பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Wednesday, August 7, 2013

கணிதப்புதிர்ஒரு மீட்டர் நீளமுள்ள கயிறு உள்ளது. அந்த கயிரினை ஒரு முனையில் கொளுத்தினால் முழுவதும் எரிய ஒரு மணி நேரம் பிடிக்கும். அதுபோல இரண்டு கயிறுகள் உள்ளன. இதனைக் கொண்டு 45 நிமிடத்தை எப்படி அளவிடுவீர்கள்?

ஒரு க்ளூ : கயிரின் இரண்டு பக்கங்களிலும் எரிவதைத் துவக்க முடியும்.

தொடருக்கு இறுதியில் பதிவிட மறந்துவிட்டேன். எனவே தனியாகப் பதிவிட நேர்ந்தது.

7 comments:

 1. இரண்டு கயிறுகளிலும் ஒரு முனையைப் பற்ற வைக்கவும். இப்போது ஏதாவது ஒரு கயிற்றில் அடுத்த முனையையும் பற்றவைக்கவும். இந்த இருமுனையிலும் பற்றவைத்த கயிறு எரிந்து முடிந்தவுடன் அடுத்த கயிற்றிலும் அடுத்த முனையையும் பற்றவைக்கவும். அந்தக் கயிறு முற்றிலும் எரிந்தவுடன் 45 நிமிடங்கள் முடிந்தது என்று அறியவும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிகவும் நன்றி ஐயா!. இவ்வளவு சீக்கிரம் பதில் சரியாக வருமென்று தெரிந்திருந்தால் க்ளூ கொடுக்காமல் இருந்திருப்பேன். மீண்டும் நன்றி.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. தொடரின் நீளம் கருதி புதிர் தரவில்லையோ என தொடர் படிக்கும்போது நினைத்தேன். புதிரை, முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் விடுவித்து என்னைப் போன்றோருக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார். அவருக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா! அடுத்த வாரம் புதிருக்கு பதில் தர தங்களுக்கு சந்தர்ப்பம் அமையுமென்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 3. எனக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை பழனி கந்தசாமி ஐயா!
  உங்களுக்கும் அவருக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா! பதிலளிக்க அடுத்த வாரம் வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 4. நல்லவேளை கந்தசாமி சார் பதிலை சொல்லிவிட்டார். இல்லையென்றால் என்னைப் போன்ற ட்யூப்லைட்டுகளுக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு என் நன்றிகள்.

  ReplyDelete