பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, September 5, 2013

கதம்பம்-4


அதிசயக்கரடிகள்:

கும்பகர்ணனைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆறுமாதங்கள் தொடர்ந்து தூங்கிவிட்டு பிறகு ஆறுமாதங்கள் தொடர்ந்து கண்விழித்திருக்கும் தன்மையுடையவன். ஓரளவுக்கு கும்பகர்ணனுக்கு இணையாக துருவங்களில் வசிக்கும் க்ரிஸ்லி வகைக்கரடிகள் வருகின்றன. குளிர்காலங்களில் தொடர்ச்சியாக அதிக பனிப்பொழிவு ஏற்படுவதால், அக்காலங்களில் அவை ஆறுமாதங்கள் தொடர்ந்து தூங்கிவிடுகின்றன. பொதுவாக, குளிர்காலங்களில் அனைத்து கரடி இனங்களும் சில காலங்கள் தூங்கிவிடுகின்றன. அலாஸ்காவில் உள்ள கரடிகள் ஆறு மாதங்கள் தூங்குகின்றன.

நீண்டகாலங்களாக, மனிதன் கரடிகள் பனிக்காலங்களில் தொடர்ந்து தூங்குவதில்லை என்றே கருதினான். பனிப்பிரதேசங்களில் வசிக்கும் பாலூட்டிகளான சிப்மங்கஸ் மற்றும் அணில்கள் குளிர்காலங்களில் தூங்கிவிடுகின்றன. அப்பொழுது அவற்றின் உடல் வெப்பநிலை வெகுவாக குறைந்துவிடுகிறது. ஆபத்து சமயங்களில் அவற்றால் உடனடியாக தயார்நிலையை அடையமுடியாது. முதலில் உடல் வெப்பநிலையை அவை அதிகரிக்கவேண்டும். பிறகே அவற்றால் ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். அதற்கான அவகாசம் கிடைப்பதற்கு வாய்ப்புகள், அநேகமாகக் கிடைக்காது. ஆனால் க்ரிஸ்லி வகைக்கரடிகள் ஹைபர்னேட் (குளிர்காலங்களில் தொடர்ந்து தூங்கும் பழக்கம்) செய்யும்பொழுது அவற்றின் உடல் வெப்பநிலை அவ்வளவாகக் குறையாது. அதனால் ஆபத்து நேரிட்டால், உடனடியாக அவற்றை கரடிகளால் எதிர்கொள்ள முடியும்.

ஹைபர்னேட் செய்யும் காலங்களில் அவை 45 வினாடிகளுக்கு ஒரு முறை மட்டுமே சுவாசம் செய்கிறது. ஆனால் சாதாரண காலங்களில் ஒரு நிமிடத்துக்கு 6 முதல் 10 தடவைகள் கரடிகள் சுவாசிக்கின்றன. அதுபோலவே இதயத்துடிப்புகளும் 40 முதல் 50-லிருந்து 6 முதல் 10 ஆகக் குறைகிறது. மேலும் உண்ணுவதையோ கழிவுகள் வெளியேற்றம் செய்வதையோ முற்றிலுமாக நிறுத்திவிடுகிறது. கோடையில் அதிகமாக சேமிக்கப்பட்ட உடல் கொழுப்பினைக்கொண்டு அவை உயிர் வாழ்கின்றன. உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றாமல், அவை தானாகவே உடலுக்குள் செலுத்தப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. உடல் எடை கிட்டத்தட்ட 30 சதவிகிதம் குறைந்துவிடுகிறது.

பனிக்காலம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, அவை பனிக்குகைகளைக் கட்டி வைத்துக்கொள்கின்றன. ஒருகரடி நுழைவதற்கு மட்டுமே போதுமானதாக அளவுள்ள சிறிய குகைகளாக கட்டிக்கொள்வதால் வெப்பத்தை அதிகநேரம் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

கரடிகளில் உடலில் நிகழும் மாற்றங்கள் ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்கவைக்கிறது. ஹைபர்னேட் காலங்களில் தூங்கும்பொழுது, கரடியின் கொழுப்பு சக்தி சாதாரண நிலையைவிட இரண்டுமடங்கு அதிகரிக்கிறது. இருப்பினும் அவற்றின் இரத்த நாளங்கள் தடிமனாவதில்லை. மேலும் மாதக்கணக்கில் தூங்கிக்கொண்டு உணவில்லாமல் இருந்தாலும், கரடிகளின் எலும்புகளின் அடர்த்தியும் குறைவதில்லை. அந்த சமயத்தில் கரடிகளின் கணையத்தில் (லிவரில்) சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் பித்தப்பைக் கட்டிகளை கரைக்கவல்லது. இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள், பனிக்கரடியே மிகச்சிறப்பாக ஹைபர்னேட் செய்யக்கூடிய விலங்கினம் என்று ஒத்துக்கொள்கிறார்கள்.

கரடியின் தூங்கும் தந்திரங்களை மனிதன் கற்றுக்கொண்டால் விண்ணுக்குச் செல்லும் பொழுது தோன்றும் உணவுப்பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
 
 
 
துணுக்கு:
தன்னுடைய இரண்டு குறும்புகார மகன்களை பொறுக்க முடியாத தாய் சர்ச்சிலுள்ள பாதிரியாரிடம் சென்று அவர்கள் செய்யும் குறும்புகளைக் குறைப்பதற்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டாள்.
பாதிரியார் முதலில் இளையவனுக்கு அறிவுரை கூறுவதற்கு அழைத்துவருமாறு கூறினார். வந்த இளையவனிடம் எந்த வகுப்பில் வடிக்கிறாய், எந்த பள்ளியில் படிக்கிறாய் என்று கேள்விகளைக் கேட்டார். பிறகு கடவுள் எங்கிருக்கிறார் என்று தெரியுமாவென்று கேட்டார். சிறுவனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான். மீண்டும் கேட்டார். பதிலில்லை. சிறுவனுக்கு அருகே வந்து கடவுள் எங்கிருக்கிறார், என்று கேட்டார். உடனே சிறுவன் கதவைத் திறந்துகொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். வெளியில் ஒரு அறையில் ஒளிந்துகொண்டு தன் அண்ணனிடம் ரகசியமாக  “ உனக்கு கடவுள் எங்கிருக்கிறார் என்று தெரியுமா?” என்று கேட்டான். அண்ணனும் தனக்குத் தெரியாது என்று கூறினான். சிறுவன் அண்ணனிடம் “ இன்று வசமாக மாட்டிக்கொண்டோம். கடவுளைக் காணவில்லை போலிருக்கிறது. நம்மைத்தான் சந்தேகப்படுகிறார்கள்.” என்றான்.
 
 
 
திருக்குறள்:
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்                                                              வைத்தூறு போலக் கெடும்.  
முன்னாள் அமெரிக்க அதிபர் சைனா சென்றபொழுது:
 
 
 
 
 
 
முன்னாள் பிறகு சைனா அதிபர் அமெரிக்கா சென்றபொழுது:

 

 
 
 
 

10 comments:

 1. நல்ல துணுக்கு....

  திருக்குறள் - பாவம்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
 3. அருமையான கதம்பம். கரடிகள் குறித்த தகவல்கள் அதிசயப் பட வைக்கிறது. பையன்கள் பற்றி ஆங்கிலத்தில் ஏற்கெனவே படித்த நினைவு.ம்ம்ம்ம் குறள் புதுமை! :( என்றாலும் ரசிக்க முடியவில்லை. :(

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். பதிவிடும் பொழுதே தங்களிடமிருந்து இவ்வாறு பின்னூட்டம் வருமென்று எதிர்பார்த்தேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. யாரும் வந்திருக்க மாட்டாங்கனு நினைச்சால் டிடி, வந்திருக்கார். :))))

  ReplyDelete
 5. துருவக் கரடிகள் பற்றிய புதிய தகவலை அறிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிவிடப்பட்ட துணுக்கை ஏற்கனவே படித்திருந்தாலும், திரும்பப் படிக்கும்போது சிரிப்பு வரத்தான் செய்கிறது.

  இப்படியெல்லாம் நடக்கலாம் என்றுதான் வள்ளுவர் அன்றே சொல்லிவைத்தாரோ!

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   உண்மையில் குழந்தைகளின் சிந்தனைகள், நாமும் அந்த நிலையைக் கடந்து வந்துவிட்டாலும், நம்மை பல நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கின்றன.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. கரடியின் தூங்கும் தந்திரங்களை மனிதன் கற்றுக்கொண்டால் விண்ணுக்குச் செல்லும் பொழுது தோன்றும் உணவுப்பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.//

  பைபிளில் ஒரு உவமை சொல்லப்பட்டுள்ளது. "வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை உழைப்பதும் இல்லை களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனால் அவற்றுக்கும் அன்றாடம் உணவு கிடைக்கிறது. வயல்வெளிகளில் மலரும் காட்டுச் செடிகள் நூற்பதும் இல்லை, நெய்வதும் இல்லை ஆனால் மன்னர்களில் எல்லாம் பெரும் மன்னர் எனப்படும் சாலமோன் அரசர் கூட இத்தனை அழகாக உடுத்தியதில்லை..' என்பதுபோல் வரும்.

  மனிதனைப் போல் நாளைக்கு, நாளைக்கு என்று விலங்குகள் வாழ்வதில்லை. ஆகவேதன் அவற்றால் நிம்மதியாக உறங்க முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   ஆமாம். தாங்கள் கூறுவது உண்மைதான். இரண்டு முதலாளிகளுக்கு ஒரே சமயத்தில் யாராலும் வேலை செய்ய முடியாது. நாம் ஊரோடு ஒத்து வாழவும் வேண்டும். விலங்குகளும் இப்பொழுது நம்மால் சிரமப்படுகின்றன.

   மிகவும் சிக்கலான யுகத்தில் வசிக்கிறோம்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்


   Delete