பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 29, 2013

கதம்பம்-3


அதிசயப் பறவை:

“இந்த வீட்டை காலிபண்ணியாகணும். திடீர்திடீர்னு வாஷிங் மெஷின் ஓடற சத்தம் கேட்குது. பக்கத்துல எந்த வீட்லயும் வாஷிங் மெஷின் ஓடறாப்போல தோணல. காட்டுலேந்து சத்தம் வர்றாப்போல இருக்குது.”

“ஆமாம். எனக்கும் நம்ப கார் ஸ்டார்ட் பண்ற சத்தம் சிலசமயம் கேட்குது. ஆனால் பக்கத்துல எந்த காரும் இல்லை. ஹாரன் சத்தம்கூட கேட்குது.”

மேல் கண்ட உரையாடல் இங்கு ஆஸ்திரேலியாவில் சில இடங்களில் நிகழ சாத்தியம் உள்ளது. அமானுஷ்யமெல்லாம் ஒன்றுமில்லை. இங்கு லையர் பறவை (lyrebird)  என்று ஒரு பறவை உள்ளது. மயில் போல ஆண்பறவைகளுக்கு தோகையும் உண்டு. அந்த பறவைகளுக்கு எந்த சத்தத்தைக் கேட்டாலும் அப்படியே மிமிக்ரி செய்யும் ஆற்றல் உண்டு. மற்ற பறவைகளையும் போலவும் அச்சு பிறழாமல் அவற்றால் சத்தங்களை எழுப்பமுடியும். வீட்டில் பியானோ வாசிப்பதை கேட்ட ஒரு பறவை, தன்னுடைய இனங்களுக்கும் பியானோ வாசிப்பதை சொல்லிக்கொடுத்துவிட்டது.

வாஷிங் மெஷின், கார் சத்தம், ஹார்ன் சத்தம் அனைத்தையும் மிமிக்ரி செய்து நம்மை ஏமாற்றிவிடும். கீழேயுள்ள வீடியோவைப்பாருங்கள். கேமராவில் படமெடுக்கும்பொழுது, லென்ஸ் நகரும் சத்தத்தைக்கூட அது காப்பியடிக்கிறது. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவைகள் தொடர்ச்சியாக நான்கு, ஐந்து மணிநேரங்கள் பாட்டுப்பாடிதான் அவை தங்களுடைய பெருமையை நிரூபிக்கவேண்டும்.

இயற்கையின் எண்ணற்ற அதிசயங்களில் லையர் பறவையும் ஒன்று.




 

விடுகதை:

தந்தை, தாய் மற்றும் மகள் என்று மகிழ்ச்சியான குடும்பம். பதினைந்து நிமிடங்களில் தந்தை சிறைக்கு சென்றுவிட்டார். தாய் பரம ஏழையாகிவிட்டார். மகளோ பெரிய பணக்காரி ஆகிவிட்டாள். வீடெல்லாம் வாங்கிவிட்டாள். என்னதான் நடக்கிறது இங்கே?

9 comments:

  1. லையர் பறவை பற்றி தெரியும், ஆனா, கார் சத்தம், மிக்சி சத்தம்லாம் கூட பாடும்ன்னு தெரியாது. எவ்வளவு யோசிச்சும் விடுகதைக்கு விடை தெரியலை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.ராஜி. விடுகதைக்கு ஒரு க்ளூ கொடுக்கிறேன். அவர்கள் ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். இதற்கு மேலும் தெரியவில்லையென்றால் அந்த விளையாட்டை தாங்கள் விளையாடியதில்லை என்று அர்த்தம்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. Lyrebird பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன். மூன்று காணொளிகளையும் பார்த்தேன். அருமை! தான் கேட்கும் ஒலியை Imitate செய்யும் இந்த பறவை உண்மையில் ஒரு அதிசயப் பறவைதான்.
    விடுகதைக்கான விடையை யோசித்து எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! மிகவும் முக்கியமான வீடியோவை விட்டுவிட்டேன்.

      http://www.youtube.com/watch?v=tXE6aUGb4zw

      விடுகதைக்கு க்ளூ கொடுத்துவிட்டேன். இனிமேல் பதில் வந்துவிடுமென்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. இப்படியொரு பறவையா? நம்ம ஊரு கிளிப்பேச்சுக்கே இங்க ஆச்சரியப்படறமே? இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்ச்சிகளை பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றிங்க.

    நமக்கும் விடுகதைக்கும் ரொம்ப தூரம். அதனால அத படிச்சதுமே மறந்துட்டேன். எதுக்கு இருக்கற மூளையையும் கெடுத்துக்கறது? கந்தசாமி சார் இத இன்னும் படிக்கல போலருக்கு. இல்லன்னா இந்நேரம் ஆன்சர் வந்துருக்குமே:)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! மிகவும் முக்கியமான வீடியோவை விட்டுவிட்டேன்.
      http://www.youtube.com/watch?v=tXE6aUGb4zw

      விடுகதைக்கு தங்களால் பதில் கூறுவது கடினம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். படித்ததும் மறந்துவிட்டேன் என்று தாங்கள் கூறியதுபோல், முயற்சிக்கவில்லை என்று வேண்டுமானால் ஒத்துக்கொள்கிறேன். பின்னூட்டத்தில் க்ளு கொடுத்துள்ளேன். இனிமேல் சுலபமாக பதில் கூறிவிடமுடியும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. வழக்கமா ஒரு க்ளூ இருக்கும். நாங்களும் ஈஸியா கண்டு பிடிச்சிடுவோம். அதான் இந்த முறை க்ளூ கொடுக்கமா விட்டுட்டீங்க...ரொம்ப சுத்துதேய்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி திரு.ஜீவன் சிவம். மறக்காமல் இந்த வீடியோவைக் காணுங்கள். அதிசயிப்பீர்கள்.

      http://www.youtube.com/watch?v=tXE6aUGb4zw

      விடுகதைக்கு க்ளூ, அவர்கள் ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். இனிமேல் பதில் வந்துவிடுமென்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. உங்கள் பதிவின் வழியே இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான லையர் பறவை (lyrebird) பற்றி தெரிந்து கொண்டேன். வீடியோ காட்சிக்கும் , தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete