பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, January 30, 2014

சிறுகதை-1


கலிமொழி : ஒருவர் பொறை, ஒருவர் இளிச்சவாயர்.

“சிரவணன் கல்யாணத்துக்கு நீ ஏன் வரலை?” பாலு நேரடியாகக் கேட்டுவிட்டான்.

“ஆஃபிஸ்ல வேலை ஜாஸ்தியாயிருந்த்து.”

“நீங்க ரெண்டுபேரும் ரொம்ப க்ளோஸ்ன்னு கேள்விப்பட்டேன்”

“ஆமாம். அவன் என் பெஸ்ட் ஃப்ரண்ட்தான்.”

“அப்ப கல்யாணத்தைவிட ஆஃபிஸ் உனக்கு முக்கியமாயிட்டா?”

உண்மையைச் சொல்வதா என்று தெரியவில்லை. “இப்பதான் புது வேலைல சேர்ந்திருக்கேன். லீவு போட்டு கெட்டபேர் எடுக்க விருப்பமில்லை.” ஏதோ மழுப்பினேன்.

உண்மையில் நான் சிரவணன் கூட உள்ள நட்பு கெட்டு போகாமல், நல்லா பாதுகாக்கணும் அப்படின்னு நல்ல எண்ணத்துலதான் நான் கல்யாணத்துக்குப் போகலை. அனாவசியமா அவன் கூட தொடர்பு வச்சிக்கிட்டு நல்ல கனவு போல இருக்கிற நட்பை ஏன் கெடுக்கணும். ஃப்ரெண்ட் நல்லா இருக்கிறதைவிட,  ஃப்ரெண்ட்ஷிப், ரொம்ப முக்கியம் இல்லையா? நீங்களே சொல்லுங்களேன்

நானும் சிரவணனும் ஹைஸ்கூல், காலேஜ் எல்லாம் சேர்ந்துதான் படித்தோம். விளையாட்டு, இன்ட்ரஸ்ட் எல்லாம் கிட்டத்தட்ட எங்களுக்கு மேட்ச் ஆகும். படிப்புல மட்டும் அப்பப்ப அவனுக்கு என் உதவி தேவைப்படும். எனக்கு பசிச்சா, அவன் சாப்பிட்டால் எனக்கு பசி தீர்ந்துவிடும். அந்த அளவுக்கு எங்கள் நட்பு.

கேம்பஸ்ல இரண்டுபேரும் வேறவேற கம்பெனில, ஆனால் ஒரே ஊரில் வேலைக்கு சேர்ந்தோம். அவனுக்கு வேலை கிடைச்ச கம்பெனி எங்க கம்பெனியைவிட கொஞ்சம் நல்ல கம்பெனி. கொஞ்சம் என்ன, அதிகமாகவே நல்ல கம்பெனி. அவனோட அண்ணன் வேலைல இருந்ததால, எப்படியோ உள்ள நுழைஞ்சுட்டான். கொஞ்சம் கடுமையா வேலை செஞ்சு இப்ப ஒரு பேர் சொல்ற அளவுக்கு, அந்த கம்பெனில்ல இருக்கான்.

 - மூன்று மாதங்களுக்கு முன்பு

இன்னும் ஒரு மாதம்தான். இந்த ப்ராஜக்ட் முடிந்த்தும், முழு டீமையும் கழட்டிவிடப்போறதா இன்ஃபார்மலா நியூஸ் கிடைச்சிருக்கு. I.T பூம் வந்தாலும் வந்தது, வச்சா குடுமி, சிரைச்சா மொட்டையாயிட்டு. சிரவணன் வேலை பார்க்கிற கம்பெனியில் ஏதோ புது ப்ராஜக்ட் வரப்போறதா சொல்லிருக்கான். ரொம்ப பேர் தேவைப்படும், ரெக்ரூட்மண்ட்-க்கு அவன் தான் இன்சார்ஜ்- அப்படின்னு சொல்லிக்கிட்டுருந்தான். பரவாயில்லை. அவன் அங்க இல்லாவிட்டாலும், எனக்கு இருக்கிற அனுபவத்துக்கு, அங்க வேலை கிடைக்கிறது ஒன்னும் பிரச்சனை இருக்காது. பார்க்கலாம். கிடைக்கிறவரைக்கும் ஒண்ணும் நிச்சயமில்லை. ஆமாம். கிடைச்சாலும், இந்த காலத்துல ரொம்ப நிச்சயம்தான். அந்த கம்பெனி கொஞ்சம் பெரிய கம்பெனியா இருக்கிறதால, ஓரளவுக்கு நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். எல்லாரும் வாங்குறாங்கன்னு, வாங்கி இப்ப வீட்டு கடன் வேற தலைக்கு மேல. பார்க்கலாம்.


“சிரவணா, நான் உங்க கம்பெனிக்கு வேலைக்கு அப்ளைபண்ணிருந்தேன். இன்டெர்வியூ வரும், வரும்னு பார்த்தேன். ஆள் எடுத்து முடிச்சுட்டாங்கன்னு சொல்றியே. என்னாச்சு? எனக்குத்தான் நீங்க கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் கரெக்ட்டா மேட்ச் ஆச்சே? இதில நீ வேற இன்சார்ஜ்ன்னு சொன்ன?”

“இல்லடா, நம்ப ரெண்டுபேரும், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரே கம்பெனில்ல, வேலை பார்த்தா, நம்ப ஃப்ரெண்ட்ஷிப்ப பாதிச்சிருமோன்னு நாந்தான் நீ வேண்டாம்னு டிசைட் பண்ணிட்டேன்.”

“பரவாயில்லை. நீ சொல்றதும் சரிதான். இப்ப வேலையில்லாமதான் இருக்கேன். பார்ப்போம். விடியாமலா போகப்போகுது. ஆமாம், உங்க அண்ணனும் உன் ப்ராஜக்ட்லதான வேலை செய்யுறான்?”

“ஆமாண்டா. அவன் இருக்குறது, எனக்கு எவ்வளவு ஹெல்ப்பா இருக்கு தெரியமா? நிறைய தடவை என்ன அவன் கவர் பண்ணிருக்கான்.”

“உனக்கு யோகம்தான் ” .




துணுக்கு :
 


பெரியவரிடம் பெண் தன் காதலனை அறிமுகப்படுத்தினாள்.

பெரியவர் " நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"

"ஆன்மீகம் பற்றிப படித்துக்கொண்டிருக்கிறேன்."

"வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள்?"

"ஒன்றும் பிரச்சனையில்லை. ஆண்டவன் பார்த்துக்கொள்வான்."

“கல்யாணத்துக்குக் பிறகு குழந்தைகள், குழந்தைகள் படிப்பு என்று அதிக செலவாகுமே, என்ன செய்வீர்கள்?”
“ஒன்றும் பிரச்சனையில்லை. ஆண்டவன் பார்த்துக்கொள்வான்.
பெரியவர் வீட்டுக்குச் சென்றார். அவர் மனைவி “வருங்கால மருமகனைப் பார்த்தீர்களே, உங்களுடைய அபிப்ராயம் என்ன?” என்றார்.

பெரியவர் “ ரொம்ப நல்ல பையன். இப்பொழுதே என்னை ஆண்டவனாக நினைக்க ஆரம்பித்துவிட்டான்.” என்றார்.



 

ஒரு சாமியாரிடம் ஒருவன் நகையைத் திருடிவிட்டான். திருடியவன் அந்த சாமியாரிடம் வந்தான்.
“ஐயா, ஒருத்தரோட நகையை நான் திருடிவிட்டேன். உறுத்தலாக இருக்கிறது. என்ன செய்வது” என்றான்.

“உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு.” பதில் வந்தது.

“நீங்க எடுத்துக்குங்க.”

“எனக்கு வேண்டாம்.”

“உரியவர்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது?”

“நீயே வைத்துக்கொள்.”

“சரிங்க.”





 

11 comments:

  1. "கலிமொழி" சரி தான்...!

    துணுக்குகளுக்கு பொருந்துமோ...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. சிறுகதையும் துணுக்குகளும் நன்றாக உள்ளன. Chairty begins at home என்பதை சிறுகதை மிக நன்றாகவே சொல்கிறது. இதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! இது கிட்டத்தட்ட 90 சதவிகிதம் உண்மை நிகழ்ச்சியே.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி.ப்ரியா அவர்களே.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. Blood is thicker than water என்பார்கள். தான் ஆடாவிட்டாலும் தான் சதை ஆடும் என்பது பழமொழி. அதை இந்த கதை உணர்த்துகிறது.பகிர்ந்தமைக்கு நன்றி.

    இரு துணுக்குகளுமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! சகோதரரிடம் அலுவலகத்தில் ஒத்துப்போகும் ஒருவரால், ஏன் நண்பரிடம் ஒத்துப்போகமுடியாது என்று தெரியவில்லை. ஆபத்துக்கு உதவ முடிந்தும், உதவாத நண்பரை, எப்பொழுதும் நம்ப முடியாது என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
    2. “ஆபத்துக்குதவா நண்பன்
      அரும் பசிக்குதவா அன்னம்
      தாகத்தை தீரா தண்ணீர்
      தரித்திரமறியா பெண்டீர்
      கோபத்தையடக்கா வேந்தன்
      ‘குரு’மொழி கொள்ளாச் சீடன்
      பாவத்தைத் தீரா தீர்த்தம்
      பயனில்லை ஏழுந்தானே!”

      ஆபத்துக்கு உதவா நண்பன் நமக்கு பயனில்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நன்னெறி சொல்லிவிட்டதே.

      Delete
    3. ஆமாம். இருந்தாலும் பொதுவாக ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதும் நிகழ்கிறதே. எத்தனை முறை படித்தாலும் நன்னெறிக் கவிதைகள் ஒவ்வொருமுறையும் வேறு வேறு விதங்களில் சிந்திக்க வைக்கிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. துணுக்குகள் இரண்டுமே வி.வி.சி. :)))) கதையும் அருமை. என்ன இருந்தாலும் நண்பனை விட உறவு தான் அதுவும் ரத்த உறவு தான் மேலானதுனு சொல்லாமல் சொல்லிட்டார். கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.

    ReplyDelete