பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, January 2, 2014

கண்டுபிடிப்புகள் – 3 : காலண்டர்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


காலண்டர் (புத்தாண்டு கொண்டாட்டம்) :

ஜனவரி முதல்தேதி புத்தாண்டின் துவக்கம் என்று கொண்டாடப்படுவது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் துவங்கியது. கி.மு.2000-ம் வாக்கில் மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) புத்தாண்டு கொண்டாட்டங்கள் தட்சணாயனம் ஆரம்பிப்பதை கருத்தில்கொண்டு, அதனை அவர்கள் புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில்தான் அவர்களது புத்தாண்டு துவங்கியுள்ளது. எகிப்து மற்றும் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் குளிர்காலத்தில் ஆரம்பத்தை புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடியிருக்கிறார்கள்.

ரோமன் காலண்டர்படி மார்ச் முதல்தேதி புத்தாண்டின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. மார்ச் மாத துவக்கத்திலிருந்து மொத்தமாக பத்து மாதங்களே அவர்களின் காலண்டரில் இருந்திருக்கிறது. தற்போதைய மாதங்களில்கூட அதே கணக்கில் சில மாதங்களின் பெயர்கள் உள்ளன. இலத்தீன் மொழியில் செப்டம், அக்டோ, நவம், டிசம் என்ற வார்த்தைகள் முறையே 7, 8, 9, 10 என்ற எண்களைக் குறிக்கின்றன. ஆனால் இன்று செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் 9, 10, 11, 12 ஆவது மாதங்களைக் குறிக்கின்றன.

கி.மு 153-ல்தான் முதல்முறையாக ஜனவரி – 1, புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடப்பட்டுள்ளது. கி.மு. 700-ல் ரோம் அரசர் “நுமா போண்டிலியஸ்” ஜனவரி, பிப்ரவரி மாதங்களை காலண்டரில் இணைத்துள்ளார். ரோமப்பேரரசின் மிகவும் உயர்ந்த இரண்டு பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் பதவி பிரமாணம் எடுக்கும் நாளை ஆண்டின் முதல் நாளாக “நுமா போண்டிலியஸ்” அறிவித்தார். பொதுவாக அந்த அதிகாரிகள் ஒரு வருடம் அந்த பதவியில் நீடிப்பர். அப்படி அறிவித்தபோதும் மக்கள் மார்ச் மாதத்திலேயே புத்தாண்டை கொண்டாடுவது வழக்கமாக தொடர்ந்தது.

ஜூலியன் காலண்டர் :

கி.மு 46-ல் ரோமப்பேரரசர் ஜூலியஸ் ஸீசர் சந்திரனைச் சார்ந்த காலண்டரை மாற்றி சூரியனைச் சார்ந்த காலண்டராக திருத்தினார். ஜனவரி 1-ஆம் தேதியை அதிகாரபூர்வமான புத்தாண்டின் துவக்கமாக அறிவித்தார். இருந்தபோதிலும் சில ஐரோப்பிய நாடுகள் ஜனவரி 1-ஆம் தேதியை பேகன் மதத்தைச் சார்ந்ததாகக் கருதினர். அதனால் அவர்கள் ஜனவரி 1-ஐ புத்தாண்டின் துவக்கமாக ஒத்துக்கொள்ளவில்லை. டிசம்பர் 25, மார்ச் 1, மார்ச் 25 என்ற தேதிகளில் அந்தந்த  நாடுகள் புத்தாண்டை துவங்கின.

கிரிகேரியன் காலண்டர் :

1582-ல் கிரிகேரியன் காலண்டர் (மேற்கத்திய காலண்டர், கிறிஸ்டியன் காலண்டர்) ஜூலியன் காலண்டரை சற்று மேம்படுத்தி வெளிவந்தது. ஜூலியன் காலண்டரில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடம் வந்தது. கிரிகேரியன் காலண்டர்படி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடம், ஆனால் நூற்றாண்டு வருடங்களில் நானூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே லீப் வருடம். அதாவது வருடம் 2000 ஒரு லீப் வருடம், வருடம் 2100 நான்கால் மீதியில்லாமல் வகுபட்டால்கூட லீப் வருடம் கிடையாது.

அனேகமாக அனைத்து கத்தோலிக்க நாடுகளும் கிரிகேரியன் காலண்டரை உடனடியாக ஒத்துக்கொண்டன. ஆனால் பிராட்டஸ்டண்ட் நாடுகள் கிரிகேரியன் காலண்டரை ஒத்துக்கொள்வதற்கு அதிக ஆண்டுகள் பிடித்தது. 1752-ல் தான் பிரிட்டனும், அமெரிக்க நாடுகளும் கிரிகேரியன் காலண்டருக்கு மாறியது. அதுவரை அவர்கள் மார்ச் மாதத்தில்தான் புத்தாண்டைத் துவங்கினர். 1751-ல் அவர்கள் காலண்டரை மாற்றியபோது, அந்த வருடத்தில் பன்னிரண்டு நாட்களை இழக்க நேர்ந்தது. அதாவது 1752 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் தேதிக்கு மறுநாள் 14-ஆம் தேதியாக இருக்கிறது.


இப்படியும் நடக்கலாம், ஒரு காணொளி :

BBC-யில் ஒருவரை தவறுதலாக கணினி வல்லுனர் என்று நினைத்து, பேட்டி எடுத்திருக்கிறார்கள். அவரும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமாளித்திருக்கிறார். முன்பே பார்த்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.








10 comments:

  1. நாட்காட்டி பற்றிய இதுவரை அறிந்திராத அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஏன் ஏப்ரல் முதல் தேதியை அவர்களது நிதி ஆண்டின் (Finacial Year) தொடக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காணொளிகளை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்த்தேன். மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      நிதி ஆண்டு துவக்கத்தைப்பற்றி நான் யோசிக்கவில்லை. அதனையும் சேர்த்திருக்கலாம்.

      அந்த காணொளியில் டாக்ஸி ஓட்டுனரின் முகபாவனைகள் மறக்கமுடியாதது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. காலண்டரைப் பல தகவல்களை சேகரித்து அளித்ததற்கு நன்றி.

    டாக்சி டிரைவர் சமாளிப்பும் அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      டாக்ஸி ஓட்டுனரும் விட்டுக்கொடுக்காமல் சமாளித்தது ரஸிக்கத்தக்க அளவில் இருந்தது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. இந்த பதிவின் மூலம் பல காலண்டர் தகவல்களை விளக்கமாக அறிந்தேன்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு.விஜயன் அவர்களே.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  6. //அதாவது 1752 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் தேதிக்கு மறுநாள் 14-ஆம் தேதியாக இருக்கிறது.//

    விசித்திரமான செய்தி.

    ReplyDelete