பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, November 28, 2013

கதம்பம்-16

சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-7

மனிதனின் வளர்ச்சி நிலைகள்:

முன்பே கூறியதைப்போல ஃப்ராய்டைப் பொறுத்தவரை, மனித சமுதாயத்தின் முக்கியமான உந்துசக்தி பாலுணர்வே ஆகும். வாலிபப் பருவத்தின் முன்பான விடலைப் பருவம், மற்றும் பச்சிளம் பருவம் என்று அனைத்து பருவத்துக்கும், உண்மையான உந்துசக்தி பாலுணர்வே என்று ஃப்ராய்ட் நம்புகிறார். பருவ வயதினர்களைப் பற்றிய பாலுணர்வு கருத்துக்களை, அறிவியளாலர்கள்கூட வெளிப்படையாக பேசிக்கொள்ளாத காலகட்டத்தில், வியன்னாவில் பச்சிளம் பருவத்தின் பாலுணர்வு தூண்டுதல்களைப் பற்றி அறிவித்து அனைவரையும் ஃப்ராய்ட் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அறிவியலின்படி, உடல்சேர்க்கையின்பொழுது ஏற்படும் மனக்கிளர்ச்சி மனிதன் பிறந்ததுமுதல் இருக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும் ஃப்ராய்ட் அதனைப் பற்றி கூறவில்லை. ஃப்ராய்டின் கூற்றுப்படி பாலுணர்வு என்பது, உடல் சேர்க்கையை மட்டும் சார்ந்தது கிடையாது. தொடு உணர்ச்சி சார்ந்த அனைத்து, இன்பமளிக்கும் உணர்வுகளையும் பாலுணர்வு என்று அவர் குறிப்பிடுகிறார். அணைத்துக்கொள்ளுதல், முத்தமிடுதல், ஸ்பரிசம் போன்ற அனைத்தும், குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று அனைத்து பிரிவினருக்கும் இன்பமளிக்கக் கூடியதுதான் என்று எவரும் ஒத்துக்கொள்வர்.

ஃப்ராய்ட் மனிதனின் வளரும் பருவங்களில் ஒவ்வொரு பருவத்தின் பொழுதும், தோலில் இன்பத்தை அளிக்கும் பகுதி மாறுபடுகிறது என்று கூறுகிறார். ஃப்ராய்டுக்கும் பின்பு வந்த அறிவியளாலர்கள் இதனை கிளர்ச்சியூட்டும் பகுதிகள் என்று குறிப்பிடுகின்றனர்.

பிறந்ததுமுதல் பதினெட்டு மாதங்கள் வரை உள்ள பருவத்தை முதல் நிலை என்று ஃப்ராய்ட் கூறுகிறார். அந்தப் பருவத்தில் வாயின் வழியே குழந்தைகள் இன்பத்தை விரும்புகின்றன என்கிறார். பதினெட்டு மாதங்கள் முதல் நான்கு வயதுவரை அடுத்த நிலை என்று ஒவ்வொன்றாக ஃப்ராய்ட் வகைப்படுத்தி, இறுதியாக இனப்பெருக்கத்திற்கான சேர்க்கைநிலை என்று கூறுகிறார்.

 

மனிதனின் குணங்கள்  :

ஃப்ராய்டின் கூற்றுப்படி இளம்பிராயத்தில் ஏற்படும் அனுபவங்களே ஒருவருடைய குணநலன் களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இளம் பிராயத்தில் ஏற்படும் அதிர்ச்சியளிக்கும் அனுபவங்கள் அவர்களுடைய குணங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகளும் அதனுடைய தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மனிதனுடைய வளரும் நிலைகள் அனைவருக்கும் பொதுவானதால், அத்தகைய தாக்கங்களில், அனைவருக்கும் ஒரு பொருத்தமான இசைவு இருப்பதைக் காணமுடிகிறது.

வளரும் நிலைகளில் இயல்புக்கு மாறான அனுபவங்கள் அமையப்பெற்றவர்கள், சில குறிப்பிடத்தக்க பிரச்சனைக்குறிய குணங்களைப் பெற்றிருப்பார்கள். அத்தகைய குணங்களை Fixation, Obsession அதாவது ஆட்டிப்படைக்கும் தன்மையுடைய குணங்கள் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

மழலைப் பருவத்தில் பால்குடிக்கும் அனுபவத்தைப் போதுமான அளவு பெறாதவர்கள் மந்தமான வாய் உணர்வு பெற்றவர்களாக இருப்பார்கள் என்று ஃப்ராய்ட் கூறுகிறார். அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் அடுத்தவர்களை சார்ந்திருப்பர். மற்றும் புகை, குடி போன்ற பழக்கங்களும் கொண்டவர்களாக இருக்கக்கூடும் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். அவர்கள் மழலைப்பருவத்தில் இழந்த இன்பத்தைத் தேடுவதாக கூறுகிறார்.

இதனைப்போலவே பல் முளைக்கும் பருவத்தில் கடித்துப் பழகும் இன்பத்தை இழந்தவர்கள் ஆக்ரோஷமான வாய் உணர்வு பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும் ஃப்ராய்ட் கூறுகிறார். அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு பேனா, பென்சிலைக் கடிப்பது போன்ற பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்றும் ஃப்ராய்ட் கூறுகிறார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப ஒரு முனைக்குத் தள்ளப்பட்டவர்கள் தீவிரமாக எதிர் நிலைக்கு மாறிவிடவும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட அதிர்ச்சிக்கு ஆளானவர்களுக்கு அதன் விளைவாக சில குறிப்பிடப்பட்ட குணங்கள் தோன்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளது. அல்லது அதற்கு எதிர் மாறாகவும் குணங்கள் தோன்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அறிவியலாளர்களுக்கு ஒரு திடமான பாதையை சரியென்று தேர்ந்தெடுப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் எப்பொழுதுமே, இதுவே இயற்கையின் குணமாக அமைந்துவிடுகிறது.

--- தொடரும்.
ப்ளாட்டோவின் பொன்மொழிகள் :


நல்ல வேலைக்காரனாக இல்லாதவனால், நல்ல முதலாளியாகவும் இருக்க முடியாது.

தேவையே புதிய படைப்புகளுக்கு தாயாகிறது.

சிறிய கற்களின் உதவியின்றி பெரிய கற்கள் நிற்பதில்லை.

மௌனம் சம்மதமாகும்

நற்செயல்கள் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது; ஏனையவர்களுக்கு அது நற்செயல் புரிய தூண்டுகோலாகிறது.

அரசியலில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கான தண்டனை, அவர்களைவிட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவதே.

அறியாமையே அனைத்து பாவங்களுக்கும் வேராகிறது.

நல்லவர்கள் நேர்மையாக, பொறுப்புடன் நடந்துகொள்ள சட்டம் தேவையில்லை; தீயவர்களுக்கு சட்டம் இருந்தும் பயனில்லை.

வெற்றிகளிலேயே பிரதானமான வெற்றி, தன்னைத்தானே வெற்றி கொள்வதேயாகும்.

மரணமடைந்தவர்களே போரின் முடிவுவரை பார்த்திருப்பார்கள்.

 

 
 
 

9 comments:

 1. //வளரும் நிலைகளில் இயல்புக்கு மாறான அனுபவங்கள் அமையப்பெற்றவர்கள், சில குறிப்பிடத்தக்க பிரச்சனைக்குறிய குணங்களைப் பெற்றிருப்பார்கள். அத்தகைய குணங்களை Fixation, Obsession அதாவது ஆட்டிப்படைக்கும் தன்மையுடைய குணங்கள் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.//

  திரு சிக்மண்ட் ஃப்ராய்ட் கொடுத்துள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டின் மூலம், நாம் பிறரிடம், ஏன் நம்மிடையே காணுகின்ற குணாதிசயங்களுக்காண இதுவரை தெரியாத காரணத்தை சரியாக சொல்லியிருக்கிறார். அவரது கணிப்பு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

  மனித வளர்ச்சியின் அடுத்த நிலைகள் பற்றிய அவரது கருத்துக்களை அறிய காத்திருக்கிறேன்.

  ப்ளாட்டோவின் பொன்மொழிகள் அனைத்தும் அருமை. அதிலும் ‘நல்லவர்கள் நேர்மையாக, பொறுப்புடன் நடந்துகொள்ள சட்டம் தேவையில்லை; தீயவர்களுக்கு சட்டம் இருந்தும் பயனில்லை.’ என்பது எக்காலத்துக்கும் பொருந்தும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   ஃப்ராய்டின் கருத்துக்களுக்கு இன்று எந்த அளவுக்கு எதிர் கருத்துக்கள் வந்திருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இந்த அளவுக்கு கூறியுள்ளது ஆச்சரியத்தை அளிப்பது உண்மைதான்.
   ஆமாம், ப்ளாட்டோவின் கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ப்ளாட்டோவுக்கு முன்பே தமிழிலும், இதே கருத்துக்கள் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. ஃப்ராய்டின் அவர்களின் மனிதனின் குணங்கள் உண்மை என்றே தோன்றுகிறது... சூழ்நிலைக்கேற்ப மாறும் என்றும் தோன்றுகிறது...

  பொன்மொழிகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   ஃப்ராய்டின் கருத்துக்களுக்கு இன்று எந்த அளவுக்கு எதிர் கருத்துக்கள் வந்திருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இந்த அளவுக்கு கூறியுள்ளது ஆச்சரியத்தை அளிப்பது உண்மைதான்.
   ஆமாம், ப்ளாட்டோவின் கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ப்ளாட்டோவுக்கு முன்பே தமிழிலும், இதே கருத்துக்கள் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. // சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப ஒரு முனைக்குத் தள்ளப்பட்டவர்கள் தீவிரமாக எதிர் நிலைக்கு மாறிவிடவும் வாய்ப்புள்ளது. //

  தீவிர ஆத்திகன் பின்னாளில் நாத்திகனாக மாறுவதும், தீவிர நாத்திகன் பின்னாளில் ஆத்திகனாக மாறுவதற்கும் இதுவே காரணம்.

  // அரசியலில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கான தண்டனை, அவர்களைவிட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவதே.//

  நல்லாத்தான் சொன்னார் நம்ம பிளேட்டோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   ப்ளாட்டோ கூறியிருக்கும் தண்டனையை நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருப்பதால், பொருத்திப்பார்ப்பது சுலபமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்திருந்தால் அரசியலில் முயற்சியாவது செய்துபார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் மலிந்துவரும் இன்றைய சூழலில் இந்த பகுதி மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆண்-பெண் இருபாலாருக்கிடையில் ஏற்படும் இத்தகைய உணர்வுகள் காலந்தொட்டு இருந்து வருபவைதான் அல்லவா? ஆனால் அதை வளர்ந்துவரும் நாகரீகம் எந்த அளவுக்கு கட்டுக்குள் வைத்துக்கொள்வது என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆனாலும் சில சமயங்களில் வயது பேதம் பாராமல், உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களும் கூட நிதானம் தவறுவது வாடிக்கையாகி வருகிறது. அறியாமை அனைத்து பாவங்களுக்கும் வேராகிறது என்பதை படிக்கும்போது இந்த பாவ புண்ணியங்களை வகுத்தவர் யார் என்கிற கேள்வியும் எழுகிறது. திருடுவது பாவம் என்றால் அது ஏன் திருடனுக்கு தெரிவதில்லை. காமம் பாவம் என்றால் அது ஏன் காமுகனுக்கு தெரிவதில்லை. ஆக, ஒருவனுக்கு பாவம் என்பது இன்னொருவனுக்கு அப்படி தெரிவதில்லை. புண்ணியமும் அப்படித்தான். எல்லாமே அவரவர் மனநிலையைப் பொருத்ததுதான் போலிருக்கிறது. இத்தகைய சிந்தனைகளை தூண்டிவிடும் பதிவுகள் அதிகம் வரவேண்டும். இத்தகைய புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன என்பதால் உங்களைப் போல் அதை அழகாக மொழிமாற்றம் செய்யத்தான் இங்கு ஆட்கள் தேவைப்படுகிறது! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   சில சமயங்களில் நடக்கும் குற்றங்களைப் படிக்கும் பொழுது, உலகம் அழிந்துவிட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது. டைனசோர் அழிந்ததுபோல மனித குலத்துக்கு ஏதாவது நேருமென்று நினைக்கிறேன். இன்றைய கால கட்டத்தில் ஒருவருக்கு ஒரு செயல் அவருடைய நாட்டில் சட்டப்படி தவறு என்று இருந்தால், அவர் எந்த நாட்டில் அது தவறாக இல்லையோ அங்கு சென்று அந்த செயலை செய்யலாம். அதனால், தாங்கள் கூறுவதுபோல தவறு என்பது ஒருவருடைய கண்ணோட்டத்திலதான் உள்ளது.
   தமிழால் ஆங்கிலத்தை எட்டமுடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. வரும் தலைமுறையினர்களில் அதிக சதவிகிதம் ஆங்கில மொழியில்தான் படிக்கிறார்கள். படிக்க விருப்பப்படுகிறார்கள். செலவு செய்ய முடியாதவர்கள் மட்டுமே தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். முடிந்தவர்கள், ஒவ்வொருவரும் ஒரு நூலையாவது தமிழில் மொழிபெயர்த்தால் தமிழுக்கு நல்லது என்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. பதவி நன்கு உள்ளது. மிகவும் ரசித்தேன்

  ReplyDelete