பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 12, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 8ப்ராக்டர் அன்ட் கேம்பல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் மேலதிகாரிகளும், ஜன்னலிருந்த அந்த அறையில் கூடியிருந்தனர். ஒன்பது பூனைகளுடன் வசிக்கும் ஒரு பெண்மணியுடன் நடந்த உரையாடல்களின் நகல் பிரதி அவர்கள் கையில் இருந்தது. அங்கு மௌனம் நிலவியது. ஒரு பெண் அதிகாரி அந்த மௌனத்தை உடைத்தார். “நம்மை வேலையிலிருந்து நீக்கிவிட்டால் என்ன செய்வார்கள்? செக்யூரிட்டி நம்மை வெளியே அழைத்துச் செல்வாரா? அதற்கு முன் நமக்கு சிந்திக்க நேரம் தருவார்களா?” அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்த கேள்வியை அந்தப் பெண்மணி வெளிப்படுத்தினார்.


“தெரியாது. நிலைமை இவ்வளவு மோசமாகுமென்று நான் நினைக்கவில்லை. இந்தப் பணி மிகவும் முக்கியமானது, நம் நிறுவனத்தில் நாம் மேலே முன்னேற வழியுள்ளது என்றுதான் இந்தப் பணியை நம்மிடம் ஒப்படைத்தார்கள்”. டிரேக் ஸ்டிம்சன், குழுவின் தலைவர் கூறினார். அவர் மிகவும் சோர்வடைந்திருந்து வெளிப்படையாகத் தெரிந்தது. ஒரு பொருளை சந்தைப்படுத்துவதென்பது, எந்த அறிவியல் விதிகளையும் சாராது என்று ஹாப்கின்ஸ் தனது நூலில் கூறியுள்ளார். அதன் உண்மையை அந்தக் குழுவினர் இப்பொழுது உணர்ந்துகொண்டதுபோல் இருந்தது. 


அவர்கள் அனைவரும் மிகவும் புகழ்பெற்ற ப்ராக்டர் அன்ட் கேம்பல் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். ப்ரிங்க்ல்ஸ் வறுவல், ஆயில் ஆஃப் ஒலே போன்ற மிகவும் பிரபலமான பொருட்களை விற்கும் நிறுவனம் அது. ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்துவது என்று அந்த நிறுவனத்துக்கு உள்ள அனுபவம் மிகவும் அதிகம். சந்தைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்துப் புள்ளி விபரங்களும் அவர்களிடம் இருந்தது. அந்த வருடம் அவர்களது வரவு செலவு, 35 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வாஷிங் மெஷின் களில், இரண்டில் ஒன்று  ப்ராக்டர் அன்ட் கேம்பல் பொருட்களையே உபயோகப்படுத்துகிறது.


என்னதான் இருந்தாலும், ஸ்டிம்சனுடைய குழுவினால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த புதிய பொருளை சந்தையில் விற்பனை செய்ய முடியவில்லை. பல மில்லியன் டாலர்களை செலவு செய்து கண்டுபிடிக்கப்பட்ட அவர்களது புதுமையான படைப்பு தோல்வியை அடையும் நிலையில் இருந்தது. துணிகளிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள துர்நாற்றத்தை முற்றிலுமாக நீக்கக்கூடிய புதிய ஸ்ப்ரே ஒன்றினை அவர்கள் சந்தைப்படுத்தியாகவேண்டும். அந்த அறையில் இருந்த நிபுணர்களுக்கு எப்படி மக்களை வாங்கவைப்பது என்று எந்தப்பிடியும் கிடைக்கவில்லை. எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் விழலுக்கு இழைத்த நீரானது.


மூன்று வருடத்துக்கு முன்புதான் அந்த நிறுவனத்தில் அந்த ஸ்ப்ரே கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வேலை செய்யும் ஒரு கெமிஸ்ட் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் அருகில் வந்தாலே சிகரெட்டின் வீச்சம் இருக்கும். ஒருநாள் அவர் hydroxypropyl  beta  cyclodextrin,   HPBCD என்ற கெமிக்கலை வைத்து, ஏதோ சோதனை செய்துகொண்டிருந்தார். அன்று அவர் வீடு திரும்பியதும், அவரது மனைவி அவரிடம் “சிகரெட்டை நிறுத்திவிட்டீர்களா?” என்று வியப்புடன் கேட்டார். அவர் “இல்லையே, ஏன்?” என்று பதிலளித்தார். “இன்று உங்களிடமிருந்தோ, உங்கள் உடையிலிருந்தோ சிகரெட் நாற்றமே இல்லை. அதனால்தான் கேட்டேன்.” என்று அவர் மனைவி கூறினார். அந்த கெமிஸ்ட்டுக்கு அன்று முழுவதும் HPBCD – யுடன் வேலை செய்தது நினைவுக்கு வந்தது.


மறுநால் வேலைக்கு சென்றதும் அவர் HPBCD –யை உபயோகித்து பல சோதனைகளை செய்தார். HPBCD- ஐ தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே ஆக்கி, உபயோகித்து சோதனைகளை செய்தார். அழுக்கு சாக்ஸ், நாய்கள், உணவுவகைகள் என்று பலதரப்பட்ட பொருட்களின் மீதும் சோதனை செய்தார். பல நாட்கள் சோதனை செய்து, அந்த ஸ்ப்ரே, மணத்தை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது என்று அவர் உறுதி செய்தார்.


பிறகு மேலதிகாரிகளிடம் மணத்தை நீக்கும் ஸ்ப்ரேயினை அறிமுகம் செய்துவைத்தார். பல வருடங்களாக சந்தையில் நாற்றத்தை மறைக்கும் ஸ்ப்ரேக்கள் இருந்தன. ஆனால் நாற்றத்தை முற்றிலுமாக நீக்கும் ஸ்ப்ரே அறிமுகப்படுத்தப்படவில்லை. அதனால் இந்தப் பொருளுக்கு நல்ல வரவேற்பிருக்கும் அன்று அவர்கள் உணர்ந்துகொண்டனர். P&G, இப்படிப்பட்ட அருமையான வாய்ப்பு இருப்பதை உணர்ந்துகொண்டு, HPBCD –யின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, துர்நாற்றத்தை முற்றிலுமாக நீக்கும் நிறமற்ற, மணமற்ற ஒரு ஸ்ப்ரேயை, வர்த்தகம் செய்யுமளவுக்கு கண்டுபிடித்தனர். இதற்காக அவர்கள் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருந்தது. 


அவர்கள் கண்டுபிடித்த ஸ்ப்ரேயின் தரம் நன்றாக இருந்ததால், நாசா விண்வெளிக்கப்பல் திரும்பி வந்தபிறகு, அதிலிருந்த நாற்றத்தைப்போக்க இந்த ஸ்ப்ரேயை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். இந்த ஸ்ப்ரேயின், மிகவும் முக்கியமான பண்புகள் – இது விலை மலிவானது, நிறமற்றது, எந்தக் கறையையும் ஏற்படுத்தாது, மணமற்றது. பில்லியன் கணக்கில் வருமானத்தைத் தரக்கூடிய ஒரு ஸ்ப்ரேயைக் கண்டுபிடித்துவிட்டதாக P&G – குழு மகிழ்ச்சியடைந்தது. அதை மக்களிடம் கொண்டுசேர்த்து, மக்களை வாங்கவைக்கத் தேவையான விளம்பரத்தி உண்டாக்கும் பணியில் ஈடுபட்டது P&G.


அந்தப் புதுமையான ஸ்ப்ரே-க்கு ஃபிபிரீஸ் (Febreze) என்று பெயரிட்டு ஸ்டிம்சனை குழுவுக்குத் தலைமைப்பொறுப்பில் அமர்த்தி, சந்தைப்படுத்தும் பொறுப்பை அளித்தனர். ஸ்டிம்சன் கணிதத்திலும், மனோவியலிலும் சிறப்பான தகுதி பெற்றவர். அவர் P&G-ல் பணியில் சேர்வதற்கு முன்பு வால் ஸ்ட்ரீட்-ல் பங்குகளை தேர்வு செய்வதற்கான கணிதத்தின் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கியவர். அதன்பிறகு பவுன்ஸ் ஃபேப்ரிக் சாப்ட்னர் மற்றும் டவுனி டிரையர் ஷீட் போன்ற பொருட்களை சந்தைப்படுத்தும் பணியில் இருந்திருக்கிறார். ஆனால் “ஃபிபிரீஸ்” அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான பொருள். இதுவரை மக்கள் வாங்கியிராத பொருளை வாங்க வைக்கவேண்டும். ஸ்டிம்சனுடைய வேலை மக்களுக்கு அந்த பொருளை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது அவ்வளவு எளிதான செயலா?ஸ்டிம்சனும், அவரது குழுவினரும் ஃபிபிரீஸ்-ஐ, ஃபினிக்ஸ், சால்ட் லேக் சிட்டி, போய்ஸ் என்ற நகரங்களில் அறிமுகப்படுத்த முடிவெடுத்தனர். மக்களிடம் இலவசமாக மாதிரிகளைக் கொடுத்து உபயோகிக்குமாறு கேட்டுக்கொண்டனர். உபயோகிப்பவரின் இல்லங்களுக்கு வருகையளிக்கவும் செய்தனர். இரண்டு மாதங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குச் சென்றனர். அவர்களுக்குத் தேவைப்படும்படியான முக்கியமான பிடி அவர்களுக்கு ஃபினிக்ஸ் நகரில் கிடைத்தது.


அந்த பெண்மணி, ஒரு வனத்துறை அதிகாரி. அவருடைய பணி பாலைவனத்தைவிட்டு வெளியேறி வந்துவிடும் விலங்குகளைப் பிடித்து மீண்டும் பாலைவனத்துக்கு அனுப்புவதேயாகும். அதில் அவர் அதிகம் பிடிக்கும் விலங்கு “ஸ்கங்க் (Skunk)” ஆகும். ஸ்கங்க்- என்ற விலங்கு, தன்னுடைய எதிரிகளிடமிருந்து தப்பிக்க அவர்கள்மீது சிறுநீரை ஒரு ஸ்பிரேயாக பொழிந்துவிடும். அது மிகவும் துர்நாற்றமுள்ள ஸ்பிரே. எந்த விலங்கும் அதனால் ஸ்கங்க்-ஐ நாடாது. அந்தப் பெண் ஸ்கங்க் விலங்குகளை அடிக்கடி பிடிப்பதால், அது அவர் மீதும் ஸ்பிரே செய்வது வழக்கம்.  


“எனக்கு இன்னும் மணமாகவில்லை. வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். பலதடவை டேட்டிங் சென்றிருக்கிறேன். இதுவரை எனக்கு சரியான துணை அமையவில்லை. நான் இளமையுடன் இருக்கிறேன். அழகாகவும், அறிவுள்ளவளாகவும் இருக்கிறேன். இருந்தும் பயனில்லை.” அந்த வனத்துறை அதிகாரி ஸ்டிம்சனிடம் கூறினாள்.


அவளுக்கு காதலன் அமையவில்லை. காரணம், அவள் வாழ்வில் இருக்கும் அனைத்தும் ஸ்கங்க் போல வீச்சமடித்தது. அவள் வீடு, கார், ஆடைகள், காலணிகள், கரங்கள், திரைச்சீலைகள் அனைத்தும் ஸ்கங்க் போல நாற்றமடித்தது. அவளுடைய படுக்கையும் நாற்றமடித்தது. அந்த நாற்றத்தைப் போக்க ஏகப்பட்ட தீர்வுகளை அவள் முயற்சித்திருக்கிறாள். நல்ல சோப்புகள், ஷாம்பூ, வாசனையுள்ள மெழுகுவர்த்திகள் அனைத்தையும் முயற்சித்திருக்கிறாள். ஒன்றும் பயன்தரவில்லை.


“ஒவ்வொரு முறை டேட்டிங் செல்லும்பொழுதும், எனக்கே சந்தேகமாக இருக்கிறது. இன்னும் என்மேல் அந்த நாற்றம் இருக்கிறதா என்று என்னை நானே சோதனை செய்துகொள்கிறேன். சென்ற வருடம் ஒருவருடன் நான்கு முறை வெளியில் சென்றிருந்தேன். ரொம்ப நல்ல மனிதர். அவருக்கும் என்னை பிடித்திருந்தது. ஒருமுறை அவரை வீட்டுக்கு அழைத்திருந்தேன். மறுநாள் அவருக்கு ஃபோன் செய்தபொழுது, சிறிது நாட்கள் தனியாக இருப்பதாக முடிவெடுத்துள்ளதாக கூறினார். அவர் நாசுக்காகத்தான் கூறினார். அனேகமாக என் வீட்டு ஸ்கங்க் நாற்றத்தினால்தான் விலகியிருப்பார் என்று நினைக்கிறேன்.


“இப்பொழுது ஃபிப்ரீஸ் உபயோகித்தபிறகு உங்கள் நிலைமை எப்படி உள்ளது? உங்களுக்கு பிடித்திருக்கிறதா?” ஸ்டிம்சன் வினவினார்.


அந்தப்பெண் கண்கலங்கினார். “உங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். ஃபிப்ரீஸ் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது.” என்றார்.


ஃபிப்ரீஸ் மாதிரியைப் பெற்றதும், அவர் தனது வீட்டில் அனைத்து இடங்களிலும் அதனை ஸ்பிரே செய்தார். ஒரு ஃபிப்ரீஸ் இலவசமாக கிடைத்தது அவருக்கு போதுமானதாக இல்லை. அதிகம் தேவைப்பட்டது. ஃபிப்ரீஸை விலை கொடுத்து வாங்கி வீடு முழுவதும் பயன்படுத்தினார். வீட்டில் நாற்றம் இருந்த இடம் தெரியவில்லை. நண்பர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். எந்த நண்பரும், ஸ்கங்க் நாற்றம் பற்றி குறைகூறவில்லை. ஸ்கங்க் நாற்றம் முற்றிலுமாக ஒழிந்து விட்டதாகக் கூறினார்.


“உங்களுக்கு மிக்க நன்றி. நான் விடுதலை அடைந்ததுபோல உணர்கிறேன். இந்த ஸ்பிரே எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது.” என்று ஸ்டிம்சன் குழுவுக்கு நன்றி கூறினார்.வனவிலங்கு அதிகாரி அவருடைய வீட்டில் எந்த துர்நாற்றத்தையும் உணரவில்லை. இந்த ஸ்பிரே, P&G -க்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை அளிக்கப்போகிறது என்று ஸ்டிம்சன், தனக்குள் நினைத்துக்கொண்டார். 

-தொடரும்.
வித்தை செய்யும் புத்திசாலி பூனை:
அதிசய சிறுவன்:

தானாகவே அனைத்தையும் கற்றுக்கொண்டு, மக்களுக்கு வெளிச்சம் தந்த சிறுவன்.  MIT  – ல் மிகவும் சிறிய வயதில் அழைக்கப்பட்ட பெருமையுடையவன். இந்த யூ ட்யூப்-ல் சப்டைட்டில் உள்ளது. வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள்ளலாம்.

13 comments:


 1. டிரேக் ஸ்டிம்சன் குழுவினர் ஃபினிக்ஸ் நகரில் உள்ள ஒரு பெண் வனத்துறை அதிகாரியின் வீட்டில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிட்ட பின், எதற்காக சோர்வடைந்து தங்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள் என அவர்கள் யோசிக்கிறார்கள் என்பதை அறிய காத்திருக்கிறேன்.

  வித்தை செய்யும் புத்திசாலி பூனை பற்றிய இந்த காணொளியை முன்பொரு தரம் பார்த்திருக்கிறேன். திரும்பவும் காண வைத்தமைக்கு நன்றி!

  தானாகவே அனைத்தையும் கற்றுக்கொண்டு, மக்களுக்கு வெளிச்சம் தந்த அந்த அதிசய சிறுவன் பற்றிய காணொளி இணைப்பில் ஓட்டப் பந்தயத்தில் கீழே விழுந்தும் திரும்ப எழுந்து ஓடும் பெண்மணி பற்றிய காணொளி தான் உள்ளது. அதை முன்பே பழக்கங்களின் ஆதிக்கம் 6 இல் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

  தவறுதலான காணொளிக்கு மன்னிக்கவும். சரியான காணொளியை சேர்த்துவிட்டேன்.

  வரும் வாரத்தில், ஸ்டிம்சன் குழுவினருக்கான, கவலைக்கு பதில் வந்துவிடும்.

  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete
 3. காணொளியைக் கண்டேன். சுயமாய் கற்றுக்கொண்டு தனது மக்களுக்கு உதவ நினைக்கும் அவனது முயற்சிகள் வியக்க வைக்கின்றன.பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கு நன்றி ஐயா!

   காணொளி சற்று நீளமானது. யாரும் பார்ப்பார்களா என்ற சந்தேகத்துடன் இருந்தேன். கருத்திட்டமைக்கு நன்றி.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. காணொளி அருமை நண்பரே
  பகிர்விற்கு நன்றி
  தம1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. அந்த ஸ்பிரே இப்போது சந்தையில் உள்ளதா? இத்தனை அற்புதமான பொருளை சந்தைப்படுத்த முடியாமல் போனதா என்ன? தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   இன்றளவும் febreze விற்பனையில் உள்ளது. அதைப் போன்று பல பொருட்கள் சந்தைக்கு வந்துவிட்டன. கூகுளில் febreze என்று பாருங்கள் தெரியும்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. மிகப்பெரிய வெற்றியை அளித்த....தா...?

  அருமை காணொளி... நன்றி...

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இறுதியில் வெற்றியை அளித்தது.

  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete
 8. அந்த விடியோ கிளிப் பையனுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.ராஜி அவர்களே.

  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete
 10. சந்தைப் படுத்துதல் (MARKETING) எவ்வளவு சிக்கலானது அல்லது சுவாரஸ்யமானது என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

  இன்றுதான் உங்கள் தொடரில் படிக்காமல் விட்டுப்போன பதிவுகளைப் படித்து முடித்தேன். கோல்கேட் பற்பசை பிரபலமான அளவுக்கு அமெரிக்கப் புகழ் பெப்ஸோடண்ட் தமிழ்நாட்டில் ஏன் பிரபலமடையவில்லை என்று தெரியவில்லை.

  ReplyDelete