முதல் ஆலோசனை அமர்வு முடிந்தபிறகு,
ஆலோசகர் மாண்டிக்கு ஒரு வேலையை செய்யுமாறு பணித்தார். ஒவ்வொருமுறை நகம் கடிக்க
வேண்டுமென்று விரல்களில் பதற்றம் ஏற்பட்டதும் அவற்றை கொடுக்கப்பட்டிருக்கும்
கார்டுகளில் குறித்து வைக்குமாறு கூறினார். மறுவாரம் மாண்டி ஆலோசனைக்கு வந்தபொழுது
மாண்டி 28 கார்டுகளில் குறித்து வைத்துள்ளதாகக் கூறினார். அப்படிக் கூறும்பொழுது,
விரல்களில் பதற்றம் ஏற்பட்டவுடன் தான் நகம் கடிக்க ஆரம்பித்துவிடுவதை அவள்
உணர்ந்திருப்பது தெரிந்தது. மேலும் வாரத்துக்கு எத்தனை முறை நகம்
கடித்திருக்கிறாள் என்பதற்கான விபரங்களும் அவளிடம் இருந்தது.
இரண்டாவது அமர்வில் “எதிர்க்கும்
வினை” ஒன்றினை ஆலோசகர் மாண்டிக்கு பயிற்சியாக அளித்தார். எப்பொழுதெல்லாம்,
விரல்களில் நகம் கடிக்கவேண்டும் என்ற பதற்றம் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் உடனே
கைகளுக்கு வேறு வேலை கொடுக்கவேண்டும். கைகளை பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ளலாம்.
அல்லது பென்சிலைக் கையில் எடுத்துக்கொள்ளலாம். நகங்களைக் கடிப்பதற்கான
சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடவேண்டும். உடனே கரங்களுக்கு ஏதாவது வேலை
கொடுக்கவேண்டும். கரங்களைத் தடவிக்கொடுப்பதோ, நெட்டி முறிப்பதோ என்று ஏதாவது
வேலையைத் தரவேண்டும் என்று ஆலோசகர் பரிந்துரைத்தார்.
துப்புகளையும், வெகுமதிகளையும்
மாறாமல் வைத்துக்கொண்டு செயல்முறையைமட்டும் மாற்றுவதற்கு அவர் பரிந்துரைத்தார்.
இரண்டாவது அமர்வு முடிந்தபொழுது,
ஆலோசகர் மாண்டிக்கு, மற்றுமொரு வேலையையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதாவது
விரல்களில் பதற்றம் ஏற்படும்பொழுது கொடுக்கப்படும் கார்டுகளில்
குறித்துக்கொள்வதுடன், எதிர்க்கும் வினையினை உபயோகித்து ஒவ்வொரு முறை
வெற்றிகொள்ளும் பொழுதும், அவற்றையும் ஒரு கார்டில் பதிந்துகொள்ளும்படி அவர்
கேட்டுக்கொண்டார்.
ஒரு வாரம் கழித்து, அடுத்த ஆலோசனை
அமர்வுக்கு வந்தபொழுது, பத்துமுறை விரல்களில் பதற்றம் ஏற்பட்டதற்கு, மாண்டி மூன்று
முறை மட்டுமே நகம் கடித்திருப்பது தெரியவந்தது. அதாவது பத்துக்கு ஏழு என்ற
விகித்த்தில் மாண்டி தற்சமயம் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டிருக்கிறார்.
அப்படி மீண்டதற்காக, அவர் அழகு நிலையத்துக்குச் சென்று நகப்பூச்சு
செய்துகொண்டார். அதை அவருக்கு வெகுமதியாக
அளித்துக்கொண்டார். இப்படியாக ஓரிரு மாதங்களில் அவர் நகம் கடிக்கும்
பழக்கத்திலிருந்து முழுவதும் மீண்டுவிட்டார். மாண்டியினுடைய எதிர்க்கும் வினை,
இப்பொழுது தன்னிச்சையான செயலாகிவிட்டது. அவருடைய நகம் கடிக்கும் பழக்கம் இன்னொரு
பழக்கமாக மாறிவிட்டது.
“ஒரு பழக்கம் உருவாவதற்கான
தூண்டுகோலையும் மற்றும் வெகுமதியையும் புரிந்துகொண்டுவிட்டாலே, அது கிட்டத்தட்ட
பாதியளவு பழக்கத்தை மாற்றிவிட்டது போன்றதாகும்” என்று பழக்க மாற்று நிபுணர் நேதன் அஸ்ரின் கூறுகிறார். “இது மிகவும் கடுமையானதாகத் தோன்றும். ஆனால் உண்மையில்
மூளையில் பதிந்தவைகளை நம்மால் மாற்ற முடியும். நாம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத்
தேவையான செயல்களை மேற்கொண்டாகவேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.
இன்று பழக்க மாற்ற ஆலோசனைகளும்,
பயிற்சிகளும் உடலில் நடுக்கங்கள், மன அழுத்தம், மன உளைச்சல், புகைப்பழக்கம்,
சூதாட்டப்பிரச்சனைகள், உறக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மனதை
அலைக்கழிக்கும் சீர்கேடுகள் மற்றும் பிற நடத்தைப் பிரச்சனைகளையும் குணப்படுத்தப்
பயன்படுகிறது. இதற்கான நுட்பங்கள், பழக்கங்கள் உருவாவதற்கான அடிப்படைகளை
உபயோகித்து வரையறுக்கப்பட்டுள்ளன. உண்மையில் பழக்கம் ஏன் உண்டானது என்று
ஆராய்வதற்கு முன், சில குறிப்பிட்ட தூண்டுதல்களால்தான் அவை ஆரம்பமானது என்று நாம்
அறிவதில்லை. கைகளில் ஏற்படும் பதற்றம்தான் நகம் கடிக்கத் தூண்டியதை மாண்டியும்
உணரவில்லை. அந்தப் பதற்றத்துக்கு எதிர்வினையை செயல்படுத்தியதால்தான் அவளால் அந்தப்
பழக்கத்திலிருந்து மீளமுடிந்த்து.
வேலை நேரத்தில் ஏதாவது
நொறுக்குத்தீனி சாப்பிட விரும்புகிறீர்கள். ஏன்? ஒரே வேலையை தொடர்ச்சியாக
செய்வதனால், வேலையில் விருப்பம் குறைவதனாலா? இல்லை பசியினாலா? முதலாவது காரணம்
எனறால், அந்த நேரத்தில் வேறு ஏதாவது செய்ய முயலுங்கள். யாரிடமாவது பேசுங்கள்.
சிறிய நடையினை மேற்கொள்ளுங்கள். அந்த நேரத்தில், சரியாக திசை திருப்பும்வகையில்
ஏதாவது செய்யுங்கள். நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்திலிருந்து வெளிவர அதுவே
முதல்படி.
நீங்கள் புகைப்பிடிக்கும்
பழக்கத்தை நிறுத்த விரும்பினால், உங்களை நீங்களே இந்தக் கேள்விகளைக்
கேட்டுப்பாருங்கள். நீங்கள் நிக்கோட்டினை விரும்புவதனால் புகைப்பிடிக்கிறீர்களா?
ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதனால் புகைப்பிடிக்கிறீர்களா? நேரத்தை நிரப்பப்
புகைக்கிறீர்களா? அல்லது அடுத்தவர்களுடன் பழகுவதற்காக புகைக்கிறீர்களா? புகைப்பவர்களிடம்
மேற்கண்ட டஜனுக்கு மேற்பட்ட சோதனைகளில், புகைத்தலுக்கான தூண்டுகோலையும்,
வெகுமதியையும் கண்டுகொண்டு சரியான எதிர்வினைகளைக் கொண்டு அவர்களால் அந்தப் பழக்கத்திலிருந்து
வெளியேற முடிந்தது தெரியவந்துள்ளது.
தூண்டுகோல்களையும் வெகுமதிகளையும்
சரியாகக் கண்டுகொண்டு, செயல்முறையை மட்டும் மாற்றுவதன்மூலம் நாம் பழக்க மாற்றத்தை
ஏற்படுத்த முடியும். ஆமாம். குறைந்தபட்சம் அதிகமான பழக்க மாற்றங்களுக்கு சாத்தியம்
என்றாவது இப்பொழுது குறிப்பிடமுடியும். இருந்தாலும், இத்தகைய பழக்க மாற்றங்களுக்கு
நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது.
- தொடரும்
கண்டு வியக்க காணொளிகள்:
மீன் துடிப்பதை காண
சகிக்காத ஒரு உயிர்.
செஞ்சோற்றுக்கடன்.
//தூண்டுகோல்களையும் வெகுமதிகளையும் சரியாகக் கண்டுகொண்டு, செயல்முறையை மட்டும் மாற்றுவதன் மூலம் நாம் பழக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.//
ReplyDeleteஇது முடியும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் எனது நண்பர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கவேண்டும் என்று எண்ணம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு சாக்லெட்டை எடுத்து சுவைப்பார். அதுபோல் ஆரம்பித்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினார். ஆனால் இப்போது சாலேட் சாப்பிடும் பழக்கம் தொற்றிக்கொண்டதா எனத்தெரியவில்லை.
நீங்கள் கூறியதுபோல் இத்தகைய பழக்க மாற்றங்களுக்கு நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது என்பது நூற்றுக்கு நூறு சரியே.
இரண்டு காணொளிகளையும் கண்டேன். முதல் காணொளியில் அந்த நாய் மீன்களுக்கு தண்ணீரை நாவால் இறைத்து உயிரூட்ட முயற்சிப்பதையும், இரண்டாவது காணொளியில் அந்த நாய்கள் தங்கள் எஜமானை காப்பாற்ற எதிரியை துரத்தி கடிப்பதையும் கண்டு வியந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteஎன்னுடைய உயர் அதிகாரி ஒருவர் சிகரெட் பழக்கத்தை விட்டுவிட பாக்கு சாப்பிடும் பழக்கத்துக்கு மாறினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டு பழக்கத்தையும் கொண்டிருந்தார்.
செய்து முடிக்கவேண்டும் என்று கருமமே கண்ணாக இல்லாதவர்களுக்கு எதுவும் சாத்தியம் கிடையாதுதான்.
சிமெண்ட் தரையில் மீன் மூக்கால் தண்ணீரை சேந்துவது, பார்ப்பதற்கு எனக்கே வலிக்கிறது!
இயற்கையின் படைப்பில் ஏகப்பட்ட விந்தைகள்!
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
வேலை நேரத்தில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட விரும்புகிறீர்கள். ஏன்? ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்வதனால், வேலையில் விருப்பம் குறைவதனாலா? இல்லை பசியினாலா? //
ReplyDeleteபழக்க வழக்கங்கள் குறித்தும் அதனை மாற்றும் வழிகள் குறித்தும்
பகிர்ந்தது பயனுள்ளது. நன்றி.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி. உமையாள் காயத்ரி.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
//பழக்க மாற்றங்களுக்கு நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது//
ReplyDeleteஅருமை நண்பரே
தம 1
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
தூண்டுகோல்களையும் வெகுமதிகளையும் சரியாகக் கண்டுகொண்டு, செயல்முறையை மட்டும் மாற்றுவதன்மூலம் நாம் பழக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.//
ReplyDeleteஉண்மைதான். ஆனால் அவற்றை இனம் கண்டுக்கொள்வது அத்தனை எளிதல்ல. பலருக்கும் எதற்காக அல்லது எப்படி/எப்போதிலிருந்து இந்த பழக்கங்கள் தங்களுக்கு ஏற்பட்டன என்பதே தெரிவதில்லையே... குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன என்னுடைய சில நண்பர்கள் சில காலம் தொடர்ந்து குடிக்காமலே இருப்பார்கள். பிறகு திடீரென்று தொடர்ந்து சில தினங்கள் குடிப்பார்கள். அதாவது தன்னை மறந்த நிலையை எட்டும் வரையில் குடிப்பார்கள். ஏன் அவர்களுக்கே தெரிவதில்லை. என்னமோ குடிக்கணும்னு தோன்றியது என்பார்கள். இதே போன்றுதான் என் மனைவியின் நகம் கடிக்கும் பழக்கமும். தன்னையும் அறியாமல் உறக்கத்தில் கூட செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் பகல் பொழுதில் அவர்கள் நகம் கடித்து நான் பார்த்ததே இல்லை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteஎன்னுடைய அலுவலகத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சக பொறியியலாளர் இருக்கிறார். அவருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. அவருடைய அம்மாவிடமிருந்து மரபு வழி அவருக்கு அந்தப்பழக்கம் வந்துவிட்டது என்றார். சில காலங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்ததாம். அப்பொழுது அவ்ருடைய நகம் கடிக்கும் முற்றிலுமாக நீங்கியிருந்ததாம். இப்பொழுது திரும்பவும் வந்துவிட்டது என் கிறார். அவர் நினைத்தாலும் விடமுடியவில்லை.
மூன்றாம் மனிதருக்கு வேண்டுமென்றே நகம் கடிப்பதுபோல தோன்றினாலும் அவரைப் பார்த்தால் எனக்கு பரிதாபமாகத்தான் இருக்கிறது. மதுவுக்கு அடிமையாவதும் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது.
எனக்குத் தெரிந்தவரை பிறப்பிலேயே வருபவைகளை மாற்றுவதென்பது மிகவும் கடினம். அதற்கு அதிகமான டிடர்மினேஷன் வேண்டும்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்