் புது கிரடிட் கார்டு, வாங்குமாறு எனக்கு கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தது. நான் இரண்டு கார்டுக்கு மேல் வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒருமுறை, நீங்கள் உங்கள் வேறொரு கிரடிட் கார்டிலிருந்து எங்களது கார்டுக்கு ஒரு வருடத்துக்கு வட்டியில்லாமல் கிரடிட்டை மாற்றிக்கொள்ளுங்கள் என்று விளம்பரத்துடன் சிட்டி பேங்க்-லிருந்து கடிதம் வந்தது. எனக்கு லிமிட் 21,000$ கொடுத்தார்கள். நான் அவர்களிடம் கிரடிட் கார்டு வாங்கிக்கொண்டு, என்னுடைய வேறொரு கிரடிட் அக்கௌண்டுக்கு 21,000$ மாற்றிக்கொண்டேன். பணத்தை வீட்டுக் கடனுக்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட 600$ எனக்கு இலவசமாகக் கிடைத்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் புது கிரடிட் கார்டை கேன்ஸல் செய்துவிட்டேன்.

 

நரகத்தின் நுழைவாயில்:

டர்க்மெனிஸ்தான் என்ற நாடு ஆப்கானிஸ்தானைத் தாண்டி மத்திய ஆசியாவில் உள்ளது. 1971-ல் அந்த நாட்டில் உள்ள டெர்விஸ் என்ற ஊரில் இயற்கை வாயு எடுப்பதற்காக கிணறு தோண்டப்பட்டது. கிணறு தானாகவே பெரிதாகி, நிலத்தில் பெரிய ஆழமான பள்ளத்தாக்கு உருவாகியது. கிட்டத்தட்ட 70 மீட்டர் விட்டத்துக்கு பள்ளம் உருவானது. அதிலிருந்து வாயு பீரிட்டது. கொளுத்திவிட்டால் தானாகவே வாயுக்கள் தீர்ந்துவிடும் என்று வல்லுனர்கள் தீ மூட்டிவிட்டனர். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களைத் தாண்டிவிட்டது. இன்னமும் தீ அணைந்தபாடில்லை. அந்த இடம் இப்பொழுது அங்கு வாழும் மக்களால் நரகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
 


 

 விலங்குகளின் நீதி:

ஒரே வேலைக்கு வேறு வேறு வெகுமதி அளிக்கப்பட்டால், விலங்குகள் எப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

8 comments:

 1. நரகத்தின் நுழைவாயில்... நகர... காணொளிகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. அருமையான காணொளிகள். பகிர்வுக்கு நன்றி.அல்வாக் கொடுத்தவர் யோசிக்கவும் வைக்கிறார். க்ரெடிட் கார்ட் விஷயத்தில் நீங்கள் முன் ஜாக்கிரதையாகக் கணக்குப் போட்டுக் கொண்டதால் லாபம் கிடைத்தது. இதனால் கடனாளியாகிறவர்கள் நிறைய. நாங்க க்ரெடிட் கார்டே வைச்சுக்கிறதில்லை. :)))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.
   இங்கு கிரடிட் கார்டு மிகவும் வசதியாக உள்ளது. சில பேமண்ட்-களை கிரடிட் கார்டுகளால் மட்டுமே செய்ய முடியும். இரண்டு முறை ஆன்லைனில் என் கார்டில் திருட்டு நடந்த அனுபவமும் உள்ளது. இருந்தாலும் இங்கு வங்கிகளில் பிரச்சனை இல்லை. உடனே சரி செய்துவிட்டார்கள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete

 3. அல்வா கொடுத்தவர் கதையையும், நீங்கள் ‘அல்வா சாப்பிட்ட’ கதையையும் படித்தேன். இரசித்தேன்!

  சொர்க்கத்தின் நுழைவாயில் என சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நரகத்தின் நுழைவாயிலைப் பார்த்ததும் டெர்விஸ் வாழ் மக்களை நினைத்து அனுதாபப்படுகிறேன்.

  விலங்குகளின் நடத்தை பற்றிய காணொளியைக் கண்டேன். அதுவும் அந்த Fairness Study யின் விடை வியக்க வைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா !.
   விலங்குகள் எப்பொழுதுமே என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன. அதனால்தான் என்னுடைய பதிவுகளில் விலங்குகளைப்பற்றி அவ்வப்பொழுது எழுதுகிறேன். ரசித்தமைக்கு நன்றி.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு கடனை மாற்றும்போது அது கடன் அட்டைய வழியாக இருந்தாலும் இல்லா விட்டாலும் பல சமயங்களில் லாபமே இருக்கும். மேலும் லோனை ரீஷெட்யூல் செய்யவும் முடிந்தால் நாம் ஏற்கனவே கட்டியிருந்த தவணைகளையும் கூட ரிடீம் செய்ய முடியும். ஆனால் இரண்டு வங்கிகளின் நியதிகளையும் (conditions) நன்றாக படித்துவிட்டு மாறுவதால் லாபம் இருந்தால் மட்டுமே மாறவேண்டும்.

  நீங்கள் குறிப்பிட்ட இலவச நிகழ்வு உண்மையாக நடந்தது என்பதால்தான் நம்பமுடிகிறது. உலகில் அதிசயங்களுக்குத்தான் பஞ்சமே இல்லையே....

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா !.
   கிரடிட் கார்டு கடனை வட்டி போடுவதற்கு முன்பே கட்டிவிடவேண்டும் என்று நினைப்பவன் நான். எனவே, நியாயமாக என் நிலையில் ஒரு கார்டிலிருந்து இன்னொரு கார்டுக்கு மாற்றுவதால் எந்த பலனும் இருக்காது. ஆனால் நான் அவர்கள் எவ்வளவு எந்த அக்கௌண்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டபொழுது, நான் செக் உள்ள ஒரு கிரடிட் அக்கௌண்டுக்கு மாற்றி அங்கிருந்து வீட்டு லோனுக்கு மாற்றிவிட்டேன். கடன் வைத்திருந்தால், தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் கிரடிட் கார்டில் கடன் இருப்பது நல்லதல்ல.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete