பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Monday, June 23, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


நண்பர் சொக்கன் சுப்ரமணியன் வேண்டுகோளுக்கிணங்க என் பதில்களை எழுதியிருக்கிறேன்.

http://www.unmaiyanavan.blogspot.com.au/ 

 
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அப்படி இருந்துவிட்டால் கொண்டாட மாட்டேன். வருத்தப்படுவேன்

 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
எப்பொழுதும் குழந்தையின் உற்சாகத்துடன் இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும்.

 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக? 
காலையில், மகன் பள்ளிக்கு புறப்படும் முன் அவன் செல்லப்பிராணி (எலி)
அவனை தூக்கிக்கொள்ள சொல்லி அடம் பிடித்தபொழுது.

 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
காலாற நடக்கலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். படிக்கலாம். வீட்டை சுத்தம் செய்யலாம். தூங்கலாம்.  செய்ய வேலையா இல்லை.
 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன

பரவாயில்லையே. இருபத்தைந்து வயதிலேயே வீடு, பிசினஸ், கல்யாணம்னு செட்டில் ஆயிட்டீங்களே.
 
உண்மையான பதில் இங்கே.
மகிழ்ச்சியாக இருங்கள்.
சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
மதம்

 
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
மனைவியிடம்
 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
நல்ல நண்பர்களை புரிந்து கொள்ள உதவியதால், மகிழ்ச்சியாக இருப்பேன்.
 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
உடனே சொல்லாவிட்டாலும், மறுமணம் செய்துகொள்ள சொல்லுவேன்.

 
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
காலாற நடக்கலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். படிக்கலாம். வீட்டை சுத்தம் செய்யலாம். தூங்கலாம்.  செய்ய வேலையா இல்லை.

13 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. ரசிக்க வைக்கும் பதில்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. அருமையான பதில்கள். நீங்கள் சிரித்ததைப் படித்து எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

  ஒரு வேண்டுகோள்: எழுத்துக்கள் கொஞ்சம் பெரியதாக இருந்தால், படிப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அவசரத்தில் எழுதியது. மாற்றிவிடுகிறேன்

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. வணக்கம்
  ஐயா.

  கேள்விக்கான பதிலை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. அத்தனை பதில்களிலும் அனுபவம் தெரிகிறது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தாலும் செய்த தவறுகளே வரலாற்றில் திரும்பவும் நிகழ்கிறது. என்னைப்பொறுத்தவரை வேண்டாத அனுபவங்கள், மீண்டும் வராமல் தடுக்க முயற்சிக்கிறேன்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. உங்களின் பதில்கள் நறுக்குத் தெரித்தாற்போல் இருந்தது. எனக்குப் பிடித்த பதில் ஆறாவது கேள்விக்கு நீங்கள் சொன்னது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   முதலில் தண்ணீர்தான் பிரச்சனை என்று நினைத்தேன். ஆனால் இயற்கை பிரச்சனைகளைவிட செயற்கை பிரச்சனைகளே, தீர்க்க கடினமானது என்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete