பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, September 19, 2013

கதம்பம்-6


 

மாபெரும் வர்த்தக சறுக்கல்கள்:

1859-ல் கச்சா எண்ணையை எடுக்க இயந்திரங்கள் இல்லை. எண்ணையை எடுக்க உடல் உழைப்பையே நம்பியிருந்தார்கள். பணி ஓய்வு பெற்ற எட்வின் ட்ரேக் என்பவர், உப்பு கிணறு தோண்டுபவர்களிடம், புதிய எண்ணை எடுக்கும் இயந்திரங்களை வடிவமைக்க உதவிகளை நாடினார். பைத்தியக்காரன்தான் அந்த வேலையை செய்வான் என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். தனது உறவினர்களின் உதவியுடன் எட்வின் தானே புதிய இயந்திரத்தை உருவாக்கினார். ஆனால் வடிவமைப்பை உரிமைப்படுத்த தவறிவிட்டார். மற்றவர்கள் அவருடைய வடிவமைப்பைப் பயன்படுத்தி எண்ணை எடுத்து கோடீஸ்வரர்களாகிவிட்டனர். எட்வின் ஏழையாகவே இறந்தார்.

 

பெல் 1876-ல் வெஸ்டர்ன் யூனியன் தந்திக்கம்பெனிக்கு தொலைபேசி வடிவமைப்பு உரிமையை 100,000 அமெரிக்க டாலருக்கு விற்பதற்கு முன்வந்தார். மிகவும் முக்கியமான அந்த உரிமையை “எலக்ட்ரானிக் பொம்மைக்கு எங்கள் கம்பெனியில் இடமில்லை” என்று கூறி கம்பெனியின் தலைமை அதிகாரி அதனை நிராகரித்துவிட்டார். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்தார்.

 

1962- டெக்கா ரெக்கார்டிங் கம்பெனிக்கு “பீட்டில்” குழுவினர் ஆடிஷனுக்கு சென்றனர். அந்த கம்பெனி பீட்டிலுக்கு தகுதி இல்லையென்று ரெக்கார்டிங் காண்ட்ராக்ட் கொடுக்கவில்லை. பிறகு பீட்டில் குழுவினர், EMI ரெக்கார்டிங் கம்பெனிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வரலாறு படைத்தனர்.

 

அமெரிக்க ப்ரெசிடென்ட் பதவிக்கு நின்று தோற்றவர் ரோஸ் பெரெட். அவர் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தை 1979-ல் 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க விரும்பினார். பில் கேட்ஸ் 60 மில்லியன் கேட்டார். ரோஸ் மறுத்துவிட்டார். இன்று மைக்ரோசாஃப்ட்டின் மதிப்பு – 200 பில்லியன் டாலருக்கும் மேல்.

 

1980-ல் IBM  தன்னுடைய ஆபரேட்டிங் சிஸ்டத்தை அமைக்க காரி கில்டேட் என்பவரை அழைத்தது. அவர் தனது பொழுதுபோக்கு விளையாட்டுக்கு (விமானம் ஓட்டுவது) சென்றுவிட்டார். கடுப்படைந்த IBM பில் கேட்-ஐ அழைத்த்து. அது மைக்ரோசாஃப்ட் பிறக்க வழிவகுத்தது.

 

ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த ஸ்டீஃப் ஜாப், ஸ்டீஃப் வூஸ்னியாக் இருவரும், ஆரம்பத்தில் HP நிறுவனத்திடம் சென்று எங்கள் கண்டுபிடிப்புகளை தயாரியுங்கள். எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் போதும். நாங்கள் வேலை செய்கிறோம் என்றனர். HP அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இன்று ஆப்பிளின் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்

1999-ல் ஜியார்ஜ் பெல் என்ற எக்ஸைட் கம்பெனியின் நிர்வாகிக்கு, கூகிள் கம்பெனி ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு வந்தது. அதிர்ஷ்டம் கதவைத் தட்டினாலும் அவர் திறக்க விரும்பவில்லை.அவர் நிராகரித்துவிட்டார். இன்று கூகிளின் மதிப்பு 200- பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்.

1803-ல் அமெரிக்காவில் பாதிக்கு மேல் ஃப்ரான்ஸ் வசம் இருந்த்து. அதை நெப்போலியன் 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுவிட்டார்.

 

 

.

மின்மினி மீன்களும் பச்சோந்தி மீன்களும்:

எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்குமென்று தெரியவில்லை. கிராமங்களில் பலர் கண்டிருக்க சாத்தியமுண்டு. மரம் முழுவதும் சீரியல் விளக்குகள் கட்டிய்து போல மின்மினிப்பூச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் ஒன்றிரண்டை மட்டுமே காணமுடிகிறது.

ஆழ் கடலில் இரண்டுமணி நேரங்கள் கீழே சென்ற பிறகு வெறும் கும்மிருட்டை மட்டுமே சந்தித்ததாக இவர் கூறுகிறார். அந்தக் கும்மிருட்டில் பற்பல அதிசய மின்மினி மீன் களை பிரத்தியேக கேமரா மூலம் படம் பிடித்து அவர் விவரிக்கும் அழகைக் காணுங்கள். பச்சோந்தி மீன்கள். இந்த மீன்கள் பச்சோந்திகள் மட்டுமல்ல. தன்னுடைய உடலின் தோலையும் தேவைகேற்றபடி மாற்றி, பாறையாகவே உருமாறும் அழகை, உச்சகட்டமாக, கடைசி வினாடிகளில் காட்டுவதை பார்க்கத் தவறாதீர்கள். இந்த வீடியோவில் சப்டைட்டில் உள்ளது. பார்க்கும் முன் தேர்வு செய்து கொள்ளலாம். முழு உரையையும் கட்டுரையாக எழுத்து வடிவிலும் கொடுத்திருக்கிறார்கள். நான் முழு உரையையும் கொடுக்கவில்லை. வீடியோவைக் காணுங்கள்.

 


 

துணுக்கு:

சாக்ரடீஸிடம் ஒருவர் ஏதோ கூறுவதற்காக வந்தார். “உங்கள் மாணவர் ஒருவரைப்பற்றி ஒன்று கூறவேண்டும்”

“உங்களுக்கு நேரடியாகத் தெரிந்த விஷயமா?”

“கேள்விப்பட்டேன். நேரடியாகத் தெரியாது.”

“சரி. அது நல்ல விஷயமா?”

“ம்..... அப்படியாக இல்லை”

“சரி.  அதனால் ஏதாவது பயன் இருக்குமா?”

“ம்... இருக்காது என்று நினைக்கிறேன்.”

“வதந்தி; நல்ல விஷயமும் இல்லை; அதனால் பயனும் இல்லை. ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

 

 

12 comments:

 1. முதலில் தரப்பட்ட துணுக்குகள் ‘தானே வந்த ஸ்ரீதேவியை தள்ளிவிட்டாற் போல்’ என்கிற சொல்லாடலை நினைவு படுத்துகிறது.

  இரண்டாவதாக தரப்பட்ட காணொளி பார்க்கவேண்டிய ஒன்று. அதுவும் அந்த பச்சோந்தி மீன்கள் நிறம் மாறி சூழ்நிலையோடு ஒன்றிப்போவது கண்கொள்ளாக் காட்சி.

  மூன்றாவதாக தந்துள்ள சாக்ரடீஸின் உரையாடல் முன்பே படித்திருக்கிறேன்.

  உபயோகமான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   ஆமாம். இன்னொருவகையில் ஆனைக்கும் அடிசறுக்கும் என்றும் கூறலாம்.

   பச்சோந்தி மீன்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்கமாட்டேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete

 2. இந்த மாபெரும் வர்த்தகச் சறுக்கல்களைப் படிக்கும்போது WHEN OPPORTUNITY KNOCKS AT THE DOOR , DO NOT COMPLAIN ABOUT THE NOISE என்னும் அறிவுரை நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   சந்தர்ப்பம் வாசல் கதவை தட்டினால் அதைப் பிரச்சனையாக எண்ணி ஒதுங்குபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். நான் கூட செய்திருக்கலாம்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 3. மின்மினி மீன்களும் பச்சோந்தி மீன்களும் வியக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் !

   இயற்கை எப்பொழுதுமே நம்மை வியக்க வைக்கிறது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. மாபெரும் வர்த்தக சறுக்கல்கள் – அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். அதற்கு சரியான எடுத்துக் காட்டுகள். ஏழையாகவே இறந்த எட்வின் ட்ரேக் உண்மையிலேயே துரதிர்ஷடசாலிதான். வீடியோவை பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. அனைத்துமே அற்புதமான தகவல்கள். நவீன யுக பில்கேட்சிலிருந்து ஸ்டீவ் வரையிலும் இளமையில் புறக்கணிக்கப்பட்டவர்கள்தான். இந்த நூற்றாண்டின் இரண்டு மிகச் சிறந்த படைப்பாளிகள் இவர்கள் என்றால் மிகையாகாது. என்னுடைய நாற்பதாண்டு கால நகர வாழ்க்கையில் காணக்கிடைக்காத மின்மினி பூச்சிகளை இப்போது வசிக்கும் இடத்தில் தினமும் கண்டு மகிழ்கிறேன்.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   மின்மினிப்பூச்சிகள் அதிசயம்தான். இப்பொழுதாவது அனுபவிக்கக் கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.

   பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்-ஐப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. பாவம் எட்வின். :(

  ஹூம்! :(

  பீட்டிலுக்கு அடிச்சது பிரைஸ்!

  மைக்ரோசாஃப்ட் சாதனை

  ஆப்பிள் ஆப்பிள் தான். :)  தவற விட்ட பெல்!

  //1803-ல் அமெரிக்காவில் பாதிக்கு மேல் ஃப்ரான்ஸ் வசம் இருந்த்து. அதை நெப்போலியன் 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுவிட்டார்.//

  யாருக்கு????


  நான் கூடத் தவற விட்டிருப்பேன். :( போகட்டும் அனைத்துமே பாடம் கற்றுக் கொடுக்கும் செய்திகள். சாக்ரடீஸ் பற்றிய இந்தச் செய்தியைப் படித்திருக்கிறேன். பச்சோந்தி மீனை இன்னும் பார்க்கலை. பார்க்கணும்.

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி. கீதா சாம்பசிவம்.

  மறக்காமல் காணொளியைக் காணுங்கள். நிச்சயம் நேர விரயமல்ல.

  அப்பொழுது அமெரிக்க பிரசிடெண்ட் தாமஸ் ஜெப்ரிசன் என்பவர், அமெரிக்காவுக்காக எதிர்ப்பையும் மீறி வாங்கினார்.

  வாழ்க்கையில் நாம் தவற விட்டிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நமக்கு என்னவென்று முன்னமேயே எழுதிவைக்கப்பட்டுள்ளது. எனவே எல்லாம் நன்மைக்கே.

  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்

  ReplyDelete