பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Wednesday, August 7, 2013

பிறவி மர்மங்கள்: இறுதி


அத்தியாயம் 12-1

நான் மிதக்கிறேன்.” கேத்தரின் முணகினாள்.

“நீ எந்த நிலையில் இருக்கிறாய்?”

“இல்லை. நான் மிதக்கிறேன். எட்வர்ட் எனக்கு ஏதோ கடன் பட்டிருக்கிறார். . . . . . ஏதோ கடன் பட்டிருக்கிறார்.”

“என்ன என்று உனக்குத் தெரியுமா?”

“இல்லை. . . . . . ஏதோ எனக்கு புரியவைக்க வேண்டியது தொடர்பாக . . . . . எனக்கு கடன் பட்டிருக்கிறார். எனக்கு அவர் சொல்லவேண்டிய விஷயம் இருக்கிறது. என் சகோதரியினுடைய குழந்தை சம்பந்தமாக என்று நினைக்கிறேன்.”

“உன் சகோதரியின் குழந்தை விஷயமாகவா?”

“ஆமாம். அந்த பெண்குழந்தையின் பெயர் ஸ்டீஃபைன்.”

“அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியவேண்டும்?”

“நான் அவளை எப்படி தொடர்புகொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரியவேண்டும்.” கேத்தரின் இதற்குமுன் ஸ்டீஃபைனைப் பற்றி என்னிடம் கூறியதில்லை.

“அவள் உனக்கு மிகவும் நெருக்கமானவளா?”

“இல்லை. ஆனால் அவள் அவர்களை கண்டுபிடிக்க விரும்புகிறாள்.”

“யாரைக் கண்டுபிடிக்க விரும்புகிறாள்?”

“என்னுடைய சகோதரியையும், அவள் கணவரையும் என் மூலமாகத்தான் அவள் கண்டுபிடிக்க முடியும். எட்வர்டுக்கு அதைப் பற்றித் தெரியும். ஸ்டீஃபைனுடைய தந்தை ஒரு டாக்டர். வெர்மண்ட் என்ற ஊரில் வசிக்கிறார். எனக்குத் தேவையான நேரத்தில், இதைப் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியவரும்.”

 

பிறகுதான், நான் கேத்தரினுடைய சகோதரி பற்றிய விஷயங்களை அறிந்துகொண்டேன். கேத்தரினுடைய சகோதரியும், அவள் காதலனும் பதின்மவயதில், திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தையை தத்து கொடுத்துவிட்டார்கள். அந்த தத்துக்குழந்தைதான் ஸ்டீஃபைன். தத்து கொடுத்த காலக்கட்டத்தில் பெற்றோர் விவரங்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படவில்லை. சர்ச் மூலமாகத்தான் தத்து கொடுத்திருக்கிறார்கள். ஸ்டீஃபைன் தன்னுடைய பெற்றவர்களைப் பற்றி அறிய விழைகிறாள் என்று புரிந்துகொண்டேன்.

 

“ஆமாம். நேரம் வரும்பொழுது அறிந்துகொள்ள முடியும்.” பதிலளித்தேன்.

“ஆமாம். எட்வர்ட் என்னிடம் கூறுவார்.”

“வேறு என்னென்ன விஷயங்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறாய்?”

“தெரியவில்லை. ஆனால் அவர் இன்னும் எனக்கு விஷயங்கள் கூற கடமைப் பட்டிருக்கிறார். என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆ . . . . . அவர் கடன்பட்டிருக்கிறார்.” அமைதியானாள்.

“களைப்பாக இருக்கிறாயா?”

“நான் குதிரையின் கடிவாளத்தைப் பார்க்கிறேன். சுவரில் இணைக்கப்பட்டிருக்கிறது . . . . . .கடிவாளம் . . . . . . வெளியே அங்கி ஒன்று கிடக்கிறது.”

“நீ பண்ணையில் இருக்கிறாயா?”

“இல்லை. இங்கு நிறைய குதிரைகள் உள்ளன. ஏகப்பட்ட குதிரைகள்.”

“வேறென்ன காண்கிறாய்?”

“நிறைய மரங்களைப் பார்க்கிறேன். . . . . மஞ்சம் நிறப் பூக்கள் உள்ள மரங்கள். என் தந்தை அங்கே இருக்கிறார். அவர் குதிரைகளை கவனித்துக் கொள்கிறார்.” நான் ஒரு குழந்தையுடன் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

“அவர் எப்படி காட்சியளிக்கிறார்?”

“உயரமாக இருக்கிறார். நரைமுடியுடன் இருக்கிறார்.”

“உன்னைப் பார்க்கமுடிகிறதா?”

“நான் சிறுமியாக இருக்கிறேன்.”

“உன் தந்தை குதிரைகளின் உரிமையாளரா? அல்லது குதிரை லாயத்தில் வேலை செய்கிறாரா?”

“அவர் வேறு வேலை செய்கிறார். நாங்கள் அருகில்தான் வசிக்கிறோம்.”

“உனக்கு குதிரைகளை மிகவும் பிடிக்குமா?”

“ஆமாம்.”

“உனக்கு விருப்பமான குதிரை எது?”

“ஆமாம். என் குதிரையின் பெயர் ஆப்பிள்.” கேத்தரின் “மாண்டி” என்ற பிறவி எடுத்ததும், அதில் ஆப்பிள் குதிரையைப் பற்றி அவள் கூறியதும் நினைவுக்கு வந்தது. மீண்டும் “மாண்டி” என்ற பிறவிக்கு திரும்பியிருக்கிறாளா? வேறொரு கோணத்தில் இருந்து வந்திருக்கிறாள்.”

“ஆப்பிள் . . . . . உன் தந்தை உன்னை ஆப்பிளில் சவாரி செய்ய அனுமதிப்பாரா?”

“இல்லை. ஆனால் நான் அதற்கு புற்களைக் கொடுக்க முடியும். எஜமானரின் வண்டியை அது இழுக்கும். ஆப்பிள் மிகவும் பெரியதாக உள்ளது. பெரிய கால்களும் அதற்கு உண்டு. கவனமாக இல்லாவிட்டால் அது உங்கள் கால்களை மிதித்துவிடும்.”

“உன்னுடன் யாரெல்லாம் இருக்கிறார்கள்?”

“என் அம்மா, ஒரு சகோதரி . . . . . அவள் என்னைவிட பெரியவள். வேறு யாரையும் இங்கு என்னால் பார்க்க முடியவில்லை.”

“இப்பொழுது என்ன பார்க்கிறாய்?”

“குதிரைகளை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“உனக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நேரமா?”

“ஆமாம். எனக்கு பண்ணையின் வாசனை மிகவும் பிடிக்கும்.” பண்ணையில் தற்பொழுது, குறிப்பாக அந்த நிமிடத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அவளால் கூற முடிகிறது.

“குதிரைகளின் மணத்தை உன்னால் உணரமுடிகிறதா?”

“ஆமாம்.”

“வைக்கோலின் மணம்?”

“நுகரமுடிகிறது . . . . . குதிரையின் முகம் மிகவும் மிருதுவாக இருக்கிறது, இங்கு நாய்களும் உள்ளன . . . . . கறுப்பு நாய் . . . . . இன்னும் கறுப்பு நாய்கள், கார்கள் . . . . . விலங்குகளும் உள்ளன. நாய்கள் வேட்டையாட உதவி செய்யும். நாய்கள் பறவைகளை விரட்டும். நாய்களைக் கட்டிப்போடவில்லை. அவை எங்கும் செல்லலாம்.”

“உனக்கு எதுவும் அடிபட்டு விட்டதா?”

“இல்லை.” நான் என் கேள்வியில் குறிப்பிட்டு எந்த சம்பவத்தையும் கூறவில்லை.

“நீ பண்ணையில்தான் வளர்கிறாயா?”

“ஆமாம். குதிரை லாயத்தில் வேலை செய்பவர் என் உண்மையான தந்தை இல்லை.” மௌனமானாள்.

“உன் உண்மையான தந்தை இல்லையா?” குழம்பினேன்.

“எனக்குத் தெரியவில்லை . . . . . . என் உண்மையான தந்தை இல்லை. ஆனால் எனக்கு தந்தையைப் போன்றவர். என்னிடம் அன்பாக இருக்கிறார். அவருக்கு பச்சை நிற கண்கள் இருக்கிறது.”

“அவர் கண்களைப் பார். அவரை உனக்கு அடையாளம் காணமுடியும்.”

“அவர் என் தாத்தா. . . . . . தாத்தா. எங்களிடம் அவர் மிகவும் பிரியமாக இருப்பார். எங்களை எப்பொழுதும் வெளியில் அழைத்துச் செல்வார். வெளியில் அழைத்துச் செல்லும்பொழுது பானங்கள் வாங்கித் தருவார். எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவார்.” கேத்தரின் அந்த பிறவியிலிருந்து வெளியேறி, நிகழ்கால பிறவியில் உள்ள தாத்தாவைப் பற்றி பேசுகிறாள் என்று நினைக்கிறேன்.

“அவர் இல்லாததை நினைத்து வருத்தமாக உள்ளதா?”

“ஆமாம்.” மென்மையாக கூறினாள்.

“உன்னுடதான் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறாரே?” அவள் சோகத்தைக் குறைப்பதற்காக சமாதானமாகக் கூறினேன்.

“எங்களிடம் மிகவும் பிரியமாக இருந்தார். எங்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் எங்களை திட்டியதே கிடையாது. எங்களுக்குப் பணம் தருவார். எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வார். அவருக்கும் அது மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் இறந்துவிட்டார்.”

“ஆமாம். ஆனால் நீ அவரிடம் மீண்டும் சேரமுடியும். உனக்கும் அது தெரியுமல்லவா?”

“ஆமாம். அவர் என் தந்தையைப் போல அல்ல, மிகவும் நல்லவர்.”

“ஒருவருக்கு உன்னை மிகவும் பிடிக்கிறது. நன்றாக நடத்துகிறார். ஆனால் மற்றொருவர் வித்தியாசமாக நடத்துகிறார். என்ன காரணம்?”

“ஒருவர் அந்த கடனை கழித்துவிட்டார். என் தந்தை இன்னும் பிறவிக் கடன்பட்டிருக்கிறார். சரியாக கற்றுக்கொள்ளாமல் மீண்டும் பிறந்திருக்கிறார். அவர் மீண்டும் பிறவி எடுத்தாக வேண்டும்.”

“ஆமாம். அவர் அன்பும், அரவணைப்பும் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.” பதிலளித்தேன்.

“ஆமாம்.”

“குழந்தைகளை ஜடப்பொருட்கள் போல நினைக்கிறார்கள். அது தவறு. குழந்தைகளை அன்புடன் வளர்க்க வேண்டும்.”

“ஆமாம்.” ஒத்துக்கொண்டாள்.

“ஆமாம். உன் தந்தை இன்னும் இந்த விஷயத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.”

“ஆமாம். உன் தாத்தா இதில் தேறியிருக்கிறார்.”

“எனக்குத் தெரியும்.” இடைமறித்தாள். “சரீர நிலையிலும் நாம் வேறு வேறு பரிமாணங்களைக் கடக்க வேண்டும். . . . . . . ஸ்தூல நிலையில் உள்ளதைப் போல, குழந்தைப் பருவம், பதின்ம பருவம், வாலிபப் பருவம் . . . . . . என்று வேறுபட்ட நிலைகளைக் கடக்க வேண்டும். . . . . . நமது பிறவிக்கான இலட்சியத்தின் எல்லையைத் தொடும்வரைக் கடக்கவேண்டும். சரீர நிலையின் பருவங்கள் மிகவும் கடினமானவை. ஸ்தூல நிலையின் எல்லைகள் எளிமையானவைகள். அங்கு நாம் காத்திருக்க வேண்டும். சரீர நிலையின் எல்லைகள் சிரமம் மிகுந்தவைகள்.”

“ஸ்தூல நிலையில் எத்தனை பரிமாணங்கள் உள்ளன?”

“ஏழு பரிமாணங்கள்.”

“அவைகளைப் பற்றி விளக்கமுடியுமா?” முன்பு ஒருமுறை அவள் கூறியதை உறுதி செய்து கொள்வதற்காக வினவினேன்.

“எனக்கு இரண்டு பரிமாணங்களைப் பற்றி மட்டுமே தெரியும். ஒன்று நிலைகளை அசைபோடும் பரிமாணம். மற்றொன்று காத்திருக்கும் பரிமாணம்.”

“எனக்கும் இவை இரண்டுமே புரிந்துள்ளது.”

“மற்றவைகளைப் பற்றி காலம் கூடும்பொழுது அறியமுடியும்.”

“இன்று பிறவி கடனைப் பற்றி அறிந்துகொண்டோம். நான் கற்றுக்கொள்ளும் நேரத்தில் நீயும் கற்றுக்கொள்ள முடிகிறது இல்லையா?”

“நான் என்ன நினைவில் நிறுத்த வேண்டுமோ அதை மட்டுமே நினைவில் நிறுத்த முடியும்.” உறுதியாக பதிலளித்தாள்.

“உனக்கு இந்த பரிமாண நிலைகளைப் பற்றி நினைவு இருக்குமா?”

“இல்லை. எனக்கு அவற்றைப்பற்றி தெரியவேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்களுக்கு அவை முக்கியமான பாடங்கள்.” முன்பே அவள் இதைப்பற்றி கூறியிருக்கிறாள். வருகிற தகவல்கள் எனக்காக; அவளுக்கு உதவி செய்வதற்காக; அதையும் தாண்டி அதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்னவென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

“உனக்கு நன்கு குணமாகி வருகிறது. முன்பைவிட உன் நிலையில் நல்ல வரவேற்கத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உன்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.”

“ஆமாம்.” ஒத்துக்கொண்டாள்.

“ஏன் மற்றவர்கள் உன்னால் கவர்ந்திழுக்கப் படுகிறார்கள்?”

“நான் அச்சங்களைத் தவிர்த்து விட்டேன். என்னால் அவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. என்னிடம் ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவரும் சக்தியை உணர்கிறார்கள்.”

“உன்னால் இவற்றை சமாளிக்க முடிகிறதா?”

“முடிகிறது. எனக்கு இப்பொழுது அச்சம் எதுவுமில்லை.” எனக்கும் அதைப் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை.

“நல்லது.  நானும் உனக்கு உதவி செய்வேன்.”

“எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடைய ஆசான்.” பதிலளித்தாள்.

--- தொடரும்

 

அத்தியாயம் 13

கேத்தரின் நன்கு குணமாகிவிட்டாள். துன்பங்களைக் கொடுத்த அவளுடைய மனக்கலக்கங்கள் முற்றிலும் விலகிவிட்டன. ஹிப்னாடிஸ அமர்வின்பொழுது அவள் சென்றுவந்த பிறவிகள் திரும்பவும் வரஆரம்பித்தன. நாங்கள் ஒரு இறுதி நிலையை நோக்கிச் செல்வதை உணர்ந்தேன். ஐந்து மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் சிகிச்சை அடுத்த அமர்வோடு முடிந்து விடக்கூடும் என்று நான் நினைக்கவில்லை.

 

“சிற்பவேலைப்பாடுகளைக் காண்கிறேன்.” கேத்தரின் கூற ஆரம்பித்தாள். “சில பொன்னால் செய்யப்பட்டுள்ளன. களிமண்ணைப் பார்க்கிறேன். மக்கள் மண்பாண்டங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவை செந்நிறத்தில் உள்ளன. ஒருவகையான செம்மண்ணை உபயோகிக்கிறார்கள். பழுப்பு நிற கட்டிடத்தைக் காண்கிறேன். அங்குதான் நான் இருக்கிறேன்.”

“நீ கட்டிடத்திற்கு உள்ளே இருக்கிறாயா? வெளியே இருக்கிறாயா?” வினவினேன்.

“உள்ளேதான் இருக்கிறேன். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம்.”

“உன்னைப் பார்க்க முடிகிறதா? உன்னைப் பற்றி விவரமாக கூறு. என்ன உடுத்தி இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்?”

“சிவப்பு நிறத்தில் . . . . . சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி போன்ற உடையணிந்திருக்கிறேன். வேடிக்கையான காலணி அணிந்திருக்கிறேன். பழுப்பு நிற முடியுடன் இருக்கிறேன். ஏதோ ஒரு உருவம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு மனிதனின் உருவம். அந்த மனிதனின் கையில் நீண்ட தடியுள்ளது. மற்றவர்கள் உலோகத்தில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.”

“அது ஒரு தொழிற்கூடமா?”

“இது கற்களால் கட்டப்பட்ட கட்டிடம்.”

“நீ உருவாக்கும் மனிதன், தடியை கையில் வைத்திருக்கும் மனிதன், யாரென்று உனக்குத் தெரிகிறதா?”

“இல்லை. அவன் கால்நடைகளைப் பராமரிப்பவன். . . . . . பசுக்களை பராமரிப்பவன். இங்கு நிறைய சிலைகள் உள்ளன. அதை செய்யும் மூலப்பொருள் வேடிக்கையாக உள்ளது. எளிதில் நொறுங்கிவிடுகிறது.”

“அந்த மூலப்பொருளின் பெயர் தெரியுமா?”

“தெரியவில்லை. சிவப்பு நிறத்தில் இருக்கிறது.”

“நீ சிலையை செய்து முடித்தபிறகு அதை என்ன செய்வார்கள்?”

“விற்றுவிடுவார்கள். சில சிலைகள் சந்தைக்குச் செல்லும். சில சிலைகளை அதிகாரிகளுக்கு பரிசளித்துவிடுவார்கள். மிகவும் நேர்த்தியான சிலைகளை மட்டும் பரிசாக அளித்துவிடுவார்கள். மற்ற சிலைகளை சந்தையில் விற்றுவிடுவார்கள்.”

“உனக்கும் அந்த சிலைகளுக்கும் தொடர்புகள் உண்டா?”

“இல்லை.”

“உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா?”

“ஆமாம்.”

“நீண்டகாலமாக இந்த வேலையைச் செய்கிறாயா?”

“இல்லை.”

“உனக்கு இந்த வேலையில் நல்ல திறமை உள்ளதா?”

“அவ்வளவாக இல்லை.”

“உனக்கு இன்னும் அனுபவம் தேவையா?”

“ஆமாம். நான் இப்பொழுதுதான் இந்த வேலையைக் கற்றுக்கொள்கிறேன்.”

“நீ உன் குடும்பத்துடன் வசிக்கிறாயா?”

“தெரியவில்லை. பழுப்பு நிற பெட்டிகளைக் காண்கிறேன்.”

“பழுப்பு நிற பெட்டிகளா?”

“ஆமாம். அதில் சிறிய கதவு இருக்கிறது. பெட்டிக்குள் சிலைகள் உள்ளன. அவை மரத்தாலான சிலைகள். நாங்கள் பெட்டிக்குள் வைப்பதற்குதான் சிலைகள் செய்யவேண்டும்.”

“அந்த சிலைகள் எதற்காக செய்யப்படுகின்றன?”

“அவை மத சம்பந்தப்பட்ட சிலைகள்.”

“எந்த வகையான மதம்? . . . . . . எப்படிப்பட்ட சிலைகள்?”

“ஏகப்பட்ட விதமான கடவுள் சிலைகள். காக்கும் கடவுள்கள். . . . . . விதவிதமான கடவுள்கள். மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். இங்கு நிறைய பொருட்களை செய்கிறார்கள். நாங்கள் விளையாட்டு பொருட்களையும் செய்வோம். . . . . . போர்டு விளையாட்டுகள். அவற்றில் துளைகள் இருக்கும். விலங்குகளின் தலையுள்ள பொம்மைகளை அந்த துளையில் வைத்து விளையாட வேண்டும்.”

“வேறு ஏதாவது பார்க்க முடிகிறதா?”

“இங்கு மிகவும் வெப்பமாகவும், தூசியாகவும் . . . . . மண்ணாகவும் இருக்கிறது.”

“அங்கு தண்ணீர் கிடைக்கிறதா?” வினவினேன்.

“ஆமாம். தண்ணீர் மலையிலிருந்து வருகிறது.” கேத்தரின் எடுத்திருக்கும் பிறவி எனக்கு முன்பே தெரிந்ததுபோல் இருக்கிறது.

“மக்கள் அஞ்சுகிறார்களா? ஏன்? அவர்களுக்கு மூடநம்பிக்கை அதிகமா?”

“ஆமாம்.” பதிலளித்தாள். “மிகவும் பயப்படுகிறார்கள். அனைவரும் பயப்படுகிறார்கள். எனக்கும் அச்சமாக உள்ளது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நோய் பரவிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.”

“எந்தவிதமான நோய்?”

“ஏதோ மக்களை அழித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் மரணமடைந்துகொண்டிருக்கிறார்கள்.”

“தண்ணீர் மூலம் பரவுகிறதா?”

“ஆமாம். மிகவும் வெப்பமாக இருக்கிறது. நிலம் காய்ந்துபோய் கிடக்கிறது. கடவுளுக்கு எங்கள் மீது கோபம். எங்களை தண்டிக்கிறார்.” அவள் “டெண்ணிஸ்” என்ற மருந்து உட்கொண்ட பிறவிக்கு திரும்பியிருக்கிறாள். ஓசிரிஸ் மற்றும் ஹேதர் என்ற கடவுள்கள் என் நினைவுக்கு வந்தது.

“கடவுளுக்கு ஏன் உங்கள் மீது கோபம்?” பதில் தெரிந்திருந்தாலும் கேட்டேன்.

“நாங்கள் கடவுளது சட்டங்களை மதிக்கவில்லை. அதனால் கடவுள் கோபமாக இருக்கிறார்.”

“எந்த சட்டத்தை மீறிவிட்டீர்கள்?”

“மதிக்கப்படும் துறவிகளுக்குத் தரப்பட்ட சடங்குகளை சரிவர செய்யவில்லை.”

“நீங்கள் கடவுளை எப்படி திருப்திபடுத்துவீர்கள்?”

“நாங்கள் சிலபொருட்களை அணிந்து கொள்ளவேண்டும். சிலர் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். அவை சாத்தான்களிடமிருந்து எங்களைக் காக்கும்.”

“ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு, மக்கள் அதிகம் பயப்படுகிறார்களா?”

“அனைத்து கடவுள்களுக்கும் அஞ்சுகிறார்கள்.”

“கடவுளின் பெயர் உனக்குத் தெரியுமா?”

“எனக்கு எந்த பெயரும் தெரியவில்லை. என்னால் பார்க்க மட்டுமே முடிகிறது. ஒரு கடவுளுக்கு மனித உடலும், மிருகத்தின் தலையும் உள்ளது. மற்றொன்று சூரியனைப்போல் உள்ளது. கருப்பு நிற பறவைபோல் ஒன்று காணப்படுகிறது. அவற்றின் கழுத்தில் ஏதோ கயிறு சுற்றப்பட்டிருக்கிறது.”

“நீ மட்டும்தான் உன் குடும்பத்தில் உயிருடன் இருக்கிறாயா?”

“ஆமாம் நான் இன்னும் மடியவில்லை.”

“ஆனால் உன் குடும்பத்தினர் இறந்துவிட்டனர் அல்லவா?” முன்பு ஒரு அமர்வில் அவள் கூறியதை நினைவுகூர்ந்தேன்.

“ஆமாம். என் தந்தையும், சகோதரனும் இறந்துவிட்டார்கள். என் தாய் உயிருடன் இருக்கிறாள்.”

“உன்னால் மட்டும் எப்படி பிழைக்க முடிந்த்து? நீ செய்தது ஏதாவது உன்னை பிழைக்க வைத்ததா?

“இல்லை.” அவள் சிந்தனை வேறு பக்கம் திரும்பியது. “எண்ணெய் உள்ள ஒரு பாத்திரத்தைக் காண்கிறேன்.”

“வேறென்ன காண்கிறாய்?”

“வெண்ணிறத்தில், பளிங்கினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய வாயுடைய பாத்திரம். அதனுள்ளே எண்ணெய் உள்ளது. அது தலையில் பூசிக்கொள்ளக்கூடிய ஒரு எண்ணெய்.”

“துறவிகள் பூசிக்கொள்ளவா?” பழைய உரையாடல்கள் நினைவுக்கு வந்தன.

“ஆமாம்”

“உன்னுடைய வேலை என்ன?” நீ எண்ணெய் பூசுவதற்கு உதவவேண்டுமா?”

“இல்லை. நான் சிலைகளை உருவாகுகிறேன்.”

“இது, அதே பழுப்புநிறக் கட்டிடமா?”

“இல்லை. . . . . அது அப்புறம். . . . ஒரு கோயில்.” என்ன காரணத்தினாலோ மிகவும் பரபரப்பாக, கலவரத்துடன் காணப்பட்டாள்.

“உனக்கு ஏதாவது பிரச்சனையா?”

“கோயிலில் யாரோ தவறு செய்திருக்கிறார்கள். அது கடவுள்களை கோபமாக்கிவிட்டது. எனக்குத்தெரியவில்லை. . . . .”

“நீ எதாவது தவறிழைத்துவிட்டாயா?”

“இல்லை. இல்லை. . . . சில துறவிகளைக் காண்கிறேன். கடவுளூக்கு பலி கொடுப்பதற்காக ஒரு செம்மறியாட்டைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தலை நன்கு மழிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு முடி சிறிதளவு கூட இல்லை. தலையிலும், முகத்திலும் முடி தென்படவில்லை.” மௌனமானாள். நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று சுறுசுறுப்பானாள். எதையோ உற்றுக்கேட்பதுபோல் தோன்றியது. கரகரப்பான குரலில், வழிகாட்டி ஆவியாகப் பேச ஆரம்பித்தாள்.

 

“இந்தப் பரிமாணத்தில் ஆன்மாக்கள், சரீர நிலையில் உள்ளவர்களிடம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளமுடியும். ஆன்மாக்கள் திரும்பி வரமுடியும். . . . . . . கடமைகளையும், ஒப்பந்தங்களையும் முடிக்கமுடியாத ஆன்மாக்கள் மட்டுமே திரும்பி வரமுடியும். இந்த பரிமாணத்தில் ஆன்மாக்களுக்கும், சரீர நிலையில் உள்ளவர்களுக்கும் பேச்சு தொடர்பு உண்டு. ஆனால் வேறு பரிமாணங்களில் . . . .  . . ஆன்மாக்கள் சரீர நிலையில் உள்ளவர்களிடம் மனதால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அதற்கு பல்வேறுபட்ட வழிகள் உள்ளன. சில ஆன்மாக்களுக்கு ஒளியாக தோன்றுவதற்கு அனுமதியுண்டு. சில ஆன்மாக்கள் பொருட்களை நகர்த்துவதால் தங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். தேவைப்பட்டால் மட்டுமே ஆன்மாக்கள் அந்த பரிமாணத்துக்குச் செல்லும். சரீர வாழ்வில் நிறைவேற்ற முடியாத ஒப்பந்தங்கள் இருந்தால் மட்டுமே இந்த பரிமாணத்துக்குச் சென்று, ஏதோ ஒரு விதத்தில் சரீர நிலையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள முடியும். ஒப்பந்தங்கள், கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். திடீரென்று எதிர்பாராத விதமாக சரீர நிலையை முடித்தவர்கள் இந்த பரிமாணத்துக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு. சிலர் தங்களுக்கு நெருக்கமாக சரீர நிலையில் உள்ளவர்களைக் காண இந்த பரிமாணத்திற்கு வருவார்கள். ஆனால், சரீர நிலையில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள விருப்பப் படமாட்டார்கள். மானுடர்களுக்கு இது மிகுந்த அச்சத்தை அளிக்கும் நிகழ்ச்சி.“ கேத்தரின் மௌனமானாள். ஓய்வெடுப்பதுபோல் தோன்றியது. மீண்டும் மெதுவாக முணுமுணுக்க ஆரம்பித்தாள்.  

“ஒளியைக் காண்கிறேன்.”

“சக்தியைத் தரும் ஒளியையா?”

“மீண்டும் தொடங்குகிறேன். . . . . . மீண்டும் பிறவி எடுக்கிறேன்.”

“சரீர நிலையில் உள்ளவர்கள் இந்த ஒளியை எப்படி உணரமுடியும்? அந்த ஒளியிலிருந்து எப்படி சக்தியைப் பெற்றுக்கொள்வது?”

“அவர்கள் மனதினால் முடியும்.” மென்மையாக கூறினாள்.

“அந்த மனநிலையை எப்படி அடைவது?”

“நன்கு தளர்ந்த ஓய்வுநிலையில் அவர்களால் அந்த மனநிலையை அடையமுடியும். இழந்த சக்தியைப் பெறமுடியும். ஒளியிலிருந்து சக்தியை மீட்டுக்கொள்ள முடியும். நன்கு ஓய்விலிருக்கும் நிலையில், சக்தியை உபயோகிக்காத நிலையில் இழந்த சக்தியை மீட்க முடியும். உறங்கும்பொழுது உனது சக்தி புதுப்பிக்கப்படுகிறது.” அவள் ஆழ்மனநிலையில் இருப்பது புரிந்தது. எனவே கேள்விகளை அதிகப்படுத்தினேன்.

“நீ எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறாய்? அனைத்து பிறவிகளிலும் இந்த பூமிலிலேயே பிறந்திருக்கிறாயா? அல்லது வேறெங்கிலும் பிறந்திருக்கிறாயா?”

“இல்லை. அனைத்து பிறவிகளிலும் இந்த பூமியில்தான் பிறந்திருக்கிறேன்.”

“வேறெந்த பரிமாணங்களில், நிலைகளில் பூமியைத் தவிர வேறு இடங்களில் சஞ்சரித்திருக்கிறாயா?”

“இல்லை. இங்கு பூமியில் என் கடமை இன்னும் பூர்த்தியாகவில்லை. கடமைகள் முடியும்வரை, அனுபவங்கள் பூர்த்தியாகும்வரை பூமியில்தான் இருந்தாகவேண்டும். ஏகப்பட்ட பிறவிகள் . . . . . . எடுத்துக்கொண்டு கடமைகளையும், நேர்ந்த கடன்களையும் சரி செய்ய ஏகப்பட்ட பிறவிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.”

“உன்னால் அதில் முன்னேறி செல்ல முடிகிறதல்லவா?”

“நாம் அனைவரும் முன்னேறித்தான் செல்கிறோம்.”

“எத்தனை முறை இந்த பூமியில் பிறப்பெடுத்திருக்கிறாய்?”

“எண்பத்தாறு தடவைகள்.”

“எண்பத்தாறு தடவைகளா?”

“ஆமாம்.”

“உன்னால் அனைத்தையும் நினைவுகூற முடிகிறதா?”

“முடியும். ஆனால் எனக்குத் தேவையான நேரங்களில் நினைவுகூர முடியும்.”

இதுவரை கிட்டத்தட்ட பத்து, பன்னிரெண்டு பிறவிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறாள். சமீபத்தில் அதே பிறவிகள் நினைவில் மீண்டும் மீண்டும் வருவதுபோல் தோன்றுகிறது. அவளுக்கு மற்ற பிறவிகளின் நினைவுகள் தற்சமயம் தேவையற்றதுபோல் தோன்றுகிறது. அவளுடைய நோயின் உபாதைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் மீண்டிருக்கிறாள். இனி அவளுடைய உடல்நிலை முன்னேற்றத்துக்கு, பழைய நினைவுகளை மீட்டெடுப்பது அவ்வளவாக உதவுமென்று நான் நினைக்கவில்லை. அவளது எதிர்கால முன்னேற்றத்துக்கு என்னுடைய உதவி எதுவும் இனி தேவைப்படாது என்று கருதுகிறேன். மீண்டும் மென்மையாக முணக ஆரம்பித்தாள்.

 

“போதைப்பொருட்களின் உதவியுடன் சிலர் ஆன்மாக்கள் இருக்கும் பரிமாணங்களை அடையமுடிகிறது. ஆனால் தான் எந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்று அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அந்த பரிமாணத்தைத் தொட்டிருக்க அனுமதி கிடைத்திருக்கும்.” நான் போதைபொருட்களின் விளைவுகளைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்டதில்லை. அப்படி கேட்காமல் இருந்தபோதிலும், தானாகவே விழைந்து அவளிடமிருந்து அறிவுரைகளும், செய்திகளும் வருகின்றன.

“உன்னுடைய தற்போதைய சக்திகளின் துணையுடன் உன்னால், பிறவிகளில் முன்னேற முடியாதா? உன் ஆருடம் கூறும் திறமை அதிகரித்துக்கொண்டே வருவதுபோல் தோன்றுகிறது.”

“ஆமாம். அது முக்கியமானதுதான். ஆனால் அது மற்ற பரிமாணங்களில் இருப்பதுபோல் தற்போதைய பிறவியில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. இது வளர்ச்சியின் ஒரு பகுதியே.”

“உனக்கும் எனக்கும் முக்கியமானதா?”

“இல்லை. நம் அனைவருக்கும் இது முக்கியமானது.”

“நம்மால் எப்படி இந்த சக்தியைப் பெற முடியும்?”

“தொடர்புகளின்மூலம் பெறமுடியும். மிகுந்த சக்தி கொண்ட சில ஆன்மாக்கள், சிறந்த ஞானத்துடன் திரும்ப முடியும். அவைகளால் உதவியும், முன்னேற்றமும் தேவைப்படுபவ்ர்களுக்கு அளிக்க முடியும்.” மீண்டும் நீண்ட அமைதியில் ஆழ்ந்தாள். அடுத்த பிறவிக்குள் நுழைந்தாள்.

“பெரிய சமுத்திரத்தைக் காண்கிறேன். சமுத்திரத்தின் அருகே வெண்மையான வீட்டைப் பார்க்கிறேன். கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து செல்கின்றன. கடற்கரை மணத்தை உணர்கிறேன்.”

“நீ அங்கு இருக்கிறாயா?”

“ஆமாம்.”

“வீடு எப்படி காணப்படுகிறது?”

“சிறிய வீடு. அதன் மேற்புறத்தில் கோபுரம் உள்ளது . . . . . . சிறிய சன்னல்கள் இருக்கிறது. அதன்வழியாகக் கடலைப் பார்க்கலாம். அங்கு ஒரு தொலைநோக்கி உள்ளது. அது மரத்தாலும், செம்பாலும் உருவக்கப்பட்டுள்ளது.”

“நீ தொலைநோக்கியை உபயோகப்படுத்துகிறாயா?”

“ஆமாம். கப்பல்களைக் கவனிக்கிறேன்.”

“உன்னுடைய வேலை என்ன?”

“துறைமுகத்திற்கு வரும் எதிரி கப்பல்களைப் பற்றி செய்திகளைத் தரவேண்டும்.” கிறிஸ்டியன் என்ற பெயரில் அவள் இந்த பிறவி எடுத்திருந்ததை நினைவுகூர்ந்தேன். அப்பொழுது நடந்த போரில் அவள் கைகளை இழக்கவும் நேரிட்டது நினைவுக்கு வந்தது.

“நீ கப்பலில் வேலைசெய்யும் மாலுமியா?” உறுதி செய்ய விரும்பினேன்.

“தெரியவில்லை . . . . . இருக்கலாம்.”

“நீ என்ன உடை அணிந்திருக்கிறாய்?”

“வெள்ளை நிற சட்டையும், பழுப்பு நிற குட்டையான பேண்ட்டும் அணிந்திருக்கிறேன். காலணிகளும் அணிந்திருக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பிறகு மாலுமியாக இருந்திருக்கிறேன். ஆனால் நான் இன்னும் மாலுமியில்லை.” அவனால் (கிறிஸ்டியனால்) எதிர்காலத்தைப் பார்க்க முடிந்தது.

“நான் காயப்பட்டிருக்கிறேன்.” வலியில் துடித்தாள். “என் கையில் மிகவும் வலிக்கிறது.” அவள் “கிறிஸ்டியன்” என்ற பிறவிக்கு மீண்டும் சென்றிருக்கிறாள். கடற்போரில் காயப்பட்டிருக்கிறாள்.

“ஏதாவது குண்டு வெடித்திருக்கிறதா?”

“ஆமாம். . . . . . . வெடிகுண்டுகளின் மணத்தை நுகரமுடிகிறது.”

“உனக்கு சரியாகிவிடும்.” என்ன முடிவு நேருமென்று எனக்குத் தெரியும். அவளை ஆசுவாசப்படுத்தினேன்.

“நிறையபேர் இறந்துவிட்டார்கள். பாய்மரம் உடைந்துவிட்டது. துறைமுகம் சேதமடைந்துவிட்டது. பாய்மரத்தைச் சரிசெய்யவேண்டும்.” பதற்றத்துடன் காணப்பட்டாள்.

“உனக்கு சரியாகிவிட்டதா?” வினவினேன்.

“ஓரளவுக்கு சரியாகிவிட்டது. பாய்மரத்தில் உள்ள துணிகளை சரிசெய்வது மிகவும் கடினமாக உள்ளது.”

“உன்னுடைய கைகளால் வேலை செய்யமுடிகிறதா?”

“இல்லை. அடுத்தவர்கள் வேலைசெய்வதைப் பார்க்கிறேன். பாய்மரத்துணி மிகவும் தடிமனாக உள்ளது. தைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. என் கை மிகவும் வலிக்கிறது.”

“உன் கை குணமாகிவிடும். காலத்தில் முன்னோக்கிச் செல். மீண்டும் உன்னால் மாலுமியாக செயல்பட முடிகிறதா?”

“ஆமாம். இப்பொழுது சௌத்வேக்ஸ்-ல் இருக்கிறோம் எங்கள் கடற்கரையை நாங்கள் தற்காத்துக் கொள்ளவேண்டும்.”

“யார் உங்களுடன் போருக்கு வந்திருக்கிறார்கள்?”

“ஸ்பானியர்கள். அவர்களிடம் பெரிய கப்பல் உள்ளது.”

“அடுத்து என்ன நிகழ்கிறது?”

“கப்பலைப் பார்க்கிறேன். துறைமுகத்தைப் பார்க்கிறேன். கடைகள் உள்ளன. அங்கு மெழுகுவர்த்திகள் விற்கிறார்கள். புத்தகங்களும் உள்ளன.”

“நீ புத்தக கடைக்குச் செல்வாயா?”

“ஆமாம். எனக்கு புத்தகங்களை மிகவும் பிடிக்கும். புத்தகங்கள் அற்புதமானவைகள். சிவப்பு நிற புத்தகங்கள் வரலாறு சம்பந்தமானது. அதில் வரைபடங்கள் உள்ளன.” நான் அவளை பெயர் சொல்லி அழைத்தால் அவளது எதிர்வினை எப்படி இருக்குமென்று நினைத்தேன். “கிறிஸ்டியன்.” அன்புடன் அழைத்தேன்.

“சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?” தயக்கமில்லாமல் பதில் வந்தது.

“கிறிஸ்டியன், உன்னுடைய குடும்பம் எங்கே உள்ளது?”

“பக்கத்து நகரில் உள்ளது. நாங்கள் இந்த துறைமுகத்திலிருந்துதான் பயணம் செய்யவேண்டும்.”

“உன் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கின்றனர்?”

“எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் பெயர் மேரி.”

“உன் காதலி எங்கு இருக்கிறாள்?”

“எனக்கு காதலி கிடையாது. . . . . . . ஒரு மாது நகரத்தில் இருக்கிறாள்.”

“வேறு யாரும் முக்கியமானவர்கள் இல்லையா?”

“இல்லை. நான் நிறைய போரில் பங்கெடுத்திருக்கிறேன். ஆனால் நலமாக திரும்பிவிட்டேன்.”

“உனக்கு வயதாகிவிட்டதா?”

“ஆமாம். என் மகனும் ஒரு மாலுமி. ஒரு வளையம். வளையம் கொண்ட ஒரு கரத்தைக் காண்கிறேன். அந்த கரத்தில் ஏதோ ஒன்று உள்ளது.” கேத்தரின் திணற ஆரம்பித்தாள்.

“என்ன? என்ன நிகழ்கிறது?” வினவினேன்.

“கப்பலில் உள்ளவர்களுக்கு ஏதோ நோய் வந்துவிட்டது . . . . . . உணவிலிருந்து பரவிவிட்டது. கெட்டுப்போன உணவை உண்டுவிட்டோம். உப்பு கண்டமிட்ட பன்றி மாமிசம். அவள் திணறுவது தொடர்ந்தது. கிறிஸ்டியனுக்கு மாரடைப்பு வரும்வரை எனக்குத் தொடர விருப்பமில்லை. அதிகமாக களைப்படைந்து விட்டாள். அவளை சமாதி நிலையிலிருந்து மீட்டு அழைத்து வந்தேன்.

 

--- தொடரும்

 

அத்தியாயம் 14

அடுத்த அமர்வுக்கு கேத்தரின் வருவதற்குள் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. எனக்கு உடல்நிலை சரியில்லாததனாலும் கேத்தரின் விடுமுறையில் சென்றிருந்ததனாலும் சற்று தாமதமாகிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் கேத்தரினின் உடல்நிலை முன்னேற்றம் திருப்திகரமாக இருந்தது. ஆனால் இந்த முறை ஹிப்னாடிஸ அமர்வு ஆரம்பித்ததும் கேத்தரினிடம் பதற்றம் காணப்பட்டது. கேத்தரின் தன் மனநிலை மற்றும் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், ஹிப்னாடிஸம் இதற்குமேலும் தனக்கு உதவி செய்யக்கூடும் என்று நினைக்கவில்லை என்று கூறினாள். சாதாரணமாக கேத்தரினுடைய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, சில வாரங்களுக்கு முன்னரே ஹிப்னாடிஸத்தை தவிர்த்திருப்பேன். வழிகாட்டி ஆன்மாக்களிடமிருந்து பெறும் தகவல்களும், கேத்தரினுக்கு இன்னும் இருக்கும் சிற்சில உபாதைகளுமே ஹிப்னாடிஸ அமர்வை தொடர்வதற்கான முக்கிய காரணங்களாகும். கேத்தரின் கிட்டத்தட்ட குணமாகிவிட்டாள். அவளுடைய முற்பிறவி ஞாபகங்களில் நினைவில் வந்த பிறவிகளே, திரும்பவும் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் வழிகாட்டி ஆன்மாக்கள் இனியும் எனக்கு தகவல்கள் கூறவிழைந்தால்? கேத்தரின் உதவியில்லாமல் நாங்கள் எப்படி உரையாடிக் கொள்ளமுடியும்? நான் கட்டாயப்படுத்தியிருந்தால் கேத்தரின் ஹிப்னாடிஸ அமர்வுக்கு ஒத்துக்கொண்டிருப்பாள். ஆனால் அது எனக்கு நியாயமாகப் படவில்லை. வருத்தத்துடன் கேத்தரினுடைய யோசனைக்கு இணங்கினேன். பழைய அமர்வுகளைப் பற்றி விவாதித்தோம். ஆனால் என் மனம் விவாதத்தில் செல்லவில்லை.

 

ஐந்து மாதங்கள் கழிந்தன. கேத்தரினால் அவள் உடல்நிலையில் முன்னேற்றத்தை நன்கு தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. அவளுடைய பயங்களும், பதற்றங்களும் வெகுவாக குறைந்துவிட்டது. அவளுடைய வாழ்க்கையில் நிம்மதி மற்றும் உறவுகளின் நெருக்கம் சிறப்பான நிலையை அடைந்தது. ஸ்டூவர்ட் அவள் வாழ்வில் தொடர்ந்தாலும் அவள் தனக்கு பிடித்தமான துணையை நாடும் முயற்சியில் இருந்தாள். வாழ்வில், முதல்முறையாக மகிழ்ச்சிக்கான அர்த்தத்தை உணர்ந்துகொண்டாள். சில சமயங்கள் வழியிலோ, கேன்டீனிலோ சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதும் டாக்டர், நோயாளிபோல இல்லாமல் நண்பர்கள் போலவே எங்களது உரையாடல்கள் இருந்தன.

 

குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் துவங்கியது. கேத்தரின் மீண்டும் ஒருமுறை என் கிளினிக்கு வந்தாள். அவளுக்கு மீண்டும் மீண்டும் ஒரு கனவு வந்துகொண்டிருப்பதாகக் கூறினாள். பாம்புகள் குழியில் கிடப்பதுபோலவும், மதத்துக்காக ஏதோ பலிகொடுக்கப்படுவதாகவும் கனவு வருவதாகக் கூறினாள். அவளும் பாம்புகளுடன் குழியில் இருப்பதுபோலவும், குழியைவிட்டு மேலே வர தான் முயற்சி செய்யும்பொழுது கனவு கலைந்து விடுவதாகவும் கூறினாள்.

 

நீண்டகால இடைவெளி இருந்தாலும், கேத்தரின் விரைவில் சமாதிநிலையை அடைந்தாள். அவள், உடனடியே பழையகாலத்திற்கு சென்றுவிட்டதில் எனக்கு வியப்பேதுமில்லை.

 

“நான் இருக்கும் இடத்தில் மிகவும் வெப்பமாக இருக்கிறது. இரண்டு கருப்புநிற ஆடவர்களைக் காண்கிறேன். ஈரமாக உள்ள சுவரில் அருகருகே நிற்கிறார்கள். தலையில் ஏதோ அணிந்திருக்கிறார்கள். வலது கணுக்காலில் மணிகள் கோர்த்த கயிற்றை கட்டியிருக்கிறார்கள். கற்களாலும், களிமண்ணாலும் தானியம் சேமிக்கும் கலனை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனுள் கோதுமை, உடைக்கப்பட்ட கோதுமையை கொட்டுகிறார்கள். இரும்பு சக்கரங்களைக் கொண்ட வண்டியில், கோதுமை எடுத்துவரப்படுகிறது. நன்கு நெய்யப்பட்ட துணிகள் அந்த வண்டிக்குள் தென்படுகின்றன. நீலநிறத்தில் நீரைக்காண்கிறேன். யாரோ ஒருவர் அனைவருக்கும் ஆணையிடுகிறார். உணவு களஞ்சியத்துக்குள் செல்ல மூன்று படிகள் உள்ளன. அதற்கு வெளியே கடவுள் சிலை உள்ளது. கடவுள் சிலை, பறவையின் தலையையும், மனித உடலையும் கொண்டுள்ளது. அது பருவகாலங்களுக்கான கடவுள். உணவுகளஞ்சியத்துள் அவர்கள் தார்போன்று ஏதோ அரக்கு வைத்து நன்கு மூடியிருக்கிறார்கள். அப்பொழுதுதான், தானியங்கள் காற்றினால் கெட்டுப்போகாதிருக்கும். என் முகத்தில் அரிக்கிறது. . . . . . . நீலமணிகள் என் கூந்தலை அலங்கரிக்கின்றன. சுற்றிலும் ஈக்களும், பூச்சிகளும் பறக்கின்றன. அதனால் என் கைகளிலும், முகத்திலும் அரிப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முகத்தில் எதையோ தடவிக்கொள்கிறேன் . . . . . . அது மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மெழுகு . . . . . ஒரே நாற்றம்.

 

என் கூந்தல் பின்னப்பட்டிருக்கிறது. பொன்னிறமான கயிற்றால் கட்டப்பட்ட மணிகள் என் பின்னலில் இருக்கிறது. அரசவையில் நான் வேலை செய்கிறேன். ஏதோ விருந்து நடப்பதால் நானும் அங்கு வந்திருக்கிறேன். துறவிகளின் தலையில் எண்ணை பூசப்படுவதைக் காண்பதற்காக வந்திருக்கிறேன். வரப்போகும் அறுவடைக்காக விழா நடத்துகிறோம். மிருகங்கள் பலியிடப்படுகின்றன. நரபலி எதுவும் இல்லை. பலியிடப்பட்ட மிருகங்களின் இரத்தம், வெண்ணிற மண்ணில் ஓடி ஒரு பாத்திரத்தை நிரப்புகிறது . . . . . . ஒரு பாம்பு சிலையின் வாய்ப்புறத்தை அடைகிறது. ஆடவர்கள் சிறிய தங்கத்திலான தொப்பியை அணிந்திருக்கிறார்கள். அனைவருடைய நிறமும் கருப்பாக உள்ளது. கடல் கடந்து அழைத்துவரப்பட்ட அடிமைகளும் இருக்கிறார்கள் . . . . . “

 

அமைதியானாள். பொறுமையாகக் காத்திருந்தோம். வழக்கம்போல திடீரென்று அவளிடம் பரபரப்பு காணப்பட்டது. எதனையோ உற்றுக் கேட்பதுபோல தோன்றியது.

 

“அனைத்தும் விரைவாகவும், சிக்கலான செயல்களாகவும் இருக்கின்றன. . . . . . . வேறு வேறு பரிமாணங்களில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து கூறப்படுகிறது. விழிப்புணர்வும் அதனால் மாற்றங்களும் ஒரு பரிமாணத்தில் ஏற்படுகிறது. கற்றுணர்வதற்காக பிறவி ஒன்றை எடுக்கிறோம். தேவையானவைகளைக் கற்று முடித்தபிறகே அடுத்த நிலையில் உள்ள பிறவி எடுக்கிறோம். ஒரு விஷயத்தை இங்கு நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். கற்றுத்தேறும்வரை அடுத்தகட்ட பிறவிக்கு அனுமதி கிடையாது. அந்த நிலையிலேயே மீண்டும் தொடர நேரிடும். பெற்றுக் கொள்வதற்கும் தெரிந்துகொள்ள வேண்டும். கொடுப்பதற்கும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து கோணங்களிலும் அனுபவங்களைப் பெறவேண்டும். தெரிந்துகொள்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளதால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்மாக்கள் ஈடுபட்டிருக்கின்றன. வழிகாட்டி ஆன்மாக்கள் . . . . . இந்த பரிமாணத்தில் மட்டுமே உள்ளன.”

 

கேத்தரின் நிறுத்தினாள். வழிகாட்டி ஆன்மாவின் குரலில் அறிவுரை வந்தது. வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து எனக்காக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன!

“இப்பொழுது நீ செய்யவேண்டியது இதுதான். உன்னுடைய உள்ளுணர்விலிருந்து நீ கற்றுக்கொண்டாகவேண்டும்.”

நிமிடங்கள் கழிந்தன. கேத்தரின் மென்மையான குரலில் பேச ஆரம்பித்தாள். “கருப்பு நிற வேலியைப் பார்க்கிறேன் . . . . . . வேலிக்குள்ளே கல்லறைகள் உள்ளன. உங்களுடைய கல்லறையும் இருக்கிறது.”

“என்னுடைய கல்லறையா?” கேத்தரின் கண்ட காட்சி என்னை வியப்புள்ளாக்கியது.

“ஆமாம்.”

“கல்லறையில் உள்ளதை படிக்க முடிகிறதா?”

“நோபல் 1668 – 1724. அதில் மலர் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது . . . . . . இந்த இடம் ஃப்ரான்ஸ் அல்லது ரஷ்யா? நீங்கள் சிவப்பு நிற சீருடை அணிந்திருந்தீர்கள். . . . . . . குதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்டீர்கள் . . . . . . தங்கத்தாலான மோதிரம் ஒன்று உள்ளது. அதில் சிங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. . . . . . அது அரசவிருதுக்கான அடையாளம் போல் தோன்றுகிறது.”

 

கேத்தரினிடமிருந்து வேரெந்த வார்த்தைகளும் வரவில்லை. வழிகாட்டி ஆன்மாவின் கூற்றுப்படி, கேத்தரினுடைய நினைவிலிருந்து இனி எந்த அறிவுரைகளும் தொடர வாய்ப்பில்லை. ஹிப்னாடிச அமர்வுகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். அவளுக்கு உடல்நிலை குணமாகிவிட்டது. நினைவுகளை மீட்பதன் மூலமாக பெறவேண்டிய தகவல்களைப் பெற்றுவிட்டேன். எதிர்காலத்தில் என் உள்ளுணர்வின் மூலமாக நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதனையும் உணர்ந்துகொண்டேன்.

--- தொடரும்

 

அத்தியாயம் 15

இறுதி ஹிப்னாடிச அமர்வுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேத்தரினிடமிருந்து ஒரு ஃபோன் வந்தது. ஒரு முக்கியமான விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி கிளினிக்கில் அப்பாய்ன்மெண்ட் வாங்கிக் கொண்டாள்.

 

புதிய பெண்ணாக முழு உடல்நலத்துடன் அவதாரம் எடுத்திருக்கும் கேத்தரின், என் அலுவலகத்திற்கு வந்தாள். புன்னகையுடன் மகிழ்ச்சியான தோற்றத்துடன், மனதின் முழுஅமைதி அவள் தேகமெங்கும் பிரதிபலிக்க கேத்தரினைக் கண்டேன். ஒரு கணம், குறைந்த காலகட்டத்தில் கேத்தரினிடம் ஏற்பட்ட வியக்கத்தகுந்த முன்னேற்றத்தை எண்ணினேன்.

 

கடந்தகால நினைவுகளைக் கூறக்கூடிய “ஐரிஸ் சால்ட்ஸ்மேம்“ என்ற பெயர்பெற்ற ஆரூடம் கூறும் நிபுணரை கேத்தரின் சந்தித்திருக்கிறாள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை உறுதி செய்ய ஆர்வம் கொண்டு கேத்தரின் எடுத்த முயற்சி என்னை வியப்படையச் செய்தது. கேத்தரின் அவ்வாறு செய்வது அவள் மனோதிடத்தை பறைசாற்றுவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

 

ஐரிஸ்-ஐப் பற்றி சிநேகிதர்களிடம் கேட்டறிந்த கேத்தரின், அப்பாயிண்மென்ட் வாங்கிக்கொண்டு ஐரிஸ்-ஐ சந்தித்திருக்கிறாள். ஐரிஸ்-இடம், தனக்கு ஹிப்னாடிசம் மூலமாக நிகழ்ந்தவைகள் எவற்றையும் அவள் கூறவில்லை.

 ஐரிஸ் – கேத்தரினிடம் பிறந்த தேதி, நேரம், மற்றும் பிறந்த இடத்தையும் பற்றி மட்டுமே கேட்டிருக்கிறாள். அதிலிருந்து கேத்தரினுடைய சக்கரத்தை வரைந்து, தன்னுடைய ஆருடம் கூறும் திறமையையும் பயன்படுத்தி, கேத்தரினுடைய கடந்த காலங்களை கூறப்போவதாக ஐரிஸ் கூறியிருக்கிறாள்.

 

கேத்தரின் இத்தகைய ஆருடம் கூறுபவர்களிடம் இதுவரை சென்றதில்லை. ஐரிஸ்-தான் முதல் அனுபவம். அதனால் எப்படி எதிர்பார்க்கலாம் என்று கேத்தரினுக்குத் தெரியவில்லை. ஆச்சரியம் ஏற்படும் வகையில் ஐரிஸ், கேத்தரினுடைய ஹிப்னாடிச மயக்கத்தில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளையும் கூறியிருக்கிறாள்.

 

நட்சத்திர சக்கரத்தின்வழி படிப்படியாக ஐரிஸ் முன்னேறியிருக்கிறாள். ஐரிஸ் ஒரு குறிப்பிட்ட வசிய நிலையை அடைந்தவுடன், மறுநிமிடமே கேத்தரின் பழைய பிறவியில் கழுத்து அறுபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறாள். யுத்ததின் பொழுது அந்த நிகழ்ச்சி நடந்ததாகவும், அந்த சமயத்தில் அந்த கிராமமே பற்றி எரிந்ததாகவும், பல அழிவுகள் ஏற்பட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறாள். கேத்தரின் அந்த பிறவியில் ஒரு ஆண்மகனாக வாழ்ந்ததாகவும் ஐரிஸ்-இடமிருந்து செய்தி வந்தது.

 

அடுத்த நிகழ்ச்சியை கூறும்பொழுது ஐரிஸ்-ன் கண்கள் மின்னியதாக கேத்தரின் குறிப்பிட்டாள். கேத்தரின் ஒரு இளைஞனாக, கடற்படை வீரனுடைய சீருடையுடன், குட்டையான கால்சட்டை மற்றும் பழைய வடிவம் கொண்ட காலணிகளுடன் இருப்பதாக ஐரிஸ் கூறியிருக்கிறாள். திடீரென்று ஐரிஸ் இடது கையில் தாங்கமுடியாத வலியை உணர்ந்து துடித்திருக்கிறாள். மிகவும் கூரான ஏதோ ஒன்று கையில் குத்திவிட்டதாகவும், அது கையைக் காயப்படுத்தி மீளாத வடுவை ஏற்படுத்தியதாகவும் கூறியிருக்கிறாள். ஆங்கிலேய கடற்கரை அருகில் அந்த நிகழ்ச்சி நடந்ததாகவும், அதன் பிறகு மாலுமியாக வாழ்ந்ததையும் விவரித்திருக்கிறாள்.

 

கேத்தரினுடைய பழைய பிறவிகளின் ஞாபகங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐரிஸ் தொட்டிருக்கிறாள். வறுமையில் மடிந்த சிறுவனைப் பற்றியும், ஆரூடம் பார்க்க விரும்பிய பிறவியையும், நீலநிற ஆபரணங்களை விரும்பியதையும் கூறியிருக்கிறாள். ஒரு பிறவியில் ஸ்பேனிய பெண்ணாக, வேசியாக வாழ்ந்ததையும் அப்பொழுது அவள் பெயர் “ ” என்ற எழுத்தில் துவங்கியதையும் அவளால் கூறமுடிந்திருக்கிறது. அச்சமயத்தில் ஒரு வயதானவருடன் வாழ்ந்ததையும் குறிப்பிட்டிருக்கிறாள்.

 

மற்றொரு பிறவியில் ஒரு செல்வந்தருக்கு முறைதவறி பிறந்த பெண்ணாக பிறப்பெடுத்திருந்ததாக ஐரிஸ் கூறியிருக்கிறாள். அந்த பிறவியில் கேத்தரினுடைய திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறினாள். அச்சமயத்தில் கேத்தரினுக்கு விலங்குகளின் மீது அன்பு அதிகமாக இருந்ததாகவும், குதிரைகளை மிகவும் நேசித்ததாகவும் கூறினாள். மனிதர்களைவிட விலங்குகளை மிகவும் நேசித்ததாகக் கூறினாள்.

 

கேத்தரின் மொரோக்கோவில் சிறுவனாக பிறந்தது, எகிப்தில் மம்மிகளை பதப்படுத்தும் பிறவி, ஸ்விட்சர்லேந்தில் சர்ச்சில் வேலை செய்த பிறவி, ஃப்ரான்சில் குகைக்குள் வசித்த பிறவி, ஜெர்மனியில் போர்வீரனாக இருந்த பிறவி அத்தனையும் ஐரிஸினால் கூற முடிந்திருக்கிறது.

 

ஐரிஸ் நுணுக்கமாக, பிழையில்லாமல், பிறவிகளைப் பற்றிக் கூறியது என்னை வியப்புக்குள்ளாக்கியது. கேத்தரின் ஹிப்னாடிஸ நிலையில் கூறிய பழைய நினைவுகளின் திகைப்பிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை.

 

எப்படி இருப்பினும் ஐரிஸிடம் ஏற்பட்ட அனுபவத்தை நான் ஒரு அறிவியல்பூர்வமான நிரூபணம் என்று ஒத்துக்கொள்ள முடியாது. நடக்கும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் சக்தி எனக்குக் கிடையாது. ஆனால் இப்படி நடந்திருக்கிறது என்று கூறுவதற்காகத்தான் இந்த நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

 

ஐரிஸை காணச்சென்ற நேரத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை ஐரிஸுக்கு அடுத்தவர்களின் எண்ணங்களை படிக்கும் திறமை இருந்திருக்கலாம். அதன்மூலம் கேத்தரினுடைய மனதில் இருப்பதை அறிந்திருக்கலாம். அல்லது உண்மையிலேயே பழைய பிறவிகளை காணக்கூடிய சக்தி ஐரிஸ் பெற்றிருக்கலாம். எப்படி இருப்பினும் ஹிப்னாடிசம் மூலம் பெறப்பட்ட தகவல்களும், நட்சத்திர சக்கரம் மூலம் பெறப்பட்ட தகவல்களும் ஒத்துப்போகின்றன. அதாவது இரண்டு விதமான வழிகளில் பெறப்பட்ட தகவல்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

 

ஆனால் ஐரிஸின் திறமைகளை வெகுசிலரே பெற்றிருக்கின்றனர், ஜோதிடத்தில் திறமை இருப்பதாக கூறிக்கொள்பவர்களில், அதிகமானோர், மக்களிடம் இந்த மாதிரியான தெரியாத விஷயங்களில் உள்ள அச்சத்தையும், ஆர்வத்தையும் தங்களுடைய சொந்த அனுகூலங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டதுபோல் கணிசமான மக்கள் இத்தகைய தொழில்களில் ஈடுபடுகிறார்கள். “ஷர்லி மெக்லைன்” எழுதிய “(            ) தொடர்ந்து கூட்டுக்கு வெளியே” புத்தகம் பிரபலமான பிறகு ஆவியுடன் பேசுபவர்கள் என்று கூறிக்கொண்டு வியாபாரம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. அத்தகையோர், கண்ணையும் கருத்தையும் கவரும் வார்த்தை ஜாலங்களுடன், சொந்த குரலில் பேசாமல் வேறொரு குரல் ஓசையுடன், மக்களை தம்வசப்படுத்த முயற்சிக்கிறார்கள் “இயற்கையோடு நீங்கள் இணைந்து வாழாவிட்டால், இயற்கையும் உங்களோடு இணைந்து வாழ விழையாது” போன்று அழகான வசனங்களுடன் தன்னிலை மறந்த தோற்றத்துடன் விளம்பரம் தருகிறார்கள். அவர்கள் தரக்கூடிய செய்திகள் மேலோட்டமானதாகவும், அனேகமாக அனைத்து மக்களுக்கும் ஒத்துவரக்கூடிய செய்திகளையும் தருகிறார்கள். அவர்கள் தரக்கூடிய செய்திகளும், ஆன்மீகமயமாக இருப்பதனால், அதன் உண்மையை மதிப்பீடு செய்வதும் சிரமமான காரியம். அத்தகைய களைகளை நீக்குவது இந்த துறை முன்னேற்றத்திற்கு மிகமுக்கியமானதொன்றாகும். இத்துறையில் விருப்பத்துடன் கடமையாற்றும் மனோதத்துவ நிபுணர்கள் மனோவியாதி உள்ளவர்களையும், பொருளீட்டுவதற்காக நடிப்பவர்களையும் சமூக நலனுக்கு எதிரான விளைவுகளைத் தருவதற்காக புறப்பட்டவர்களையும் கண்டறிந்து, கணித்து நீக்கவேண்டும். மருத்துவர்களும், புள்ளிவிபர நிபுணர்களும், மனோவியலாளர்களும் சேர்ந்து இந்த பணியினை மேற்கொண்டு முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

 

இந்த துறையை நெறிமுறைப்படுத்தி அறிவியல் முறைப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது அவசியம். அறிவியலில் முதலில் ஒரு கொள்கை இருப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாக யூகித்துக்கொள்வார்கள். அந்த கொள்கையை பிறகு சோதனைகள் மூலம் நிரூபித்து, கொள்கை சரியானதா அல்லது அதில் மாற்றங்கள் உள்ளனவா என்று உறுதி செய்வார்கள். ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் சோதனைகளைச் செய்து சரியான கொள்கையை உறுதிபடுத்த வேண்டும்.

 

டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் பிரைன், வெர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அயன் ஸ்டீவன்சன், நியூயார்க் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஜெர்ட்ரூட் ஸ்கிமெய்ட்லர் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளை இத்துறையில் செயல்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்.     

 

--- தொடரும்

அத்தியாயம் 16

கேத்தரினுடைய சிகிச்சையின்பொழுது ஏற்பட்ட நம்பமுடியாத அனுபவங்களுக்குப் பிறகு நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. அந்த அனுபவங்கள் எங்களது வாழ்க்கை முறைகளை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கேத்தரின் சிலசமயங்களில், சாதாரணமாக எங்கள் அலுவலகத்துக்கு வந்து நலன் விசாரித்துச் செல்வாள். ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் பகிர்ந்துகொள்வாள். மீண்டும் பழைய நினைவுகளை பற்றித் தெரிந்துகொள்ள அவள் விரும்பியதில்லை. எங்களது பணி முடிந்துவிட்டது. வாழ்க்கையை உற்சாகத்துடன் கேத்தரின் எதிர்நோக்க ஆரம்பித்திருக்கிறாள். அவளை பீடித்திருந்த மனநோய் முற்றிலுமாக விலகிவிட்டது. தற்பொழுது அவளுக்கு இருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அவள் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. இப்பொழுது உடல்நலத்தைப் பற்றியோ, மரணத்தைப் பற்றியோ அவள் கவலை கொள்வதும் கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று உணர்ந்து, மனதுக்கிசைந்து இணக்கமாக வாழ்கிறாள்.  அனைவரும் விரும்பினாலும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் மனநிம்மதி அவளுக்கு கிடைத்திருக்கிறது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருக்கிறாள். கேத்தரினைப் பொறுத்தவரை நடந்ததெல்லாம் உண்மைதான். அவளுக்கு அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தானும் உலகின் ஒரு அங்கமாக இருப்பதை உணர்ந்து ஒத்துக்கொள்கிறாள். ஆரூடம் கற்றுக்கொள்ள இப்பொழுது அவள் விரும்பவில்லை. ஆரூடம் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்வதல்ல என்று எண்ணுகிறாள். மரணத்தில் விளிம்பில் இருப்பவர்களும், அந்த நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தினர்களும் அவளிடம் பேசவிரும்பியிருக்கிறார்கள். அவர்களை அவள் காந்தம்போல் கவர்ந்திருக்கிறாள். அவர்களுடன் அமர்ந்து அவள் உரையாடுவது அவர்களுக்கு நிம்மதி அளிக்கிறது.

 

என் வாழ்க்கையும், கேத்தரினுடைய வாழ்க்கையைப்போல் திசைமாறிவிட்டது. என் உள்ளுணர்வை அதிகமாக உபயோகப்படுத்துகிறேன். மறைந்திருக்கும் உண்மைகள் எனக்குப் புலனாகின்றன. எனது நோயாளிகள், நண்பர்கள் மற்றும் சகஊழியர்களின் மறைந்திருக்கும் பிரச்சினைகளை அறிந்து உதவ முடிகிறது. அவர்களைப்பற்றி, தேவை ஏற்படுவதற்கு முன்பே நான் அறிந்துள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் இலக்குகள், மனித நேயம் வழி மாறிவிட்டன. பொருட்களை சேமிக்கும் எண்ணங்கள் விட்டொழிந்தன. ஆரூடம் சொல்பவர்கள், ஆவியுடன் பேசுபவர்கள் போன்றவர்களுடன் என் தொடர்பு அதிகமாகிவிட்டது. அவர்களுடைய தகுதியையும் திறமையையும் கணிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த பணியில் என் மனைவி கரோலும் என்னுடன் சேர்ந்துகொண்டாள். மரணமடையும் தருவாயில் உள்ளவர்களுக்கு கருத்துரை மற்றும் புத்திமதிகள் வழங்குவதில் அவள் திறமை அதிகரித்துள்ளது. தற்சமயம் எய்ட்ஸ் மூலம் இறப்பவர்களுக்காக உதவி செய்யும் ஒரு குழுவை ஏற்படுத்தி நடத்திவருகிறாள்.

 

தற்சமயம் ஹிந்துக்கள் மற்றும் சிவப்பிந்தியர்களிடம் மற்றுமே பழக்கமாக இருக்கும், முன்னோருடன் பேசுதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டுவருகிறேன். கேத்தரினிடமிருந்து பெற்று கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று உணர்ந்ததாலும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதாலும் இப்பொழுதெல்லாம் மிகவும் பொறுமையைக் கடைபிடிக்கிறேன். அன்பும், மனித நேயமும் என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. என் செயல்களில் உயர்ந்தவைகள், தாழ்ந்தவைகள் அனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன். அனைத்து செயல்களுக்கும் நான் பதில்கூறியாகவேண்டும். நற்செயல்களோ, தீயசெயல்களோ, நாம் செய்யும் செயல்கள் யாவும் நம்மிடமே மீண்டும் வந்து சேரும் என்பது உண்மை. 

 

நிபுணர்களின் ஆய்வரங்குகளில் நான் அறிவியல் கட்டுரைகளை, இன்றளவும் சமர்ப்பித்துக்கொண்டு வருகிறேன். மனோதத்துவப் பிரிவையும் தலைமையேற்று நடத்திவருகிறேன். இருவேறுபட்ட உலகங்களில் வாழ்கிறேன். நமது ஐம்புலன் களால் அறியப்படும் இந்த உலகிலும், ஆன்மாக்களினால் மட்டுமே உணரப்படும் ஆன்மீக உலகிலும் வாழ்கிறேன். இரண்டு உலகங்களும் சக்தியால் பிணைந்திருப்பதை நான் அறிவேன். இருப்பினும் இரண்டுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு உலகங்களுக்கும் அறிவியல் மூலம் ஒரு பிணைப்பினை உறுதி செய்ய வேண்டியது என் கடமை.

 

எனது குடும்பமும் வளர்ந்துவிட்டது. எனது மனைவி கரோலும், மகள் ஏமியும் ஆருடம் சொல்வதில் சராசரியைவிட குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியிருக்கிறார்கள். விளையாட்டுபோல் அவர்கள் அந்த திறமையை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மகன் ஜோர்டன், கவர்ந்திழுக்கக்கூடிய சக்தியுடைய பதின்மவயதினனாக வளர்ந்துவிட்டான். இயற்கையாகவே ஆளுமை குணத்தைப் பெற்றிருக்கிறான். நான் வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்வது குறைந்துவிட்டது. சில சமயங்களில் விசித்திரமான கனவுகள் என்னை ஆட்கொள்கிறது.

 

கேத்தரினுடைய சிகிச்சை முடிந்து பல மாதங்களுக்குப் பிறகு, தூங்கும் நேரத்தில் ஒரு வினோதமான பழக்கம் எனக்குள் ஒட்டிக்கொண்டது. ஒரு ஆசிரியரிடம் நான் கேள்விகள் கேட்பதுபோன்று தெளிவான கனவு தோன்றும். அந்த ஆசிரியரின் பெயர் ஃபிலோ. விழித்தபிறகு அந்த கனவுகளில் தோன்றுபவைகளையும், விளக்கங்களையும் எழுதிவைக்க முற்பட்டேன். சில உதாரணங்களைத் தருகிறேன். அந்த கனவுகள் எனக்கு வழிகாட்டி ஆன்மாக்களின் செய்திகளை நினைவுறுத்தின.

 

“ஞானம் பெறுவது பொறுமையாக நடைபெரும் செயல். அறிவு பூர்வமாக பெற்றுக்கொள்வது, உணர்வு பூர்வமாக ஆழ் மனதுக்குச் செல்ல வேண்டும். ஆழ்மனதுக்குச் செல்லும் விஷயங்கள் நிரந்தரமாகப் பதிந்துவிடும். பழக்கங்களே இத்தகைய நிரந்தர பதிவுக்கு வினையூக்கி. செயல்முறைபடுத்தப்படாத எந்த விஷயங்களும் மறைந்துவிடும். நினைவில் நிற்காது. செயல்முறை வடிவம் பெறாத எந்தவிதமான ஏட்டுக்கல்வியும் பயனளிக்காது.”

சம நிலையும், அமைதியும் இன்றைய வாழ்வில் ஒத்துக்கொள்ளப்படுகின்றன. முக்தி பெற அதுவே அடிப்படை. ஆனால் அனைத்து செயல்களும் தேவைக்கு அதிகமாகவே நடத்தப்படுகின்றன. உண்பது கூடியதால் உடல் எடை அதிகமாகிறது. அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அல்லது அதிகமாக ஓய்வெடுக்கிறார்கள். மக்களிடம் இரக்கத்தன்மை குறைந்துவிட்டது. மது, மாது, புகை,போதைப்பழக்கம், தேவையில்லாமல் பேசுதல், கவலைகள் அதிகமாகிவிட்டன. நடுநிலை தவறியவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களை சிந்திக்க மறுக்கிறார்கள். இக்கரை அல்லது அக்கரை என்று வாழ்கிறார்கள். இது இயற்கைக்கு மாறானது.

 

“இயற்கை சமநிலையைக் கொண்டது. உயிரினங்கள் சிறிய அளவில் அதனை சலனப்படுத்துகின்றன. அவை சுற்றுச்சூழலை முற்றிலுமாக மாற்றிவிடமுடியாது. தாவரங்கள் உணவாகி அழிகின்றன. மீண்டும் வளர்கின்றன. வாழ்வாதார உணவுகள் உண்ணுவதால் குறைந்தாலும் மீண்டும் நிரப்பப்பட்டுவிடுகிறது. மலர்கள் ரசிக்கப்படுகிறது. பழங்கள் உண்ணப்படுகிறது. ஆனால் வேர்கள் பாதுகாக்கப்படுகிறது.”

 

“மனித இனம் சமநிலையை உணரவும் இல்லை; அதனால் நடைமுறைப்படுத்தவும் இல்லை.  பேராசையாலும், அச்சத்தாலும் அவர்களுடைய இலட்சியங்கள் வழிநடத்தப்படுகிறது. இது அவர்களைத் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள காரணமாகிவிடும். ஆனால் தாவரங்கள் அழியாது. இயற்கை மாறப்போவதிலை.”

 

“எளிமையே மகிழ்ச்சியின் வேர்கள். தேவைக்குமேல் தோன்றும் எண்ணங்களும், செயல்களும் ஆனந்தத்தைக் குறைத்துவிடும். பேராசை வாழ்வுக்கு அடிப்படையான சிந்தனைகளை மூடி மறைத்துவிடும். அடுத்தவர்களிடம் இரக்கம் கொண்டு, ஈந்து வாழ்வதற்கு இதயமானது அன்பு மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்க வேண்டுமென்று ஆன்மீகவாதிகள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையே. அத்தகைய நற்குணங்கள் சமநிலைக்கும், இணக்கமாக வாழும் நிலைக்கும் நம்மை எடுத்துச் செல்லும். அனைவரும் அத்தகைய கூட்டு மனநிலையை அடைய வேண்டும். இன்றைய சூழலில் மனிதன் ஒரு மாறுபட்ட மனநிலையில் இருக்கிறான். இயற்கை நிலையிலிருந்து பிறழ்ந்து வாழ்வதுபோல் உள்ளது. அன்பு, ஈகை, எளிமை போன்ற புனிதமான எண்ணங்களினால் மட்டுமே அச்சத்தை நீக்கி நிறைவான நிலையை அடைய முடியும்.”

 

“அத்தகைய நல்ல நிலையை ஒருவர் எப்படி அடைவது? அப்படி அடைந்தாலும், எப்படி அந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்வது? இதற்கான தீர்வு மிகவும் சுலபமானது. அது அனைத்து மதங்களும் கூறக்கூடிய பொதுவான கொள்கையே. மனிதனின் ஆன்மா அழிவற்றது. கற்றுக்கொள்ளவே நாம் இங்கு வந்திருக்கிறோம். நாம் அனைவரும் பாடசாலையில் பயில வந்திருக்கிறோம். அழிவற்ற நிலையில் நம்பிக்கை கொண்டால் அந்த நிலையை அடைவது எளிதாகும்.”

 

“மனிதனின் ஆன்மா அழிவற்றதென்றால் ஏன் நமக்கே நாம் தீங்கிழைத்துக்கொள்கிறோம்? சுயலாபத்துக்காக அடுத்தவர்களுக்கு தீங்கிழைத்தால், உண்மையில் நாம் கற்க வந்தவைகளில் தோல்வி அடைவதாக அல்லவா இருக்கிறது! நாம் அனைவரும் சென்று சேருமிடம் ஒரே இடம். ஆனால் வேறு வேறு வேகத்தில் செல்கிறோம். ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை.”

 

“கற்றுணர்ந்தவைகளை நினைத்துப் பாருங்கள். நமக்குத் தேவையான அறிவார்ந்த பதில்கள் எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் செயல்கள் மூலமே அவற்றை நாம் மெய்யாக்க முடியும். செயல்முறைப்படுத்துதலே ஆழ்மனதில் நல்லெண்ணங்களைப் பதியவைக்கும் திறவுகோல். நினைவில் நிறுத்துதல் மட்டுமே போதுமானது கிடையாது. செயல்முறைப்படுத்தாமல் உதட்டளவில் மட்டுமே இருப்பது எதற்கும் உதவாது.”

 

“அன்பு, ஈகை, நம்பிக்கைகளைப் பற்றி பக்கம் பக்கமாக படித்தலும், பேசுதலும் மிகவும் எளிது. ஆனால் அவற்றை உணர்வதற்கும், செயல்முறைபடுத்துவதற்கும் நாம் மேன்பட்ட மனநிலையை அடையவேண்டும். உணர்வுகளுக்கு வசப்பட்ட நிலையில் செய்வதோ, மதுவினாலோ, போதை மருந்துகளாலோ அத்தகைய நிலையை அடைவது வேண்டதக்கதல்ல. புரிந்துணர்வினாலும், அறிவினாலும் மட்டுமே அத்தகைய நிலையை அடைய முடியும். நடைமுறையில் செயல்படுத்துவதன் மூலமே அந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளமுடியும். அனுதினமும் அத்தகைய நல்லெண்ணங்களை பழக்கமாக்கிக் கொள்வது மனிதனை மேன்பட்ட நிலையில் நிறுத்த உதவும்.”

 

“ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்று புரிந்துகொள்ளுங்கள்; உணர்ந்துகொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒரே தோணியில் துடுப்பிட்டுப் பயணிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து துடுப்பைச் செலுத்தாவிட்டால், நாம் அழிந்து நம் கலன் மட்டும் தனித்துவிடப்பட்டுவிடும்.”

 

மற்றொரு இரவு, வேறொரு கனவில் நான் கேள்வியை எழுப்பினேன். “மக்கள் அனைவரும் எப்படி சமமானவர்கள் என்று கூற முடியும்? கண்ணுக்குத் தெரியும் முரண்பாடுகள் அத்ற்கு எதிராகக் கூறுகின்றனவே. வேறுபட்ட திறமைகள், குணநலன்கள், கோபதாபங்கள், அறிவுக்கூர்மை என்று எண்ணற்ற வேறுபாடுகள் பார்த்தாலே தெரிகின்றனவே.”

 

பதில் ஒரு உருவகமாக வந்தது. “ஒவ்வொருவரிடமும் ஒரு பட்டை தீட்டப்படாத வைரம் ஒளிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வைரத்தின் ஒவ்வொரு முகத்தையும் பட்டைதீட்டி ஒளிரச்செய்வதே ஆன்மாவின் பணி ஆகும்.”

 

“வைரத்தின் சில முகங்கள் பட்டை தீட்டப்பட்டிருக்கலாம்; சில முகங்கள் பட்டை தீட்டப்படுவதற்காகக் காத்திருக்கலாம்; எப்படியிருப்பினும் ஒவ்வொருவரிடமும் மாசற்ற வைரம் உள்ளது. ஆனால் அனைத்து வைரங்களும் ஒரே மாதிரியானவை.”

 

“அனைத்து முகங்களிலும் பட்டைதீட்டப்பட்ட வைரம், ஒளி ஊடுருவும்பொழுது ஒவ்வொரு முகங்களிலும், ஒளிக்கற்றைகளைச் சிதறடித்துப் பிரகாசிக்கிறது. பிரகாசமான ஒளியை மட்டுமே இறுதியில் காண முடிகிறது. உண்மையான சக்தி வானவில்போன்ற பிரகாசமான ஒளியில் இறுதியில் கிடைக்கிறது. அந்த ஒளியில் ஞானமும், முக்தியும் அமைந்திருக்கிறது.”

 

சில சமயங்களில் விடைகளைவிட வினாக்களே சிக்கல் மிகுந்தவைகளாக அமைந்துவிடுகின்றன.

 

கனவில் என் கேள்விகளைத் தொடர்ந்தேன். “நான் என்ன செய்யவேண்டும்? என்னால் நோயாளிகளைக் குணப்படுத்தமுடியும். அவர்களுடைய வலிகளைப் போக்கமுடியும். என்னால் கவனிக்க முடியாத எண்ணிக்கையற்ற நோயாளிகள் வருகிறார்கள். நான் களைப்படைந்துவிடுகிறேன். என்னால் கவனிக்கமுடியாது என்று கூறமுடியுமா?”

 

“உங்களுடைய பங்கு பாதுகாவலனாக இருப்பது கிடையாது.”

 

ஒருநாள் காலை ஆறுமணிக்கு கனவிலிருந்து விழித்தெழுந்தேன். கனவில் மனோதத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த உரையினைக் கீழே கொடுத்துள்ளேன்.

 

“மனித குலத்தின் நோய்களை அறிந்துகொள்ளும் விஷயத்தில் உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் யாவும் அற்புதமாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தத் தொழில்நுட்பம், மனிதப் பண்புகளைக் கொண்ட மருத்துவர்களுக்கு மாற்று கிடையாது. அது ஒரு கருவி மட்டுமே. மனநல மருத்துவப்பிரிவில் இன்னும் திறம்பட செயல்படமுடியும். நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள். இந்த நிலையிலிருந்து நாம் பிறழ்ந்துவிடக்கூடாது.”

 

சில சமயங்களில் என்னை அந்தக் கனவுகள் தொடர்கின்றன. தேவையான நேரங்களில் கனவுகளிலிருந்து பிரச்சனக்குத் தீர்வுகள் கிடைக்கின்றன. அந்தத் தீர்வுகள் என்னுடைய சிகிச்சைகளிலும் பலனளிக்கின்றன. என் உள்ளுணர்வுகளால் கிடைக்கும் தீர்வுகள் என்னை மனம் நெகிழச்செய்கின்றன. என்னைப்பொறுத்தவரை நான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன் என்று அந்தத் தீர்வுகளின் முடிவுகள் எனக்குத் தெரியப்படுத்துகின்றன.

 

என்னுடைய உள்ளுணர்வுகளையும் நான் கவனித்துப் பார்க்கிறேன். அதன் வழி செயல்படும்பொழுது, அவை சரியான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இல்லையேல் நான் விரும்பாத விளைவுகளைச் சந்திக்கிறேன்.

 

இன்னும் என்னைச் சுற்றி வழிகாட்டி ஆன்மாக்கள் இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய கனவுகளும், உள்ளுணர்வுகளும் அவைகளுடைய உந்துதலால் ஏற்படுகின்றனவா என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் இருக்குமென்று நான் நம்புகிறேன்.

 

--- தொடரும்

 

இறுதியுரை

நூல் முடிந்துவிட்டது. ஆனால் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. கேத்தரின் அவளுக்கிருந்த பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாள். பிரச்சனைகள் எதுவும் மீண்டும் தலைகாட்டுவதில்லை. நான் என்னுடைய நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பழைய முற்பிறவி நினைவுகளைத் தூண்டும் சிகிச்சையை நான் கீழ்கண்ட நோயாளிகளுக்கே பரிந்துரைக்கிறேன் – நோயாளிகளுக்கு பிறசிகிச்சைகள் அளிக்கும் பலன்கள், அவர்களின் நோயின் அறிகுறி, சிகிச்சைக்கு நோயாளிகளுடைய ஒப்புதல், எளிதில் ஹிப்னாடிஸத்தில் சமாதி நிலையை அவர்கள் அடையும் தன்மை, மற்றும் என்னுடைய உள்ளுணர்வின் தாக்கம் முதலியவற்றைக் கண்டு ஆராய்ந்த பிறகே, நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சை தேவையா இல்லையா என்று தீர்மானிக்கிறேன். கேத்தரினுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு முற்பிறவி நினைவுகளைத் தூண்டி குணப்படுத்தியிருக்கிறேன். இந்த நோயாளிகளில், எவரும் நடவாத ஒன்றை நடந்ததாக நினைத்துக் கூறுபவர்களோ, மனநிலை பிறழ்ந்தவர்களோ, ஒருவரே பல்வேறுபட்ட மனிதர்களாக நினைத்துக்கொள்பவர்களோ கிடையாது. அனைவரும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தனர்.

 

குணமான பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளும், விதவிதமான சூழ்நிலைகளை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் மியாமி கடற்கரைப் பகுதியிலிருந்து வந்த யூதப்பெண்மணி. அவள் பழைய பிறவியில் ஏசு மறைந்த சில வருடங்களில் சில ரோமானிய சிப்பாய்களால் கெடுக்கப்பட்டிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், நியூஓரிலினில் ஒரு விடுதியை நடத்தியிருக்கிறார். ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஃப்ரான்சில் சர்ச்சில் இருந்திருக்கிறார். ஒரு பிறவியில் ஜப்பானில் பிறந்து கடினவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

 

கேத்தரினைத் தவிர ஒரே ஒருவர் மட்டும், இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் உள்ள காலத்தில் செய்திகளை அளித்திருக்கிறார். அவரது செய்திகள் ஆரூடம் கூறுவதுபோல் அமைந்திருந்தன. அவரும் அதிகமாக தன்னுடைய கடந்த காலங்களைப் பற்றியே கூறினார். அவரால் எதிர்காலத்தைப் பற்றியும் சரியாகக் கணிக்கமுடிந்தது. அவரிடமிருந்து கிடைத்த செய்திகள், ஒரு குறிப்பிட்ட ஆன்மாவிடமிருந்தே வந்தன. தற்சமயம் அவருடைய அமர்வினை கட்டுரைகளாகத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் ஒரு அறிவியலாளர்தான். அவர் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தொகுத்து, சோதனை செய்து உண்மைகளை வகைப்படுத்த வேண்டும். அவரைத் தவிர மற்றவர்கள் உடலைவிட்டு வெளியே மிதந்து பிரகாசமான ஒளியைக் கண்டதைத் தவிர வேரெந்த விஷயங்களையும் கூற இயலவில்லை. மற்றவர்களிடம் இறப்புக்கும், மறுபிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் எனக்கு எந்தவித தகவல் பரிமாற்றங்களும் நிகழவில்லை. ஆனாலும் அனைவரும் தங்களுடைய பழைய பிறவிகளைப் பற்றித் தெளிவாக நினைவு கூறினார்கள். ஒரு திறமையான பங்குத்தரகர், இங்கிலாந்தில் ஒரு இனிமையான ஆனால் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். கலை சம்பந்தமான ஒருவர் ஸ்பானிய சிப்பாய்களால் கொடுமைப் படுத்தப்பட்டிருந்தார். ஒரு உணவு கடை உரிமையாளர், எப்பொழுதும் சுரங்கப்பாதை வழியாகக் கார் ஓட்டுவதற்கு அச்சம் கொண்டிருந்தார். அவர் பழைய பிறவியில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தார். ஒரு இளம்மருத்துவர் கடலில், படகில் தத்தளித்திருந்தார். தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒருவர் 600 வருடங்களுக்கு முன் பயங்கர வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். நோயாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

 

இந்த நோயாளிகள் தங்கள் பிரச்சனைக்குரிய பிறவியைத் தவிர மற்றப் பிறவிகளையும் நினைவு கூர்ந்தார்கள். அவர்கள் பிரச்சினைக்குரிய பிறவி நினைவு வந்ததும், அவர்களுடைய பிரச்சனைகள் அவர்களை விட்டு விலகிவிட்டன. அவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் முற்பிறவிகளில் வாழ்ந்ததாக இப்பொழுது ஒத்துக்கொள்கிறார்கள். மீண்டும் அவர்களுடைய பிறவிகள் தொடரும் என்றும் நம்புகிறார்கள். மரணத்தைப் பற்றிய அவர்களுடைய பயம் குறைந்து விட்டது.

 

ஒவ்வொருவருக்கும், பழைய பிறவிகளூக்குச் செல்லும் சிகிச்சை அளிக்கப் படவேண்டுமென்று அவசியம் இல்லை. தாங்க முடியாத பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மட்டும், விரும்பினால் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஏனையவர்கள் திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே போதுமானது. வாழ்க்கை என்பது நாம் கண்களால் காண்பது மட்டும் கிடையாது. அது நமது ஐம்புலன்களையும் தாண்டிச் செல்கிறது. அனுபவங்களையும் அறிவையும் நோக்கிச் செல்லுங்கள். ஞானத்தின் மூலம் இறைவனை அடைவது நம்முடைய பணி.

 

இந்த நூல், என்னுடைய மருத்துவ தொழில்முறையில் எனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தினாலும் இனி எனக்குக் கவலையில்லை. நான் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அதைவிட முக்கியமானவை. இந்த செய்திகள் அனைவரையும் அடைந்தால் அது நான் இங்கு நோயாளிகளுக்குப் பணிசெய்வதைவிட அதிக பலனைத் தரக்கூடியது.

 

வாழ்வில் மரணத்தைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கு இந்த நூல் உங்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறேன். வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து அடுத்தவர்களிடம் அன்புகாட்டி, மனஅமைதி பெற்று, இணக்கத்துடன் முழுமையாக வாழ்வதற்கு தரப்பட்ட செய்திகள் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறேன்.

 

 

--------முற்றும்

 

 

 

 

 

 

 

14 comments:

  1. எனக்கு ஒரு நல்ல தொடரை ( மொழிபெயர்ப்பை ) படித்த திருப்தி. இறுதிப் பகுதியை ஏனோ அவசர வேலையின் காரணமாக சீக்கிரமே முடித்து விட்டாற் போலத் தோன்றுகிறது.
    தொடர்ந்து எழுதவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. ஆமாம். அவசரமாகத்தான் பதிவிட்டேன். முழுவதையும் மொழிபெயர்த்துவிட்டேன். புரூஃப் ரிடிங் பண்ணவில்லை. ஓரளவுக்கு சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். புத்தகத்தை வெளியிட அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தேன். அதற்கு, காப்பிரைட் என்றெல்லாம் பேசி வெறுப்பேற்றிவிட்டார்கள். அது இந்தப் புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு முற்றிலும் மாறாக இருந்ததால் நான் உடனடியாக முழுவதையும் உடனே பதிவேற்றிவிட்டேன். அவர்களிடமிருந்து மீண்டும் கடிதம் வந்தால் நான் என் பதிவுகளை நீக்க நேரிடும். அதற்குள் அனைத்தையும் பார்வைக்கு வைக்க விரும்பியதால் காலம் தாழ்த்தாமல் பதிவேற்றும் நிலை வந்தது. உண்மையோ, பொய்யோ கருத்துக்கள் நல்ல கருத்துக்களாக இருந்ததால்தான் நான் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்தேன். தொடர்ந்து ஆதரவளித்து உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுவேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  2. //வாழ்வில் மரணத்தைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கு இந்த நூல் உங்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறேன்.// என்கிற நூலாசிரியரின் முடிவுரை சரியான கணிப்பு என நம்புகிறேன்.

    Dr.Brian Weiss அவர்களுடைய “Many Lives Many Masters” – என்ற பெயரில் 16 அத்தியாயங்களோடு வெளிவந்த உண்மை நிகழ்வுகள் கொண்ட ஒரு அரிய நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்த உங்களுக்கு நன்றிகள் பல!

    நான்கு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் வியாழனன்று வரும் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த என்னை இந்த வாரம் புதன் கிழமையன்றே அதுவும் 5 அத்தியாயங்களைத் தந்து வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்.

    இனி இதுபோல இன்னொரு தொடரை தங்கள் வலைப்பதிவில் எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. தொடர்ந்து ஆதரவளித்து உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த மொழிபெயர்ப்புக்கு தாங்களும், திரு.திண்டுக்கல் தனபாலனும் உடனுக்குடன் பின்னூட்டமிட்டது எனக்கு தூண்டுகோலாக அமைந்தது. அடுத்த புத்தகத்தை தெரிவு செய்துவிட்டேன். இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக ஆரம்பித்துவிடுவேன். தொட்டில் பழக்கம் பற்றி அறிவியல் ரீதியான புத்தகம். அதனை ஆரம்பிக்கும் வரை வெள்ளிக்கிழமை தோறும், ஏதேனும் புதிய விஷயங்களைப் பதிவிடுவேன். தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
    2. அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். வாழ்த்துக்கள்!

      Delete
  3. ஒரே நேரத்தில் எல்லாப் பதிவுகளையும் அளித்ததால் ஊன்றிப் படிக்க முடியவில்லை. ஆனாலும் படித்து முடித்து விட்டேன். ஆழ்ந்து படிக்கத் திரும்ப வருகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம். தொடர்ந்து ஆதரவளித்து உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் வரிக்கு வரி உணர்ந்து படித்ததை, தங்களுடைய பின்னூட்டத்தின் வழியாக அறிந்தேன். அடுத்த புத்தகத்தை ஒரு மாதத்திற்குள் ஆரம்பித்துவிடுவேன். பழக்க வழக்கங்கள் ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்பதை அறிவியல் ரீதியாக உணர்த்தும் புத்தகம். அதனை ஆரம்பிக்கும் வரை வெள்ளிக்கிழமை தோறும் ஏதேனும் புதிய விஷயங்களைப் பதிவிடுவேன். தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  4. தொடர்ந்து எழுதவும். அவசரம் காரணமாக விரைந்து முடித்து விட்டது போல் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு.ஜீவன் சிவம். தொடர்ந்து ஆதரவளித்து உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. ஆமாம். மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவசரப்பட நேர்ந்தது.
      பழக்க வழக்கங்கள் ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்பதை அறிவியல் ரீதியாக உணர்த்தும் புத்தகம். அதனை ஆரம்பிக்கும் வரை வெள்ளிக்கிழமை தோறும் ஏதேனும் புதிய விஷயங்களைப் பதிவிடுவேன். தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  5. இறுதி பகுதியை நேற்று படித்து முடித்தேன். தங்களின் எழுத்தாற்றல் அற்புதம். ஆனால் இந்த தொடரில் முற்பிறவி , அதற்கு முந்தைய பிறவி என்று பிறவி மேல் பிறவியாக சொல்லப்பட்ட் சம்பவங்களின் மேல் நம்பிக்கை இல்லாததால் தொடரின் மேல் ஆர்வம் குறைந்தது உண்மை.

    தங்களின் விடா முயற்சிக்கும், உழைப்பிற்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

    தங்கள் அடுத்த தொடரின் one line நன்றாக இருக்கிறது, ஆர்வமுடன் படிப்பதற்கு காத்திருக்கிறோம்.

    வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    சௌந்தரபாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.சௌந்தர பாண்டியன். நானும் ஒரு நாவல் என்றுதான் எண்ணுகிறேன். அந்தப் புத்தகத்தில் உண்மைச் சம்பவங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் கருத்துக்கள் இந்து மதத்தை ஒத்துவருவதால்தான் மொழியாக்கம் செய்தேன். அடுத்த புத்தகத்தை விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன். நேரம் இருக்கும்பொழுது தொடர்ந்து படிக்கவும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  6. அருமையான மொழிபெயர்ப்பு.. பற்பல 'முழி பெயர்ப்பு'களை மட்டுமே படித்து நொந்து போன பலருக்கு உங்கள் மொழிபெயர்ப்பின் அருமை புரியும்!

    தொடர் பற்றி என்ன சொல்வது? இனம் புரியாத அமைதியில் என் மனம் லயிக்கிறது. சீக்கிரமே அமேசானில் அவர் புத்தகத்தை வாங்கி இன்னொருமுறை படிக்கத் தூண்டுகிறது!

    உங்கள் உழைப்புக்கு வந்தனம்.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி திரு.பந்து அவர்களே.
      முடிந்தவரை முயற்சி செய்து மொழிபெயர்த்தேன்.

      புத்தகம் PDF ஆக இணையத்தில் கிடைக்கிறது. கிடைக்கவில்லையென்றால் சொல்லுங்கள். மெயிலில் அனுப்புகிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  7. Mana nerivai thanthathu. vaalthukal thodaranthu payanekeran.

    ReplyDelete